T20 WC: `என்னா மேட்ச்!' – இரண்டு சூப்பர் ஓவர்; ஆனாலும் லாஸ்ட் பால் த்ரில்லர்! SA-வை பதற வைத்த AFG!

டி20 உலகக் கோப்பையின் 13-வது லீக் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் ரசிகர்களை நாற்காலியின் நுனியில் அமர வைத்த பரபரப்பான திரில்லராக மாறியது.

தென் ஆப்பிரிக்கா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய இந்தப் போட்டி, டி20 வரலாற்றிலேயே அரிதாக காணப்படும் இரண்டு சூப்பர் ஓவர்களுடன் முடிவடைந்து பேசுபொருளாகி உள்ளது.

டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷீத் கான் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு குவிண்டன் டி கொக் மற்றும் மார்க்ரம் தொடக்க வீரர்களாக வந்தனர். ஆனால் மூன்றாவது ஓவரிலேயே மார்க்ரம் விக்கெட்டை இழந்தது அணிக்கு அதிர்ச்சியாக இருந்தது.

SA-வை பதற வைத்த AFG!
SA-வை பதற வைத்த AFG!

ரிக்கெல்டன் அதிரடி – 188 இலக்கு

அதன்பின் களமிறங்கிய ரிக்கெல்டன் அதிரடியாக ஆடி ரன்களை வேகமாகக் குவித்தார். மறுமுனையில் டி காக் பொறுமையுடன் இன்னிங்ஸை கட்டுப்படுத்தினார். இருவரின் கூட்டணி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. எனினும் நடுப்பகுதியில் ஆப்கானிஸ்தான் பந்து வீச்சாளர்கள் கட்டுப்பாட்டுடன் பந்து வீசி தொடர்ந்து விக்கெட்களை வீழ்த்தினர். 20 ஓவர் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 187 ரன்கள் எடுத்தது.

SA-வை பதற வைத்த AFG!
SA-வை பதற வைத்த AFG!

188 ரன்கள் என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு தொடக்கம் சிறப்பாக இருந்தது. அதிரடியாக விளையாடிய ரஹ்மானுல்லா குர்பாஸ், தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்களை சிதறவிட்டார். விக்கெட்கள் மறுமுனையில் விழுந்தாலும், குர்பாஸ் தனிப்பட்ட முறையில் 84 ரன்கள் குவித்து அணியை வெற்றிக்கரைக்கு அருகில் கொண்டு சென்றார்.

சூப்பர் ஓவருக்கு சென்ற போட்டி

கடைசி கட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு ஒரு ரன் தேவைப்பட்ட நிலையில் அனைத்து விக்கெட்களும் வீழ்ந்ததால், 187 ரன்களுடன் போட்டி டை ஆனது. இதனால் போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது.

SA-வை பதற வைத்த AFG!
SA-வை பதற வைத்த AFG!

சூப்பர் ஓவரில் ஆப்கானிஸ்தான் அணி 17 ரன்கள் எடுத்தது. இதில் ஓமர்சாய் 15 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றினார். சேஸ் செய்ய வந்த தென் ஆப்பிரிக்காவுக்கு கடைசி பந்தில் 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் சிக்ஸர் அடித்து மீண்டும் சமநிலையை ஏற்படுத்தினார். இதனால் சூப்பர் ஓவரும் டை ஆனது.

டி20 வரலாற்றில் இரண்டு சூப்பர் ஓவர்கள் நடந்த முதல் உலகக் கோப்பை போட்டியாக இது அமைந்தது.

டேவிட் மில்லர் அதிரடி

இரண்டாவது சூப்பர் ஓவரில் தென் ஆப்பிரிக்காவுக்காக டேவிட் மில்லர் அதிரடி காட்டி 23 ரன்கள் சேர்த்தார். இது ஆப்கானிஸ்தான் அணிக்கு கடும் அழுத்தமாக மாறியது.

SA-வை பதற வைத்த AFG!
SA-வை பதற வைத்த AFG!

குர்பாஸின் 3 சிக்ஸர்கள்

24 ரன்கள் இலக்கை விரட்டிய ஆப்கானிஸ்தான் அணி இரண்டாவது பந்திலேயே விக்கெட்டை இழந்தது. இருந்தாலும் குர்பாஸ் மீண்டும் போராடி தொடர்ந்து மூன்று சிக்ஸர்கள் அடித்து போட்டியை சுவாரஸ்யமாக மாற்றினார். கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கடைசி பந்தில் இரண்டு விக்கெட்களை இழந்ததால், ஆப்கானிஸ்தான் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

SA-வை பதற வைத்த AFG!
SA-வை பதற வைத்த AFG!

இறுதியாக..!

டி20 கிரிக்கெட்டின் உண்மையான சுவை என்ன என்பதைக் காட்டிய போட்டி இது. இரண்டு சூப்பர் ஓவர்கள், கடைசி பந்துவரை நீண்ட பதற்றம், குர்பாஸ் போன்ற வீரரின் அசாதாரண போராட்டம் – எல்லாம் சேர்ந்து இது ஒரு கிளாசிக் திரில்லராக மாறியது. வெற்றி தென் ஆப்பிரிக்காவுக்கே சென்றாலும், ரசிகர்களின் இதயத்தை வென்றது ஆப்கானிஸ்தானின் தைரியமான போராட்டம் தான். டி20 உலகக்கோப்பை வரலாற்றில் நீண்ட நாட்கள் பேசப்படும் ஒரு போட்டியாக இது இருக்கும்.!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.