தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கரூர், திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை,தஞ்சை, தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மலைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.   

ஒன்றிய பாஜக அரசின் கடந்த 4 ஆண்டில் அமலாக்கத்துறை வழக்கு பதிவு 505% அதிகரிப்பு: 9 ஆண்டுகளில் ரெய்டு எண்ணிக்கை 2,555% ஆக உயர்வு

புதுடெல்லி: ஒன்றிய பாஜக அரசின் ஒன்பது ஆண்டுகளில் அமலாக்கத்துறை வழக்குபதிவு 505% அதிகரித்துள்ள நிலையில், கடந்த 9 ஆண்டுகளில் ரெய்டுகளின் எண்ணிக்கை 2,555 சதவீதமாக உயர்ந்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. ஒன்றிய அரசின் கீழ் தன்னாட்சி விசாரணை அமைப்பாக செயல்படும் அமலாக்கத்துறை, அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம், பெமா மற்றும் பணமோசடி தடுப்புச் சட்டம், தப்பியோடிய குற்றவாளிகள் சட்டம் ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அமலாக்க … Read more

பங்குச்சந்தை முதலீட்டில் நஷ்டம் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

மதுரை: மதுரை அவனியாபுரம் பிரசன்னா காலனியை சேர்ந்தவர் ஜெகதீஸ்(39). இவரது மனைவி மணிமாலா. இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை உள்ளது. ஜெகதீஸ் கோயம்புத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர் தனது பணம் மற்றும் நண்பர்களிடம் கடனாக பணத்தை பெற்று பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ளார். ஆனால் பங்குச்சந்தையில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் கடும் மன உளைச்சலிருந்த அவர், நேற்று முன் தினம் காலையில் அவரது வீட்டில் விஷம் குடித்து … Read more

சென்னை சோழிங்கநல்லூர் அருகே விளையாட்டு நகரம் அமைய உள்ள இடத்தை ஆய்வு செய்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: சென்னை சோழிங்கநல்லூர் அருகே விளையாட்டு நகரம் அமைய உள்ள இடத்தை அமைச்சர் உதயநிதி நேரில் ஆய்வு செய்தார். செயின்ட் ஜோசப் கல்லூரி பின்புறம் உள்ள அரசு நிலத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அதிகாரிகளுடன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து நாளை மேல்முறையீடு செய்கிறார் ராகுல்காந்தி

டெல்லி: அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து நாளை ராகுல்காந்தி மேல்முறையீடு செய்ய உள்ளார். குஜராத் மாநிலம் சூரத் அமர்வு நீதிமன்றத்தில் ராகுல் காந்தி நாளைமேல்முறையீடு செய்கிறார். அவதூறு வழக்கில் கோர்ட் சிறை தண்டனை வழங்கியதை அடுத்து ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி செய்யப்பட்டார்.

கொள்ளிடம் பகுதியில் நெல் கொள்முதல் நிறுத்தம்: மீதமுள்ள நெல்மூட்டையை விற்க முடியாமல் விவசாயிகள் அவதி

கொள்ளிடம்: கொள்ளிடம் பகுதியில் நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்வது நிறுத்தப்பட்டதால் மீதமுள்ள நெல் மூட்டைகளை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் அவதி அடைந்து வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் உரிய இடங்களில் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகத்தின் மூலம் 30க்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகள் சம்பா அறுவடை செய்த நெல் மூட்டைகள் விவசாயிகளிடமிருந்து தொடர்ந்து கொள்முதல் செய்யப்பட்டு வந்தன. சம்பா அறுவடைப்பணி முற்றிலும் முடிந்து விட்டதால் … Read more

புதுவையில் தங்க முலாம் பூசிய போலி நகைகளை அடகு வைத்து மோசடி: காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்

புதுவை: புதுவையில் தங்க முலாம் பூசிய போலி நகைகளை அடகு வைத்தும், நகைக் கடைகளில் விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்ட புகாரில் உதவி ஆய்வாளர் ஜெரோம் பணியிடை நீக்கம் செய்துள்ளனர். இந்த வழக்கில் அவரது தோழி புவனேஸ்வரி  உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

மும்பை விமான நிலையத்தில் ஜோடியாக வலம்வந்த எம்பி – நடிகை: அரசியல், திரைத்துறையில் பரபரப்பு

மும்பை: மும்பை விமான நிலையத்தில் எம்பி ராகவ் சந்தாவும், நடிகை பரினீதி சோப்ராவும் ஒன்றாக வந்ததால் அவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்பி ராகவ் சந்தாவும், பாலிவுட் நடிகை பரினீதி சோப்ராவும் கடந்த சில வாரங்களாக அரசியல் மற்றும் சினிமா துறையில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றனர். இருவரும் டேட்டிங்கில் இருப்பதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்தன. அதனை உறுதிப்படுத்தும் விதமாக நேற்றிரவு மும்பை … Read more

வன எல்லைப்பகுதிகளில் தாழ்வாக செல்லும் மின் இணைப்புகள் குறித்து மின்வாரிய அதிகாரிகளுடன், வனத்துறையினர் ஆய்வு: வனவிலங்குகள் உயிரிழப்பை தடுக்க நடவடிக்கை

உடுமலை: தர்மபுரி மற்றும் கோவை வனப்பகுதி எல்லைகளில் மின்சாரம் தாக்கி காட்டு  யானைகள் இறந்ததை தொடர்ந்து திருப்பூர் வனக்கோட்டத்தில் சோதனை பணிகளை  தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. திருப்பூர் வனக்கோட்டத்தில் வன எல்லைப்பகுதிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் அமைந்துள்ள விளைநிலங்கள் மற்றும் அருகில் உள்ள கிராமங்களிலும் வன உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும் வண்ணம் மின் இணைப்புகள் தாழ்வாக அமைக்கப்பட்டுள்ளதா என்றும் சோலார் மின்வேலிகளில் திருட்டுத்தனமாக மின்சாரம் பாய்ச்சப் படுகிறதா என்பதையும்  மின் வாரிய பணியாளர்களுடன் வனப்பணியாளர்கள் இணைந்து தொடர்ந்து சோதனையில் … Read more

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வேலூர், திருப்பத்தூர், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் மழை பெய்யும். விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, சேலம், ஈரோடு, பெரம்பலூர், அரியலூர், திருச்சி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், திண்டுக்கல் மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு உளள்து என்று வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது.