இந்தியாவில் நிசான் நிறுவனம் 2026 ஆம் ஆண்டில் மொத்தமாக 3 கார்களை வெளியிட திட்டமிட்டுள்ள நிலையில், முதல் மாடலாக டெக்டான் , இரண்டாவது மாடல் 7 இருக்கை கொண்ட B-MPV ஆகவும், இறுதியாக 7 இருக்கை டெக்டான் ஆகியவை சந்தைக்கு வரவுள்ளது.
தனது புதிய காம்பாக்ட் எம்பிவி காரை வரும் டிசம்பர் 18, 2025 அன்று உலகளாவிய அளவில் அறிமுகப்படுத்தவுள்ளது. ஏற்கனவே, சந்தையில் அமோக வரவேற்பினை பெற்று இந்தியா மட்டுமல்லாமல் பல்வேறு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் மேக்னைட் போல இந்த மாடலும் சென்னையில் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்ய நிசான் திட்டமிட்டுள்ளது.
ரெனால்ட் நிறுவனத்தின் குறைந்த விலை 7 இருக்கை ‘ட்ரைபர்‘ மாடலை அடிப்படையாகக் கொண்டு இரண்டு நிறுவனங்களும் கூட்டணியில் உள்ள ‘CMF-A’ பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட உள்ளது. ட்ரைபரில் உள்ள அதே 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் முக்கிய உதிரிபாகங்கள் இதிலும் பயன்படுத்தப்படும். ஆனால், வெளிப்புறத் தோற்றம் மற்றும் வடிவமைப்பு முற்றிலும் மாறுபட்டு, நிசானுக்கே உரிய தனித்துவமான முகப்புத் தோற்றத்துடன் வரக்கூடும், கூடுதலாக இந்த மாடல் டர்போ பெட்ரோல் வருமா .? என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
நடுத்தர வர்க்கக் குடும்பங்களை குறிவைத்து, மலிவான விலையில் 7 பேர் அமர்ந்து செல்லும் வகையில் இது வடிவமைக்கப்பட உள்ள இந்த எம்பிவி பாதுகாப்பு சார்ந்த அம்சங்களில் மிகுந்த கவனத்தை நிசான் செலுத்தும் என்பதனால் இதன் விலை சுமார் 6 லட்சம் முதல் 9 லட்சம் ரூபாய் வரை (எக்ஸ்-ஷோரூம்) நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிசம்பர் 18 ஆம் தேதி பெயர், டிசைன் ஆகியவை அறிவிக்கப்பட்டு விற்பனைக்கு அடுத்த மூன்று முதல் 6 மாதங்களில் கிடைக்கலாம்.