Mohammed Shami Performance In Ranji Trophy: ரஞ்சி டிராபி 2025-2026 தொடரின் அரையிறுதி போட்டி நடைபெற்று வருகிறது. ஒருபக்கம் கர்நாடக மற்றும் உத்தரகாண்ட் அணிகளும் மோதி வருகிறது. மறுபக்கம் ஜம்மு காஷ்மீர் அணியும் பெங்கால் அணியும் மோதி வருகிறது.
Add Zee News as a Preferred Source
ஓரே இன்னிங்ஸில் 8 விக்கெட்கள் வீழ்த்தி முகமது ஷமி அசத்தல்
இந்த போட்டியில் முதலில் பெங்கால் அணிதான் பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்ஸில் அந்த அணி 328 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சுதிப் குமார் கரமி 146 ரன்கள் அடித்தார். இதில் 21 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சர் அடங்கும். இதையடுத்து ஜம்மு காஷ்மீர் அணி தனது முதல் இன்னிங்ஸை விளையாடியது. அந்த அணி சற்று தடுமாறிய நிலையில், 302 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த நிலையில்தான், வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி ஓரே இன்னிங்ஸில் 8 விக்கெட்களை வீழ்த்தி அசத்தி இருக்கிறார்.
முகமது ஷமி 22.1 ஓவர்கள் வீசிய நிலையில், அவர் 90 ரன்கள் விட்டுக்கொடுத்து 8 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். இதனால், பெங்கால் அணி 26 ரன்கள் முன்னிலை வகித்து இரண்டாவது இன்னிங்ஸில் 99 மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 126 ரன்களை ஜம்மு காஷ்மீர் அணிக்கு டார்கெட்டாக வைத்தது.
நடப்பு சீசனில் 36 விக்கெட்கள்
35 வயதாகும் முகமது ஷமி, கடந்த ஓராண்டாக தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார். நடந்து வரும் ரஞ்சி டிராபி தொடரில் இதுவரை முகமது ஷமி 12 இன்னிங்ஸ்களில் விளையாடி 36 விக்கெட்களை வீழ்த்தி நடப்பு ரஞ்சி தொடரில் அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் 6வது இடத்தில் உள்ளார்.
தேர்வாணையம் புறக்கணிப்பு
2023 ஒருநாள் உலகக் கோப்பைக்கு பின்னர் காயம் காரணமாக ஓய்வில் இருந்த முகமது ஷமி 2025 தொடக்கத்தில் டி20 மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணிக்கு திரும்பினார். அதன் பிறகு அவர் இந்திய அணியில் தேர்வாகவில்லை. இதன் காரணமாக அவர் தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் விளையாடி தன்னை நிரூபித்து வருகிறார். ஆனால் அவரை தேர்வாணையம் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது.
முகமது ஷமி காட்டமான பதில்
முகமது ஷமியிடன் உங்களின் உடல் தகுதி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, என்னுடைய உடல் தகுதி எப்படி இருக்கிறது என்பதை அஜித் அகர்கரிடம் சொல்வது எனது வேலை கிடையாது. உடல் தகுதி இல்லையென்றால், எப்படி ரஞ்சியில் விளையாட முடியும் என மிகுந்த கோபத்துடன் பதில் அளித்திருந்தார். இதனால் ஏற்பட்ட மன கசப்பே, முகமது ஷமி தேர்வாகாததற்கு காரணம் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், மீண்டும் ரஞ்சு டிராபி தொடரில் ஓரே இன்னிங்ஸில் 8 விக்கெட்களை வீழ்த்தி அனைவரது கவனத்தையும் முகமது ஷமி ஈர்த்துள்ளார்.
About the Author
R Balaji