இந்த ஒரு காரணத்திற்காக சஞ்சு சாம்சனை நீக்க முடியாது! ஏன் தெரியுமா?

வரும் பிப்ரவரி 7ஆம் தேதி டி20 உலக கோப்பை தொடங்குகிறது. முதல் போட்டியில் இந்திய அணி அமெரிக்காவை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் மும்பையில் உள்ள புகழ் பெற்ற வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. சமீபத்தில் இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்த தொடரை சிறப்பாக வென்று இருந்தாலும், இந்திய அணியில் சில பிரச்சினைகள் இருந்து வருகிறது. குறிப்பாக சஞ்சு சாம்சன் பார்ம் ரசிகர்களை கவலை அடைய செய்துள்ளது. 

Add Zee News as a Preferred Source

பலம் வாய்ந்த இந்திய அணி 

தற்போதுள்ள இந்திய அணியில் சில பிரச்சினைகளை தவிர அனைத்தும் பலமாகவே பார்க்கப்படுகிறது. அபிஷேக் ஷர்மா, சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷன் ஆகியோர் சிறந்த பார்மில் இருந்து வருகின்றனர். பவுலிங்கில் பும்ரா மற்றும் வருண் சக்கரவர்த்தி சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். மேலும் நியூஸிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் அக்சர் படேல் முக்கியமான நேரத்தில் அணியின் வெற்றிக்கு உதவினார். இருப்பினும் அர்ஸ்தீப் சிங் பவர் பிளேயில் விக்கெடுகளை எடுத்தாலும், ரன்களை அதிகமாக விட்டுக் கொடுக்கிறார். இது பெரிய பாதிப்பாக இருந்து வருகிறது. அதே சமயம் சஞ்சு சாம்சன் நியூசிலாந்துக்கு எதிரான 5 டி20 போட்டிகளிலும் மொத்தமாக சேர்த்து 50 ரன்கள் கூட அடிக்கவில்லை. 

இஷான் கிஷன் இடம் பெறுவாரா? 

திலக் வர்மா காயத்தால் நியூஸிலாந்து தொடரில் விலகியதால், இஷான் கிஷன் அவரது இடத்தில் விளையாடினார். கடைசி போட்டியில் சதம் அடித்து தனது இடத்தை உறுதி செய்து கொண்டுள்ளார். சஞ்சு சாம்சன் மோசமாக விளையாடி வருவதால், அவரை நீக்கிவிட்டு இஷான் கிஷனை ஓப்பனராக களம் இறங்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வருகிறது. ஆனால் ஐந்தாவது டி20 போட்டியில் விக்கெட் கீப்பராக செயல்பட்ட இஷான் கிஷன் அவ்வளவு சிறப்பாக விக்கெட் கீப்பிங் செய்யவில்லை. நிறைய ஸ்டெம்பிங் மற்றும் கேட்களை தவறவிட்டார். சஞ்சு சாம்சன் பேட்டிங்கில் சிறப்பாக இல்லை என்றாலும், விக்கெட் கீப்பிங்கில் திறமையானவராக இருந்து வருகிறார். குறிப்பாக DRS போன்றவற்றில் அவரின் பங்கு முக்கியமானதாக இருந்து வருகிறது. இதனால் சஞ்சு சாம்சனை விக்கெட் கீப்பிங்கிற்காக அணியில் வைத்திருக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

ரிங்கு சிங் இடத்திற்கு ஆபத்து? 

திலக் வர்மா காயம் குணமடையில் இந்திய அணிக்கு வந்தால், சஞ்சு சாம்சன் நீக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இருப்பினும் விக்கெட் கீப்பிங்கிற்காக சஞ்சு சாம்சனை அணியில் வைத்து, அதே சமயம் திலக் வர்மா மற்றும் இஷான் கிஷனை பிளேயிங் 11ல் கொண்டு வந்தால், ரிங்கு சிங்கை நீக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். எட்டாவது இடத்தில் அக்சர் படேல் பேட்டிங் ஆட முடியும் என்பதால் பினிஷர் ரோலில் இருக்கும் ரிங்கு சிங்கின் தேவையில்லாமல் போகிறது. கவுதம் கம்பீர் மற்றும் சூர்யகுமார் யாதவ் என்ன மாதிரியான முடிவுகளை எடுக்கப் போகிறார்கள் என்பது குழப்பமாகவே இருந்து வருகிறது.

டி20 உலக கோப்பை தொடங்குவதற்கு முன்பு இந்திய அணி இரண்டு பயிற்சி போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த பயிற்சி போட்டியில் சஞ்சு சாம்சன், திலக் வருமா ஆகியோரின் பேட்டிங்கை பொறுத்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சஞ்சு சாம்சனை நீக்கினால் இந்திய அணியின் டாப் 3 பேட்ஸ்மேன்கள் இடது கை வீரர்களாக இருப்பார்கள். இதனை இந்திய அணி கருத்தில் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த குழப்பம் அனைத்தும் சஞ்சு சாம்சன் பார்மில் தான் முடிவடையும்.

 

About the Author


RK Spark

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.