2024 பஜாஜ் பல்சர் N250 விற்பனைக்கு வெளியானது

பஜாஜ் ஆட்டோவின் புதுப்பிக்கப்பட்ட பாடி கிராபிக்ஸ் உடன் பல்சர் N250 பைக்கில் கூடுதலான சஸ்பென்ஷன் மாற்றங்களுடன் விற்பனைக்கு ரூ.1,50,839 (எக்ஸ்ஷோரூம்) ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏபிஎஸ் மோடு, டிராக்‌ஷன் கண்ட்ரோல், மற்றும் எல்சிடி டிஜிட்டல் கிளஸ்ட்டர் உள்ளிட்ட அம்சங்களை கொண்டதாக அமைந்துள்ளது. 2024 பஜாஜ் பல்சர் என்250 புதுப்பிக்கப்பட்ட பல்சர் என்250 பைக்கில் முந்தைய டெலிஸ்கோபிக் ஃபோர்க்கிற்கு மாற்றாக 37 மிமீ அப்சைடு டவுன் ஃபோர்க் பெற்றுள்ளது. கோல்டன் நிறத்திலான ஃபோர்க் ஆனது வெள்ளை மற்றும் … Read more

கூடுதலாக 1,00,000 உற்பத்தியை அதிகரித்த மாருதி சுசூகி

ஹரியானா மாநிலத்தில் உள்ள மானசேர் ஆலையில் கூடுதலாக ஒரு அசெம்பிளி லைனை இணைத்து ஆண்டுக்கு 1,00,000 உற்பத்தி எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 9,00,000 ஆக இந்த ஆலையின் உற்பத்தி அதிகரித்துள்ளது. மாருதி சுசூகி இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தித் திறன் தற்பொழுது ஆண்டுக்கு 23.5 லட்சம் யூனிட்டுகளாக அதிகரித்துள்ளது. Maruti Suzuki மார்ச் 2024ல் மாருதி உற்பத்தி எண்ணிக்கை 3 கோடி கடந்த நிலையில் மானசேர் தொழிற்சாலையில் ஒட்டுமொத்தமாக 95 லட்சம் எண்ணிக்கை உற்பத்தி செய்திருந்தது. … Read more

எக்ஸைட் எனர்ஜி LFP பேட்டரியை பயன்படுத்த ஹூண்டாய் மற்றும் கியா ஒப்பந்தம்

இந்தியாவின் முன்னணி LFP பேட்டரி தயாரிப்பாராளன எக்ஸைட் எனர்ஜி உடன் ஹூண்டாய் மோட்டார் குழுமத்தின் ஹூண்டாய் மற்றும் கியா இடையே பேட்டரிகளை பெறுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தம் தென் கொரியாவில் உள்ள ஹூண்டாய் மோட்டார் குழுமத்தின் Namyang ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஹூண்டாய் மோட்டார் R&D தலைவர் Heui Won Yang மற்றும் கியா R&D பிரிவின் தலைவர்  Chang Hwan Kim மற்றும்  Duk Gyo Jeong, … Read more

2024 ஜாவா பெராக், 42 பாபர் விற்பனைக்கு வெளியானது

2024 ஆம் ஆண்டிற்கான ஜாவா பெராக் மற்றும் 42 பாபர் என இரு மோட்டார்சைக்கிள்களை விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. புதிய பெராக்கில் ஸ்டைலிஷான மேம்பாடுகளுடன் எவ்விதமான மெக்கானிக்கல் மாற்றங்களும் இல்லை. 42 பாபர் பைக்கில் இரண்டு புதிய வேரியண்ட் மற்றும் அலாய் வீல் கொண்ட மாடல்கள் சேர்க்கப்பட்டுள்ளது. பொதுவாக 334 சிசி சிங்கிள் சிலிண்டர் லிக்யூடு கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 29.92ps மற்றும் 32.74Nm டார்க் வெளிப்படுத்துகின்றது.  இதில் 6 வேக கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இரு பைக்குகளும் பொதுவாக … Read more

புதிய நிறத்துடன் ஹூண்டாய் ஐயோனிக் 5 அறிமுகமானது

ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தின் ஐயோனிக் 5 எலக்ட்ரிக் காரில் கூடுதலாக புதிய டைட்டன் கிரே நிறத்துடன் இன்டிரியரில் பிளாக் நிறத்தை ஆப்ஷனலாக பெற்றதாக வந்துள்ளது. தற்பொழுது D2C முறையில் ஆன்லைனில் புக்கிங் துவங்கப்பட்டு கட்டணமாக ரூ.1,00,000 லட்சம் ஆக வசூலிக்கப்படுகின்றது. Hyundai Ioniq 5 முந்தைய காரில் எந்தவொரு டிசைன் மாற்றங்களும் இல்லை, புதிய நிறம் மட்டும் சேர்க்கப்பட்டு பவர்டிரெயின் ஆப்ஷனை கொண்டுள்ளது. Ioniq 5 மாடலில் 215 bhp மற்றும் 350 Nm டார்க் வெளிப்படுத்துகின்ற … Read more

புதிய நிறத்தில் 2024 யமஹா ஃபேசினோ, ரே இசட்ஆர் வெளியானது

2024 ஆம் ஆண்டிற்கான யமஹா ஃபேசினோ 125 Fi ஹைபிரிட் மற்றும் ரே இசட்ஆர்125 Fi ஹைபிரிட் என இரு ஸ்கூட்டர்களிலும் மொத்தமாக 4 புதிய நிறங்கள் இணைக்கப்பட்டு டிரம் மற்றும் டிஸ்க் என இரு விதமான ஆப்ஷனை பெற்றுள்ளது. ஃபேசினோ 125 மற்றும் ரேஇசட்ஆர் 125 என இரு மாடல்களிலும் பொதுவாக  8.2 hp பவரை வழங்கும் 125சிசி எஃப்ஐ என்ஜின் அதிகபட்சமாக 10.3 Nm டார்க் வழங்குகின்றது. இதில் சிவிடி கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. 2024 … Read more

புதிய நிறங்களில் யமஹா MT-15 V2 விற்பனைக்கு வெளியானது

யமஹா வெளியிட்டுள்ள 2024 ஆம் ஆண்டிற்கான புதிய MT-15 V2 பைக்கில் கூடுதலாக இரண்டு புதிய நிறங்களில் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள 6 நிறங்களுடன் தற்பொழுது வந்துள்ள இரு நிறங்களுடன் ஒட்டுமொத்தமாக 8 நிறங்களை கொண்டுள்ளது. எம்டி-15 வெர்ஷன் 2.0 பைக் மாடலில் தொடர்ந்து 155cc, சிங்கிள்-சிலிண்டர், லிக்யூடு கூல்டு இயந்திரம் 10,000ஆர்பிஎம்மில் 18.4 hp மற்றும் 7,500ஆர்பிஎம்மில் 14.1 Nm டார்க்கை வெளியிடுகிறது, மேலும், 6-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. 2024 Yamaha MT-15 V2 இந்த … Read more

கியா கிளாவிஸ், கேரன்ஸ் எலக்ட்ரிக் கார்களின் அறிமுக விபரம்

2026 ஆம் ஆண்டுக்குள் இந்திய சந்தையில் கிளாவிஸ் மற்றும் கேரன்ஸ் எலக்ட்ரிக் என இரண்டு புதிய மாடல்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்திய சந்தையில் நடப்பு ஆண்டில் பிரீமியம் EV9 எஸ்யூவி விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. கியா 2024 முதலீட்டாளர் கூட்டத்தில் தலைவர் ஹோ சங் சாங் பேசுகையில், வளரும் சந்தைகளுக்கு ஏற்ற புதிய கியா எலக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்த உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்திய சந்தைக்கு இரண்டு எலக்ட்ரிக் கார்களை குறைந்த விலை சந்தைக்கு வெளியிட உள்ளது. … Read more

புதிய அனுபவத்தை டொயோட்டா டைசர் வழங்குமா..!

4 மீட்டருக்கு குறைந்த நீளம் உள்ள சந்தையில் வந்துள்ள டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசரின் முக்கிய சிறப்பம்சங்கள், ஆன்-ரோடு விலை பட்டியல் மற்றும் போட்டியாளர்களை விட எவ்வாறு வேறுபடுகின்றது. டொயோட்டா-சுசூகி கூட்டணியில் வெளியிடப்படுகின்ற ரீபேட்ஜ் என்ஜினியரிங் கார்களில் ஒன்றாக வெளியிடப்பட்டுள்ள டைசர், இந்திய சந்தையில் கிடைக்கின்ற மாருதி சுசூகி ஃபிரான்க்ஸ் மாடலாகும். Toyota Taisor: டிசைன், வசதிகள் மாருதி ஃபிரான்க்ஸ் காரின் அடிப்படையான டிசைனை பின்பற்றி வந்துள்ள டைசர் எஸ்யூவி மாடலில் முன்பக்கத்தில் தேன்கூடு கிரில் போன்ற … Read more

மஹிந்திராவின் XUV3XO பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை

ஏப்ரல் 29 ஆம் தேதி வெளியிடப்பட உள்ள மஹிந்திராவின் புதுப்பிக்கப்பட்ட XUV3XO எஸ்யூவி மாடலில் இடம்பெற உள்ள வசதிகள் மற்றும் முக்கிய சிறப்பம்சங்ளை தற்பொழுது வரை வெளிவந்த தகவல்களின் அடிப்படையில் தொகுத்து அறிந்து கொள்ளலாம். மஹிந்திரா XUV3XO 4 மீட்டருக்கு குறைந்த நீளம் உள்ள பிரசத்தி பெற்ற எஸ்யூவிகளில் ஒன்றான XUV300 என்ற மாடலை முற்றிலும் புதுப்பிக்கப்பட்ட மஹிந்திராவின் டிசைன் மொழி பெற்று வரவுள்ள முதல் மாடலாக விளங்க உள்ள எஸ்யூவிக்கு புதிய XUV3XO என்ற பெயரை … Read more