ஜியோ-ஏர்டெல் அலறல்.. BSNLன் இந்த ஒரு பிளான் போதும்.. டேட்டா மழையில் நனையலாம்!

BSNL New Year Offer 2026: தனியார் நிறுவனங்களின் ரீசார்ஜ் கட்டண உயர்வால் தவிக்கும் மக்களுக்கு, பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் (BSNL) ஒரு இனிப்பான செய்தியை வழங்கியுள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு, தனது தேர்ந்தெடுக்கப்பட்ட ரீசார்ஜ் திட்டங்களில் தினசரி டேட்டா வரம்பை (Daily Data Limit) அதிரடியாக அதிகரித்துள்ளது.

Add Zee News as a Preferred Source

சலுகை காலம் எவ்வளவு?

இந்தச் சிறப்பு சலுகை டிசம்பர் 31, 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். இந்தத் தேதிக்குள் ரீசார்ஜ் செய்யும் பயனர்கள், சலுகைக் காலம் முடியும் வரை (ஜனவரி 31, 2026 வரை அல்ல, திட்டத்தின் வேலிடிட்டி முடியும் வரை) கூடுதல் டேட்டாவைப் பெறலாம்.

கூடுதல் டேட்டா விவரங்கள்:

திட்டத்தைப் பொறுத்து தினசரி 500MB முதல் 1GB வரை கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது. அந்த 4 முக்கிய திட்டங்கள் இதோ:

திட்டம் (ரூபாய்)
வேலிடிட்டி (நாட்கள்)
பழைய டேட்டா (ஒரு நாளைக்கு)
புதிய டேட்டா (சலுகையில்)
இதர நன்மைகள்
ரூபாய் 225
28 நாட்கள்
2.5 GB
3 GB
அன்லிமிடெட் கால்ஸ், 100 SMS
ரூபாய் 347
50 நாட்கள்
2 GB
3 GB
அன்லிமிடெட் கால்ஸ், 100 SMS
ரூபாய் 485
72 நாட்கள்
2 GB
3 GB
அன்லிமிடெட் கால்ஸ், 100 SMS
ரூபாய் 2399
365 நாட்கள்
2 GB
3 GB
அன்லிமிடெட் கால்ஸ், 100 SMS

Don’t Miss Out – Don’t Miss Out – Add Extra Joy to Your Christmas with BSNL!

Enjoy 2.5 GB/day (up from 2 GB) on our most popular plans – ₹347, ₹485, and ₹2399.

Stay connected with high-speed data, unlimited calls, and seamless browsing.

Offer Valid: 24th Dec 2025 – 31st… pic.twitter.com/WULEgcxzZ5

— BSNL India (@BSNLCorporate) December 24, 2025

 

திட்டங்களின் சிறப்பம்சங்கள்:

குறுகிய காலத் திட்டம் (ரூபாய் 225): 28 நாட்களுக்கு தினசரி 3GB டேட்டா கிடைக்கிறது. இது குறுகிய காலத்தில் அதிக டேட்டா தேவைப்படுபவர்களுக்கு ஏற்றது.

நடுத்தர காலத் திட்டங்கள் (ரூபாய் 347 மற்றும் ரூபாய் 485): இதுவரை 2GB டேட்டா பெற்று வந்த வாடிக்கையாளர்கள், இனி 50 மற்றும் 72 நாட்களுக்கு தினமும் 3GB டேட்டாவை அனுபவிக்கலாம்.

ஆண்டுத் திட்டம் (ரூபாய் 2399): இந்தச் சலுகையின் “மாஸ்டர் பிளான்” இதுதான். டிசம்பர் 31-க்குள் ரீசார்ஜ் செய்தால், ஒரு வருடம் முழுவதும் (365 நாட்களுக்கு) தினமும் 1GB கூடுதல் டேட்டா, அதாவது தினமும் மொத்தம் 3GB டேட்டா கிடைக்கும்.

பிஎஸ்என்எல் தனது அதிகாரப்பூர்வ ‘X’ (ட்விட்டர்) தளத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதிக டேட்டா தேவைப்படும் ஆன்லைன் வேலை செய்பவர்களுக்கும், பொழுதுபோக்கு பிரியர்களுக்கும் இது ஒரு பொன்னான வாய்ப்பு.

About the Author


Vijaya Lakshmi

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.