Pakistan Player Babar Azam T20 Performance: ஐசிசி நடத்தும் டி20 உலகக் கோப்பை தொடர் பிப்ரவரி 07ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் அசாம் கடுமையாக பேட்டிங்கில் சொதப்பி வருகிறார். இதுவரை விளையாடிய 4 லீக் ஆட்டங்களில் வெறும் 66 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் விமர்சனத்தை எழுப்பி உள்ளது. ஏற்கனவே பாபர் அசாமின் டி20 கிரிக்கெட் பேட்டிங் குறித்து கடுமையான விமர்சனங்கள் இருந்து வரும் நிலையில், தற்போது டி20 உலகக் கோப்பையிலும் அவரது செயல்திறன் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருகிறது.
Add Zee News as a Preferred Source
பாபர் அசாமுக்கு டி20 கிரிக்கெட் ஏற்றதல்ல – சோயப் அக்தர்
இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயப் அக்தர் அவரை விமர்சித்து பேசி உள்ளார். டி20 கிரிக்கெட் பாபர் அசாமுக்கு ஏற்றதல்ல என்பதை அவர் உணர வேண்டும் என கூறி உள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், முதலாவதாக பாபர் அசாம் தனக்கு டி20 கிரிக்கெட் ஏற்றதல்ல என்று முடிவெடுத்திருக்க வேண்டும். சரி அதையும் தாண்டி, நிர்வாகம் அவரை விளையாட வைக்க விரும்பும் பட்சத்தில், அவரை தொடக்க வீரராக விளையாட வைத்திருக்க வேண்டும். இதில் எந்த குழப்பமும் தேவையில்லை, மிகவும் தெளிவான ஒன்று என சோயப் அக்தர் தெரிவித்துள்ளார்.
பாபர் அசாம் ஏன் அணியில் இருக்கிறார் – முகமது ஹபீஸ் கேள்வி
இதே நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் கேப்டன் முகமது ஹபீஸ், பாகிஸ்தான் பயிற்சியாளர் மைக் ஹெசன் கூறுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர் பவர் ப்ளே ஓவர்களில் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக இருப்பதாலேயே அவரை மிடில் ஆர்டரில் இறக்குகிறோம் என கூறுகிறார். ஆனால் அவர் இறங்கும் 4வது இடத்திலும் ஸ்ட்ரைக் ரேட் குறைவாகவே ஆடுகிறார். முதல் 6 ஓவர்களிலும் அவரால் ரன்களை குவிக்க முடியாது, 10 ஓவர்களுக்கு பிறகு பெரிய ஷாட்களை ஆடி ரன்களை சேர்க்க முடியாத பேட்ஸ்மேனும் கிடையாது என்றால், அவர் ஏன் அணியில் விளையாட வேண்டும்? என கேள்வி எழுப்பினார்.
Babar Azam Strike Rate In T20 Cricket: ஸ்ட்ரைக் ரேட் வெறும் 115.78
பாபர் அசாம் டி20 கிரிக்கெட்டில் வெறும் 115.78 ஸ்ட்ரைக் ரேட்டையே வைத்திருக்கிறார். அவர் 4வது இடத்தில் களமிறங்குகிறார். ஆனால் அதற்கு ஏற்றவாறு அவரது செயல்திறன் இல்லை. களத்திற்கு வந்த பின்னர் மிகவும் தாமதமாகவே ரன்களை சேர்க்க தொடங்குகிறார். இது களத்தில் இருக்கும் மற்றொரு பேட்ஸ்மேனுக்கு அழுத்தத்தை கொடுக்கிறது. குறிப்பாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணிக்கு எதிரான போட்டியில் கூட அவர் மோசமான ஷாட் ஆடி ஆட்டமிழந்தார். இது எதிரணிக்கு சாதகமாக அமைந்துவிடுகிறது.
கடந்த டிசம்பர் – ஜனவரியில் நடந்த பிக் பாஷ் தொடரில் அவர் 202 ரன்களை மட்டுமே எடுத்தார். இத்தொடரில் ஸ்டீவ் ஸ்மித்துடன் ஏற்பட்ட குழப்பம் அனைவரது மத்தியிலும் பேசும் பொருளானது.
About the Author
R Balaji