ரூ.7.90 லட்சத்தில் 2026 ஹூண்டாய் Venue இந்தியாவில் அறிமுகம் | Automobile Tamilan

புதிய தலைமுறை ஹூண்டாய் Venue 2026 மாடல் இந்திய சந்தையில் ரூ. லட்சம் முதல் ரூ.7.90 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டு, நவீன பாதுகாப்பு சார்ந்த ADAS தொழில்நுட்பம், நவீன இன்டீரியர் வடிவமைப்பு, மற்றும் மேம்பட்ட அம்சங்கள் ஆகியவை காம்பேக்ட் எஸ்யூவி சந்தையில் போட்டியாளர்களை எதிர்கொள்ள உள்ளது. ஹூண்டாய் Venue விலை விவரம் புதிய வென்யூ காருக்கான வேரியண்ட் வரிசைகளில் தற்பொழுது HX 2 , HX 4, HX 5, HX 6, HX 6T, … Read more

ஹோண்டா எலிவேட்டில் ADV எடிசனின் வசதிகள் மற்றும் விலை விவரம் | Automobile Tamilan

ஹோண்டா கார்ஸ் இந்தியாவின் பிரசத்தி பெற்ற எலிவேட் எஸ்யூவிக்கு தொடர்ந்து பல்வேறு சிறிய மாறுதல்கள் மற்றும் கூடுதல் ஆக்செரீஸ் சார்ந்த ஸ்டைலிங் மேம்பாடுகளை வழங்கி வரும் இந்நிறுவனம் எலிவேட் ADV எடிசன் என்ற பெயரில் ரூ.15,29,000 முதல் ரூ.16,66,800 வரை எக்ஸ்-ஷோரூம் விலை நிர்ணயம் செய்துள்ளது. ஹோண்டா Elevate ADV எடிசன் சிறப்புகள் என்ன ? குறிப்பாக ஆரஞ்ச் நிறத்தை விரும்புவோவருக்கு ஏற்ற தேர்வாக அமைந்து ஸ்போர்ட்டிவ் லைஃப்ஸ்டைல் விரும்பிகளுக்கும் பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மற்றபடி இந்த … Read more

eVitara மூலம் எலக்ட்ரிக் சந்தையில் நுழையும் மாருதி சுசூகி | Automobile Tamilan

இந்தியாவில் மாதந்தோறும் 20,000 கூடுதலாக எலக்ட்ரிக் பயணிகள் வாகனங்கள் விற்பனை ஆகின்ற நிலையில், நாட்டின் முதன்மையான மாருதி சுசூகியின் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி மாடலாக eVitara மூலம் மின் வாகன சந்தையில் டிசம்பர் 2025ல் நுழைகின்றது. போட்டியாளர்களான டாடா, எம்ஜி, மஹிந்திரா, வின்ஃபாஸ்ட் மற்றும் ஹூண்டாய் உள்ளிட்ட நிறுவனங்களை எதிர்கொள்ள தயாராகியுள்ள மாருதி மிக வலிமையான சர்வீஸ் நெட்வொர்க் மற்றும் தரம் சார்ந்த மேம்பாடுளை சுசூகி கொண்டிருப்பதனால் வலுவான விற்பனையை பதிவு செய்ய வாய்ப்புள்ளது. தற்பொழுது குஜராத்தில் … Read more

அக்டோபர் 2025ல் இந்திய கார் விற்பனையில் சாதனையை படைத்த நிறுவனங்கள்..! | Automobile Tamilan

பண்டிகை காலம் மற்றும் ஜிஎஸ்டி 2.0 நடைமுறைக்கு வந்த பின்னர் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அமோகமான வளர்ச்சியை நிறுவனங்கள் பதிவு செய்ய துவங்கியுள்ள நிலையில், மாருதி சுசூகி தொடர்ந்து நாட்டின் முதன்மையான நிறுவனமாக விளங்கி வருகின்றது. ஒட்டுமொத்தமாக 5.49 லட்சம் கார்கள் விற்பனையாகி, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 10.74% வளர்ச்சி பதிவாகியுள்ளது. ஆனால் மஹிந்திரா, டாடா மற்றும் ஹூண்டாய் இடையே மிக கடுமையான போட்டியை இரண்டாம் இடத்திற்கு மேற்கொண்டு வருகின்றன.  ஆனால் ஹூண்டாய் நிறுவனம் தொடர்ந்து … Read more

7 இருக்கை XEV 9S எலக்ட்ரிக் எஸ்யூவி அறிமுக தேதியை வெளியிட்ட மஹிந்திரா | Automobile Tamilan

மஹிந்திரா நிறுவனத்தின் BE 6, XEV 9e வெற்றியை தொடர்ந்து INGLO பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்ட புதிய 7 இருக்கை எஸ்யூவி மாடலுக்கு XEV 9S என்ற பெயரை அறிவித்து நவம்பர் 27, 2025ல் அறிமுகம் செய்ய உள்ளதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. தற்பொழுது வரை பேட்டரி மற்றும் மோட்டார் தொடர்பான விபரங்களுடன் ரேஞ்ச் பற்றி எந்த தகவலும் வெளியிடவில்லை என்றாலும் அனேகமாக முந்தைய மாடல்களில் 59kwh மற்றும் 79kwh பேட்டரி பேக்குகளை பகிர்ந்து கொள்ள வாய்ப்புள்ளது. இந்த மாடலின் … Read more

ராயல் என்ஃபீல்டின் புல்லட் 650 ட்வீன் டீசர் வெளியானது | Automobile Tamilan

உலகில் மிக நீண்ட காலமாக உற்பத்தியில் உள்ள மோட்டார்சைக்கிள் பெருமையை பெற்ற புல்லட் அடிப்படையில் புதிய புல்லட் 650 ட்வீன் மாடலை EICMA 2025 அரங்கில் அறிமுகம் செய உள்ளதை ராயல் என்ஃபீல்டு டீசர் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது. புல்லட் 500 நீக்கப்பட்ட பிறகு தற்பொழுது வரவுள்ள 650சிசி என்ஜின் பெற்ற சக்திவாய்ந்த புல்லட்டில் ஏற்கனவே பிரபலமாக உள்ள பேரலல் ட்வீன் சிலிண்டர் என்ஜின் இடம்பெற்றிருக்கும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. Royal Enfield Bullet 650 Teased செமி … Read more

இந்தியாவில் 7 எஸ்யூவி உட்பட 10 கார்களை வெளியிட ஹோண்டா கார்ஸ்.! | Automobile Tamilan

இந்திய சந்தையில் ஹோண்டா கார்ஸ் நிறுவனம் 0 ஆல்ஃபா எலக்ட்ரிக் எஸ்யூவி தாயரிக்கப்பட்டு ஜப்பான் உட்பட பல்வேறு நாடுகளுக்கு எலிவேட் போல ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ள நிலையில் சந்தையின் மதிப்பை அதிகரிக்க இந்நிறுவனம் 2030க்குள் 10 கார்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இந்தியாவுக்காக பிரத்தியேகமான குழு ஒன்றை உருவாக்கியுள்ள ஹோண்டா இதன் மூலம் செடானை கடந்து பல்வேறு புதிய மாடல்களை சந்தைக்கு ஏற்ப வடிவமைக்கவும் ஓருங்கிணைக்கவும் திட்டமிட்டுள்ள நிலையில், α (Alpha) முதல் மாடலாக 0 சீரிஸ் … Read more

ஹீரோ விடாவின் புராஜெக்ட் VXZ ஸ்போர்ட்ஸ் பைக் டீசர் வெளியானது | Automobile Tamilan

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எலக்ட்ரிக் பிராண்ட் விடா கீழ் வரவுள்ள முதல் ஸ்போர்ட்ஸ் மோட்டார்சைக்கிளுக்கான பெயரை புராஜெக்ட் VXZ என அழைக்கப்படுவதாக முதல் டீசரை வெளியிட்டுள்ளது.  முன்பாக யூபெக்ஸ் என அறியப்பட்ட டீசர் ஆனது அட்வென்ச்சர் ஸ்டைல் என உறுதிப்படுத்தி புதிய டீசரை வெளியிட்டுள்ளது. விடா இந்திய சந்தையில் தற்பொழுது ஸ்கூட்டர்களை மட்டுமே வி்ற்பனை செய்து வரும் நிலையில், ஸ்போர்ட்டிவ் ஸ்டைல் பெற்ற பைக்கின் டீசரில் முன்புறத்தில் அப்சைடு டவுன் ஃபோர்க் பெற்று பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பரை … Read more

பெர்ஃபாமென்ஸ் ஹூண்டாய் வெனியூ N-Line எஸ்யூவி அறிமுகமானது | Automobile Tamilan

நவம்பர் 4 ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ள வெனியூ மாடலுடன் கூடுதலாக வெனியூ  என்-லைனில்  N6, N10 என இரு வேரியண்டுகளுடன் ஹூண்டாயின் N-line மாடல்களை போல பல்வேறு டிசைன் வித்தியாசங்களுடன், சிறப்பான செயல்திறன் மற்றும் சஸ்பென்ஷன் சார்ந்த மேம்பாடுகளை கொண்டிருக்கும். Hyundai Venue N-line 120hp பவர் வழங்கும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் பெற்று அடிப்படையில் வெனியூ மாடலில் இருந்து வேறுபடுத்தப்பட்ட முன்பக்க கிரில் அமைப்புடன் N-line பேட்ஜிங் பெற்றதாகவும், சிறிய ஸ்கிட் பிளேட் … Read more

சென்னை ஃபோர்டு ஆலையில் என்ஜின் உற்பத்திக்கு ரூ.3,250 கோடி முதலீடு | Automobile Tamilan

தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஃபோர்டு ஆலையை மீண்டும் உற்பத்திக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் முதற்கட்டமாக அடுத்த தலைமுறை என்ஜின் உற்பத்திக்கு சுமார் ரூபாய் 3,250 கோடி முதலீடு திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேரடியாக 600 நபர்களுக்கு வேலை கிடைக்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. செப்டம்பர் 2024ல் கையெழுத்திடப்பட்ட  விருப்பக் கடிதத்தின் அடிப்படையில், நிறுவனத்தின் பிரதிநிதிகள் மற்றும் தமிழ்நாடு அரசு ஃபோர்டு திட்டங்களுக்கு இந்தியாவின் “உற்பத்தித் திறனை” பயன்படுத்துவதற்கான முயற்சியாக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டனர். மூத்த நிறுவன நிர்வாகிகள் … Read more