ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த 2026 டி20 உலகக் கோப்பை தொடர் நேற்று முன்தினம் (பிப்ரவரி 07) தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் இலங்கை மைதானங்களில் நடந்து வரும் இத்தொடரில் இதுவரை 6 போட்டிகள் முடிவடைந்துள்ளன. இந்திய அணி இத்தொடரின் 3வது போட்டியில் அமெரிக்காவுக்கு எதிராக விளையாடியது. அப்போட்டியில் சற்று தடுமாறிய இந்திய அணி அமெரிக்காவுக்கு 162 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது. அணியில் சூர்யகுமார் யாதவ் மட்டும் 50 ரன்களை கடந்து சிறப்பாக விளையாடி இருந்தார்.
Add Zee News as a Preferred Source
இந்திய அணி
அமெரிக்கா அணியும் ஓரளவு டஃப் கொடுத்து 132 ரன்கள் வரை அடித்து 29 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. எளிதாக இந்தியா வெல்லும் என நினைத்த அனைவருக்கும் அமெரிக்கா அணி சற்று பயத்தை காட்டியது. இந்த சூழலில், இந்திய அணி வென்றது ரசிகர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான், ரசிகர்களுக்கு ஒரு சோகமான செய்தி அவர்களை கவலையடைய செய்துள்ளது.
காய்ச்சலுடன் விளையாடிய அபிஷேக் சர்மா
அதாவது இந்திய அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா அமெரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியிலேயே காய்ச்சலுடன்தான் விளையாடினார் என்றும் அவருக்கு வயிற்று பிரச்சனை இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால்தான் அவர் இரண்டாவது பாதியில் ஃபீல்டிங் செய்ய வரவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
சஞ்சு சாம்சனை களமிறக்க வாய்ப்பு
இந்த நிலையில், அவர் முழுமையாக குணமடையவில்லை என்றால், அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் விளையாடுவார் என தெரிகிறது. இந்திய அணி அடுத்த போட்டியாக 12ஆம் தேதி நமீபியாவை எதிர்கொள்ள இருக்கிறது. இப்போட்டி டெல்லியின் அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இப்போட்டிக்கு இன்னும் இரண்டு நாட்கள் முழுமையாக இருப்பதால், அவர் குணமடைந்து அப்போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை அவர் விளையாடவில்லை என்றால், சஞ்சு சாம்சனை இந்திய அணி களமிறக்கும்.
அபிஷேக் சர்மா இல்லையென்றால் இந்திய அணிக்கு பின்னடைவு
அபிஷேக் சர்மா ஒரு அதிரடியான வீரர். அவர் 200க்கு குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடக் கூடியவர். அவர் சற்று நேரம் களத்தில் நின்றாலே போட்டியை ஒருபக்கமாக மாற்றும் திறன் படைத்தவர். இப்படி ஒரு வீரர் விலகும் பட்சத்தில் இந்திய அணி அது ஒரு பெரும் பின்னடைவாகும்.
இந்திய அணிக்கு திரும்பும் வாஷிங்டன் சுந்தர்
ஏற்கனவே காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து விலகி இருந்த ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் நமீபியா போட்டிக்கு முன்பாக இந்திய அணியுடன் இணைய உள்ளார்.
வீரர்களுக்கு அடுத்தடுத்த காயம்
இன்னொரு புறம் ஹர்ஷித் ரானா காயத்தால் தொடரில் இருந்து விலகி உள்ளார். அவருக்கு பதிலாக முகமது சிராஜ் சேர்க்கப்பட்டார். அமெரிக்காவுக்கு எதிரான முதல் டி20 உலகக் கோப்பை போட்டியிலும் முகமது சிராஜ் விளையாடினார். தற்போது அபிஷேக் சர்மாவுக்கு காய்ச்சல் ஏற்பாடுள்ளதாக வந்த செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஐசிசி போன்ற முக்கிய தொடரில் இந்திய அணி வீரர்களுக்கு அடுத்தடுத்து காயம், காய்ச்சல் போன்ற ஏற்படுவது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சஞ்சு சாம்சன், சிவம் துபே, இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷித் ராணா, வருண் சகரவர்த்தி, குல்தீப் யாதவ், அக்சர் படேல் (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், ரிங்கு சிங்.
About the Author
R Balaji