மிகப்பெரிய பஜாஜ் பல்சர் NS400 பைக்கின் விபரம் வெளியானது

பஜாஜ் ஆட்டோ பல்சர் வரிசையில் மிகப்பெரிய பல்சர் மாடல் ஆனது விற்பனைக்கு வருகின்ற மே மாதம் 3 ஆம் தேதி வெளியிடப்பட இருக்கின்றது. தற்பொழுது வரை பல்சர் வரிசையில் 125சிசி-250சிசி வரை மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகின்ற நிலையில் புதிதாக வரவுள்ள பல்சர் என்எஸ் 400 மாடல் ஆனது மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் பவர்ஃபுல்லான மாடலாக விளங்க உள்ளது. இது பல்சர் வரிசைக்கு மிகப்பெரிய ஒரு பலமாக கருதப்படுகின்றது. பல்சர் NS400 தொடர்பில் சில புகைப்படங்கள் … Read more

புதிய 2024 மாருதி சுசுகி ஸ்விஃப்ட் முன்பதிவு துவங்கியது

புதுப்பிக்கப்பட்ட டிசைன் மற்றும் பல்வேறு நவீன வசதிகளை கொண்ட புதிய 2024 மாருதி சுசூகி ஸ்விஃப்ட் கார் விற்பனைக்கு மே மாதம் 9ஆம் தேதி வெளியிடப்பட உள்ள நிலையில் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. முன்பதிவு கட்டணமாக ரூபாய் 11,000 வசூலிக்கப்படுகின்றது. நாடு முழுவதும் உள்ள அனைத்து மாருதி டீலர்கள் மற்றும் ஆன்லைன் வழியாக இந்த முன்பதிவானது நடைபெற்று வருகின்றது. கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் விற்பனையில் கிடைத்த வருகின்ற ஸ்விஃப்ட் மிகச் சிறப்பான மாடலாக இந்திய சந்தையில் … Read more

மஹிந்திரா Bolero Neo Plus சிறப்புகள் மற்றும் ஆன்ரோடு விலை பட்டியல்

மஹிந்திரா வெளியிட்டுள்ள ஒன்பது இருக்கை கொண்ட பொலேரோ நியோ பிளஸ் (Bolero Neo Plus) காரில் இடம் பெற்று இருக்கின்ற இரண்டு வேரியண்டுகள் மற்றும் பல்வேறு சிறப்பு அம்சங்கள் உட்பட அனைத்து விபரங்களையும் தொடர்ந்து தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலையும் அறிந்து கொள்ளலாம். 2+3+4 என்ற முறையில் ஒன்பது இருக்கைகள் கொண்டுள்ள இந்த மாடலில் P4 மற்றொன்று P10 இரண்டு வேரியண்டுகள் இடம் பெற்று இருக்கின்றது. பொதுவாக 2.2 லிட்டர் எம்-ஹாக் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கின்றது. இந்த எஞ்சின் … Read more

அறிமுகத்திற்கு முன்பாக 2024 Maruti Suzuki Swift முன்பதிவு துவங்கியதா..?

இந்தியாவின் மிகவும் பிரசத்தி பெற்ற ஹேட்ச்பேக் ரக மாடலான 2024 மாருதி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift) விற்பனைக்கு மே மாதம் 9 ஆம் தேதி வெளியிடப்பட உள்ள நிலையில் சில டீலர்களிடம் முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. முந்தைய 1.2 லிட்டர் K12B 4 சிலிண்டர் என்ஜினுக்கு பதிலாக, மாருதியின் ஸ்விஃப்ட் காரில் புதிய 1.2 லிட்டர் Z12E மூன்று என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 82 bhp மற்றும் 112 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் மேனுவல் மற்றும் … Read more

ஹீரோ Mavrick 440 பைக்கில் ஸ்கிராம்பளர் அறிமுகம் எப்பொழுது.!

இந்தியாவின் முன்னணி ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் வெளியிட்டுள்ள மேவ்ரிக் 440 அடிப்படையில் புதிய மேவ்ரிக் 440 ஸ்கிராம்பளர் (Mavrick 440 Scrambler) வருகை உறுதி செய்யப்பட்டுள்ளது. நடுத்தர மோட்டார் சைக்கிள் சந்தையில் முதல் மாடலாக வெளியிடப்பட்டுள்ள ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் மேவ்ரிக் மாடலுக்கு அடுத்தபடியாக இதன் அடிப்படையில் ஒரு ஸ்கிராம்பளர் மாடலானது வடிவமைக்கப்பட்டு வருவதை பெயருக்கான வர்த்தக முத்திரை பதிவு மேற்கொண்டுள்ள விபரம் வெளியாகி உள்ள நிலையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆன் ரோடு மற்றும் ஆப் ரோடு … Read more

குறைந்த விலை பஜாஜ் சேட்டக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அறிமுக விபரம்

வரும் நாட்களில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் குறைந்த விலை சேட்டக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு வெளியிட தயாராகி வருகின்றது. ஏற்கனவே சந்தையில் கிடைக்கின்ற சேட்டக் மாடல் ரூபாய் 1 லட்சத்து 32 ஆயிரம் முதல் துவங்குகின்ற நிலையில் அந்த மாடலை விட சற்று குறைவாக ஒரு லட்சம் ரூபாய் அல்லது ரூ.1.10 லட்சம் விலைக்குள் எதிர்பார்க்கப்படுகின்றது. புதிய மாடல் இந்திய சந்தையில் கிடைக்கின்ற ஓலா S1X உட்பட குறைந்த விலையில் கிடைக்கின்ற பல்வேறு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை எதிர்கொள்ளவும் … Read more

நிசான் மேக்னெட் எஸ்யூவி திரும்ப அழைக்கப்படுகின்றது

இந்தியாவில் நிசான் நிறுவனம் விற்பனை செய்து வருகின்ற மேக்னெட் எஸ்யூவி காரில் முன்புற டோர் சென்சாரில் ஏற்பட்ட விழா கோளாறுகளை சரி செய்வதற்காக திரும்ப அழைத்துள்ளது.  கடந்த நவம்பர் 2020 முதல் டிசம்பர் 2023 வரை தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்ட கார்களில் மட்டுமே இந்த பிரச்சனை எழுந்துள்ளது குறிப்பாக ஆரம்ப நிலை XE மற்றும் XL வேரியண்டுகள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் எவ்வளவு எண்ணிக்கைகள் என்ற விபரத்தை தற்போது இந்த நிறுவனம் வெளியிடவில்லை. மேலும் இந்நிறுவனத்தின் அறிக்கையில்  … Read more

கூடுதலாக 5 % மைலேஜ் தரும் டொயோட்டா ஃபார்ச்சூனர் 48V அறிமுகம்

மைல்டு ஹைபிரிட் சிஸ்டத்தை பெற்றுள்ள புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி மாடல் 5 % வரை கூடுதலான மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டிருப்பதுடன், இந்திய சந்தைக்கு புதிய ஹைபிரிட் சிஸ்டத்தை பெற்ற மாடல் அடுத்த சில மாதங்களுக்கு பிறகு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. முன்பாக இதே போன்ற ஹைபிரிட் நுட்பத்தை பெற்ற டொயோட்டா ஹைலக்ஸ் பிக்கப் டிரக் வெளியிடப்பட்ட நிலையில், தற்பொழுது ஃபார்ச்சூனரும் தென் ஆப்பிரிக்கா சந்தையில் வெளியாகியுள்ளது. செயல்திறனில் எந்தவொரு சமரசமும் இல்லாமல் தொடர்ந்து 2.8 … Read more

ஐரோப்பாவில் ஸ்டைலிஷான் சிட்ரோன் C3 ஏர்கிராஸ் வெளியானது

ஐரோப்பா சந்தையில் புதிய சிட்ரோன் C3 ஏர்கிராஸ் மற்றும் eC3 ஏர்கிராஸ் (Citroen C3 Aircross) எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற மாடல் முற்றிலும் மாறுபட்ட டிசைன் அம்சங்களை பெற்றிருந்தாலும் இரு மாடல்களும் ஒரே ஸ்டெல்லானைட்ஸ் ஸ்மார்ட் கார் பிளாட்பாரத்தில் தான் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. இந்திய சந்தையில் தற்பொழுது பெட்ரோல் மட்டும் உள்ள அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் c3 ஏர்கிராஸ் இவி மாடல் ஆனது அடுத்த சில மாதங்களுக்குப் பிறகு வெளியாகலாம். அதேபோல தற்பொழுது … Read more

தமிழ்நாட்டில் JLR எலக்ட்ரிக் கார்களை தயாரிக்கும் டாடா மோட்டார்ஸ்

இந்தியாவின் முன்னணி டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கீழ் செயல்படும் ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR) எலக்ட்ரிக் கார்கள் மற்றும் ICE மாடல்களையும் தமிழ்நாட்டில் உள்ள ராணிப்பேட்டையில் ரூ.9,000 கோடி முதலீட்டில் ஆண்டுக்கு 2 லட்சம் கார்களை தயாரிக்கும் திறனுடன் தொழிற்சாலையை அமைக்க உள்ளது. சில வாரங்களுக்கு முன்பாக ரூ.9,000 கோடி முதலீடு ஒப்பந்தம் தமிழ்நாடு முதல்வர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களின் முன்னிலையில் கையெழுத்தாகியிருந்த நிலையில், தற்பொழுது தயாரிப்பு தொடர்பான திட்டங்கள் வெளியாகியுள்ளது. ஜாகுவார் லேண்ட் ரோவர் … Read more