Arvind Swamy: "ஒன்றரை வருடம் மிகுந்த வலியுடன் படுக்கையில் கிடந்தேன்" – அரவிந்த் சுவாமி

விஜய் சேதுபதி, அரவிந்த் சுவாமி நடித்திருக்கும் ‘காந்தி டாக்ஸ்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது.

2005-ம் ஆண்டுக்குப் பிறகு அரவிந்த் சுவாமி சில ஆண்டுகள் சினிமாவிலிருந்து விலகியிருந்தார்.

Arvind Swami
Arvind Swami

அப்போது இவருக்கு விபத்து ஏற்பட்டிருந்தது. அதன் காரணமாகத்தான் அவர் சினிமாவிலிருந்து விலகியிருந்தார்.

அந்த விபத்து குறித்தும், அதற்கு இவர் எடுத்துக்கொண்ட மருத்துவம் குறித்தும் மெல்போர்னில் நடைபெற்ற இந்தியத் திரைப்பட விழாவில் பேசியிருக்கிறார் அரவிந்த் சுவாமி.

அவர் பேசுகையில், “2005-ல் எனக்கு ஏற்பட்ட காயத்தால் ஒன்றரை வருடம் மிகுந்த வலியுடன் படுக்கையில் கிடந்தேன். அறுவை சிகிச்சை செய்ய வேண்டாம் என்று நான் தேர்ந்தெடுத்ததால்தான் இவ்வளவு நாட்கள் வலியில் இருந்தேன்.

அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்து, அதற்கு ஒப்புக்கொண்ட நேரத்தில், கேரளாவைச் சேர்ந்த ஒரு ஆயுர்வேத மருத்துவரைச் சந்தித்தேன்.

என்னைச் சுற்றி எப்போதும் அலோபதி மருத்துவ நம்பிக்கையாளர்களே இருந்ததால், ஆயுர்வேதத்தை ஒருபோதும் விருப்பமாகக் கொள்ளவில்லை.

அர்விந்த் சுவாமி
அர்விந்த் சுவாமி

ஆனால், அந்த ஆயுர்வேத மருத்துவரிடம் சிகிச்சை தொடங்கிய மூன்று நாட்களிலேயே நான் நடக்கத் தொடங்கினேன்.

எனக்கு இது வேலை செய்தது. ஆனால், இதை எல்லோரும் செய்ய வேண்டும் என்று நான் சொல்லவில்லை. என்னுடைய தனிப்பட்ட அனுபவம் மட்டுமே இது. உங்களுக்கு மருத்துவர்கள் கொடுக்கும் அறிவுரையைப் பின்பற்றுங்கள்.

ஆயுர்வேதத்தில் பழங்கால ஞானம் இருக்கிறது. அது எனக்கு உதவியது. அதேபோல் அலோபதி மருத்துவத்திலும் பெரும் ஞானம் உள்ளது. அது எனக்கு பலமுறை உதவியிருக்கிறது” எனக் கூறியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.