சாலையோரம் பூத்துக்குலுங்கும் ஜெகரண்டா மலர்

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் கோடை காலத்தில் சில பூக்கள் மட்டும் மலரும். இதில், சாலையோரங்களில் பூக்கும் ஜெகரண்டா, பிளேம் ஆப் தி பாரஸ்ட் போன்ற மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. இந்த மலர்கள் ஆண்டு தோறும் மார்ச் மாதம் பூக்கத் துவங்கி மே மாதம் வரை காணப்படும். தற்போது, இந்த மலர்கள் ஊட்டி – கோவை சாலையில் மரப்பாலம் முதல் பர்லியார் வரையிலும், ஊட்டி – மஞ்சூர் சாலையில் பல்வேறு பகுதிகளிலும், ஊட்டி-கோத்தகிரி … Read more

சென்னை அண்ணாசாலையில் உள்ள எல்.ஐ.சி. கட்டடத்தின் மேல்தளத்தில் தீ விபத்து

சென்னை: சென்னை அண்ணாசாலையில் உள்ள எல்.ஐ.சி. கட்டடத்தின் மேல்தளத்தில் தீ விபத்துஏற்பட்டுள்ளது. விடுமுறை நாளில் எல்.ஐ.சி. கட்டடத்தின் 14-வது மாடியின் மேல்தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவியுள்ளது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

‘ஸ்டண்ட்’ செய்வதாக கூறி திருமண நிகழ்ச்சியில் இதெல்லாம் தேவையா?: பொம்மை துப்பாக்கி வெடித்ததால் மணமகள் பீதி

மும்பை: ‘ஸ்டண்ட்’ செய்வதாக கூறி திருமண நிகழ்ச்சியில் பொம்பை துப்பாக்கியை பயன்படுத்திய மணமகளின் மீது வெடித்தால் அவர் பீதிடைந்தார். திருமண நிகழ்ச்சிகளில் போட்டோ ஷோ நடத்துவதற்காக விதவிதமான ‘ஸ்டண்ட்’ செய்வது தற்போது வாடிக்கையாகிவிட்டது. அந்த வகையில் மஹாராஷ்டிராவில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், மணமகனும், மணமகளும் கையில் துப்பாக்கியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். பொம்மை துப்பாக்கி என்பதால், அந்த துப்பாக்கியின் பட்டனை ஆன் செய்ததும் அதிலிருந்து பட்டாசு தீப்பொறிகள் பறந்தன. தீவிரமான வெடி பொருளாக இல்லாவிட்டாலும் கூட, … Read more

மன்னார்குடி – தஞ்சாவூர் சாலையில் ஒரு தென்னை மரத்தில் 4 கிளைகள்: ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்

மன்னார்குடி: மன்னார்குடி – தஞ்சாவூர் சாலையில் உள்ள மன்று நகரில் 4 கிளைகளுடன் உள்ள தென்னைமரத்தை பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து செல்கின்றனர்.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி – தஞ்சாவூர் சாலையில் மன்று நகரில் சாலை ஓரம் தென்னை மரங்கள் உள்ளது. இதில் ஒரு தென்னை மரத்தின் தண்டிலிருந்து இரண்டு கிளைகள் வந்துள்ளது. அதில் ஒரு கிளையில் தென்னை மட்டைகளுடன் தேங்காய் காய்த்துள்ளது. இதே போல் மற்றொரு கிளை யில் இருந்து மற்றும் ஒரு கிளை முளைத்து, அதிலும் தேங்காய்கள் … Read more

எல்.ஐ.சி. கட்டிடத்தில் ஏற்பட்ட தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது

சென்னை: சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்.ஐ.சி. கட்டிடத்தில் ஏற்பட்ட தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. 6 தீயணைப்பு வாகனங்களில் வந்த 30க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். பெயர் பலகையில் உள்ள விளக்கில் ஏற்பட்ட மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

நீச்சல் பயிற்சியின்போது பரிதாபம்: ஆற்றில் மூழ்கி தந்தை, மகன் பலி

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கொட்டியூர் அருகே உள்ள கேளகம் பகுதியைச் சேர்ந்தவர் லிஜோ ஜோஸ் (33). அவரது மகன் நெபின் ஜோசப் (6). நேற்று லிஜோ ஜோஸ் தனது மகனுக்கு நீச்சல் சொல்லிக் கொடுப்பதற்காக அருகில் உள்ள ஆற்றுக்கு அழைத்துச் சென்றார். ஆற்றில் ஒரு தற்காலிக தடுப்பணை உள்ளது. அந்த பகுதியில் வைத்து லிஜோ தனது மகனுக்கு நீச்சல் பயிற்சி அளித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத நெபின் ஜோசப் சகதியில் சிக்கிக்கொண்டான். உடனே அவனை … Read more

கிருஷ்ணகிரி அருகே மேய்ச்சல் நிலங்களில் மண் அள்ளி விற்பனை: கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் புகார்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே விவசாயிகள் பயன்படுத்தி வரும் மேய்ச்சல் நிலத்தை அபகரிப்பதை தடுக்க வேண்டும் என, 50க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். கிருஷ்ணகிரி அருகே, திப்பனப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் கிருஷ்ணவேணி கிருஷ்ணன், வி.சி.க பிரமுகர் மாதேஷ் ஆகியோர் தலைமையில், 50க்கும் மேற்பட்டோர் நேற்று கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் அளித்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:  கிருஷ்ணகிரி அருகே ஜிஞ்சுப்பள்ளி வருவாய் கிராமத்தில், திப்பனப்பள்ளி, ஜிஞ்சுப்பள்ளி பஞ்சாயத்துகள் உள்ளன. இங்குள்ள 200 … Read more

ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 72 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி

ஐதராபாத்: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 72 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்தது. அயடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் மட்டுமே எடுத்து 72 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இவ்வார இறுதியில் புதிய நிதி ஆண்டின் முதல் நிதி கொள்கையை அறிவிக்க உள்ளது இந்திய ரிசர்வ் வங்கி!

மும்பை: இந்திய ரிசர்வ் வங்கி இவ்வார இறுதியில் புதிய நிதி ஆண்டின் முதல் நிதி கொள்கையை அறிவிக்க உள்ளது. பணவீக்க விகிதம் எதிர்பார்த்த அளவுக்கு குறையாததால், அதைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் அறிவிக்கப்பட உள்ளது. பணவீக்கத்தை மேலும் குறைக்க குறுகியகால கடன் வட்டி விகிதத்தை மேலும் 0.25% ரிசர்வ் வங்கி உயர்த்தலாம் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் முதல் இதுவரை ரிசர்வ் வங்கி குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை 6 முறை உயர்த்தி … Read more

அதிமுக ஆட்சி அமைய அயராது உழைப்பேன், ஆட்சி அமையும் நாள் வெகு தொலைவில் இல்லை.! எடப்பாடி பழனிசாமி பேச்சு

விழுப்புரம்: மீண்டும் அதிமுக ஆட்சி அமைய அயராது உழைப்பேன், அதிமுக ஆட்சி அமையும் நாள் வெகு தொலைவில் இல்லை என இபிஎஸ் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளரான பிறகு எடப்பாடி பழனிசாமி, சொந்த ஊரான சேலத்திற்கு செல்லும் வழியில் விழுப்புரத்தில் அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் சி.வி சண்முகம் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற நான், கட்சியை நல்லமுறையில் வழிநடத்தி மீண்டும் அதிமுக ஆட்சி அமைய அயராது உழைப்பேன் என்று கூறினார். … Read more