Best Top 10 Selling Cars FY24-25 : இந்தியர்கள் அதிகம் விரும்பி வாங்கிய சிறந்த 10 கார்கள் – FY24-25

2024-2025 ஆம் நிதியாண்டில் இந்திய சந்தையில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட கார்களில் சிறந்த 10 கார்களில் மாருதி சுசூகி வேகன் ஆர் முதலிடத்தில் 1,98,451 யூனிட்டுகளை பதிவு செய்துள்ளது. அதனை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் டாடா மோட்டார்சின் பஞ்ச் எஸ்யூவி 1,96,572 ஆக பதிவு செய்துள்ளது. குறிப்பாக விற்பனை செய்யப்பட்டுள்ள மாடல்களில் டாப் 10ல் 4 மாடல்கள் எஸ்யூவி ஆக உள்ளன. அவை பஞ்ச், கிரெட்டா, பிரெஸ்ஸா மற்றும் ஸ்கார்பியோ உள்ளன. டாப் 10 இடங்களில் 6 … Read more

58.31 லட்சம் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்த ஹோண்டா 2 வீலர்ஸ் இந்தியா | Automobile Tamilan

ஹோண்டா மோட்டார்சைக்கிள் (HMSI) நிறுவனத்தின் ஒட்டுமொத்த 2024-2025 ஆம் நிதியாண்டில் 58.31 லட்சம் விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. முந்தைய நிதியாண்டை விட 19 % வரை கூடுதலான வளர்ச்சி அடைந்துள்ளது. மாதாந்திர மார்ச் 2025ல் இந்நிறுவனம் 4,27,448 யூனிட்களை விற்ற நிலையில் உள்நாட்டு விற்பனையில் 4,01,411 யூனிட்களும் ஏற்றுமதியில் 26,037 யூனிட்களும் உள்ளது. ஹோண்டா நிறுவனம் தனது முதல் ஆக்டிவா இ ஸ்கூட்டர் மற்றும் QC1 மாடலை விற்பனைக்கு வெளியிட்டு குறிப்பிட்ட சில நகரங்களில் டெலிவரியும் … Read more

ரூ.62,000 வரை மாருதி சுசுகி கார்களின் விலை உயருகின்றது | Automobile Tamilan

வரும் ஏப்ரல் 8, 2025 முதல் மாருதி சுசுகியின் பிரசத்தி பெற்ற நடுத்தர எஸ்யூவி கிராண்ட் விட்டாரா விலை ரூ.62,000 வரை உயர்வதுடன் குறைந்தபட்சமாக பிரபலமான ஃபிரான்க்ஸ் ரூ.2,500 வரை உயருகின்றது. மாருதி விலை உயர்வு பட்டியல் நிறுவனம் செலவுகளை மேம்படுத்தவும், வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் தாக்கத்தைக் குறைக்கவும் உறுதிபூண்டுள்ளது, அதிகரித்த வரும் செலவுகளை ஈடுகட்ட விலை உயர்வினை செயல்படுத்தியுள்ளோம் என மாருதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Grand Vitara ரூ.62,000 Eco ரூ.22,500 Wagon-R ரூ.14,000 Ertiga ரூ.12,500 … Read more

கைலாக் அறிமுக விலை சலுகையை நீட்டித்த ஸ்கோடா | Automobile Tamilan

ஸ்கோடா ஆட்டோவின் புதிய கைலாக் காம்பேக்ட் எஸ்யூவி மாடலுக்கு அமோக ஆதரவினை பெற்றுள்ள நிலையில் 15,000க்கு மேற்பட்ட முன்பதிவுகளை மே 2025 இறுதிக்குள் டெலிவரி வழங்க திட்டமிட்டுள்ளது. கைலாக் ரூ.7.89 லட்சம் முதல் ரூ.14.40 லட்சம் வரையிலான அறிமுக சலுகை விலையை ஏப்ரல் 2025 வரை நீட்டித்துள்ளது. இதன் மூலம் மேலும் முன்பதிவு எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவில் வெற்றிகரமாக 25 ஆண்டுகளை கடந்துள்ள ஸ்கோடா வரலாற்றில் மார்ச் 2025 மாதந்திர விற்பனை எண்ணிக்கை முதன்முறையாக … Read more

58.9 லட்சம் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்த ஹீரோ மோட்டோகார்ப் | Automobile Tamilan

நாட்டின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப் 2024-2025 ஆம் நிதியாண்டில் சுமார் 5,899,187 யூனிட்டுகளை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. மார்ச் 2025 மாதந்திர விற்பனை எண்ணிக்கை 549,604 ஆக பதிவு செய்துள்ளது. கடந்த டிசம்பர் 2024 வரை தொடர்ந்து 24 ஆண்டுகளாக இந்தியாவின் முதன்மையான இருசக்கர வாகன தயாரிப்பாளராக ஹீரோ மோட்டோகார்ப் விளங்கி வருகின்றது. இந்நிறுவனத்தின் விடா பிராண்டின் மூலம் ஏப்ரல் 2024 முதல் மார்ச் 2025 வரை 58,000 மின்சார ஸ்கூட்டர்கள் … Read more

FY24-25ல் இந்தியாவின் முதன்மையான கார் மாருதி சுசூகி வேகன் ஆர்

டால்பாய் ஹேட்ச்பேக் என அறியப்படுகின்ற மாருதி சுசூகியின் பிரசத்தி பெற்ற வேகன் ஆர் காரின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை 2024-2025 ஆம் நிதியாண்டில் 1,98,451 கடந்து நாட்டின் முதன்மையான கார் மாடலாக தொடர்ந்து நான்காவது முறையாக பதிவு செய்துள்ளது. கடந்த 2024 காலாண்டர் வருடத்தின் படி டாடாவின் பஞ்ச் முதலிடத்தை கைப்பற்றினாலும், நிதியாண்டின் படி தொடர்ந்து FY 22, 23, 24 மற்றும் 25 என நான்காவது ஆண்டாக மாருதி வேகன் ஆர் கைப்பற்றியுள்ளது. Maruti Wagon … Read more

இந்தியாவில் 2025 கேடிஎம் 390 என்டூரோ ஆர் விற்பனைக்கு எப்பொழுது.? | Automobile Tamilan

இந்திய சந்தையில் ஏற்கனவே 2025 ஆம் ஆண்டிற்கான கேடிஎம் 390 என்டூரோ ஆர் மாடலுக்கான முன்பதிவு நடைபெற்று வரும் நிலையில், மீண்டும் சமூக ஊடங்களில் கேடிஎம் டீசரை வெளியிட்டுள்ளதால் நடப்பு ஏப்ரல் மாத மத்தியில் விற்பனைக்கு ரூ.3.50 லட்சத்தில் எதிர்பார்க்கப்படுகின்றது. KTM 390 Enduro R 390 அட்வென்ச்சர் மாடலை விட மிகவும் அதிகமான ஆஃப் ரோடு சாகசங்களை மேற்கொள்ளுபவர்களுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள என்டூரோ ரக மாடலிலும் 399சிசி LC4c எஞ்சினை பகிர்ந்து கொள்ளுகின்றது. இந்த … Read more

மூன்று கார்களில் டார்க் எடிசனை வெளியிடும் சிட்ரோன்

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கருப்பு நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க துவங்கியுள்ள நிலையில், சிட்ரோன் நிறுவனமும் தனது C3, ஏர்கிராஸ் மற்றும் பாசால்ட் கூபே என மூன்று மாடல்களிலும் டார்க் எடிசன் என்ற பெயரில் கருமை நிறத்தை பெற்ற மாடல்களை விற்பனைக்கு வெளியிடுவதனை உறுதி செய்யும் வகையில் டீசரை வெளியிட்டுள்ளது. நிறத்தை தவிர பெரிதாக எந்த தொழில்நுட்பத்தில் எந்த மாற்றமும் இருக்க வாய்ப்பில்லை. இந்த மாடல்களின் எஞ்சின் ஆப்ஷனிலும் எந்த மாற்றமும் இருக்காது. இந்த கார்களில் C3, ஏர்கிராஸ் … Read more

ஹூண்டாய் அல்கசாரில் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே அறிமுகம் | Automobile Tamilan

ஹூண்டாய் நிறுவனத்தின் 6 மற்றும் 7 இருக்கை பெற்ற அல்கசார் எஸ்யூவி மாடலின் Prestige, Platinum, மற்றும் Signature வேரியண்டுகளுக்கு வயர்டு வசதிக்கு மாற்றாக பிரத்தியேக அடாப்டர் வழங்கப்பட்டுள்ளதால் வயர்லெஸ் முறையில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கொடுக்கப்பட்டுள்ள அடாப்டரினை யூஎஸ்பி போர்ட்டில் இணைத்தாலே தானாகவே வயர்டு இணைப்பு வயர்லெஸ் முறைக்கு மாற்றப்பட்டு விடும், இதற்கு வேறு எவ்விதமான கூடுதல் செட்டப் மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என ஹூண்டாய் குறிப்பிட்டுள்ளது. காரில் … Read more

சாலையில் 2 கோடி பல்சர் பைக்குகள்..! பஜாஜ் ஆட்டோ சிறப்பு சலுகைகள்.! – Bajaj Pulsar Range 2 crore sales milestone

இந்தியாவின் ஸ்போர்ட்டிவ் பைக் சந்தையில் முன்னணி தயாரிப்பாளராக விளங்கும் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் மிகவும் பிரபலமான பல்சர் வரிசை பைக்குகளின் விற்பனை எண்ணிக்கை 2 கோடி இலக்கை வெற்றிகரமாக கடந்துள்ள நிலையில் ரூ.1,184 முதல் ரூ.7,379 வரை சிறப்பு தள்ளுபடியை அறிவித்துள்ளது. 2001 ஆம் ஆண்டு சந்தையில் நுழைந்த பல்சர் பைக் தற்பொழுது பல்சர் கிளாசிக், என் சீரிஸ், என்எஸ் சீரிஸ், ஆர்எஸ்200 மற்றும் 220F என விரிவடைந்து மொத்தமாக 12 மாடல்கள் விற்பனையில் உள்ளது. இந்தியாவில் … Read more