‘பாரத் பந்த்’ போன்ற படங்களில் நடித்த பிரபல தெலுங்கு நடிகர் சென்னையில் மரணம்

ஐதராபாத்: ‘பாரத் பந்த்’ போன்ற படங்களில் நடித்த பிரபல தெலுங்கு நடிகர் காஸ்ட்யூம்ஸ் கிருஷ்ணா (வயது 88) இன்று சென்னையில் காலமானார். பிரபல டோலிவுட் நடிகரும், தயாரிப்பாளருமான காஸ்ட்யூம்ஸ் கிருஷ்ணா, சென்னையில் வசித்து வந்தார். வயது மூப்பின் காரணமாக கடந்த சில மாதங்களாக தொடர் சிகிச்சையில் இருந்து வந்தார். இந்நிலையில் இன்று காலை அவர் காலமானார். இவரது மறைவுக்கு தெலுங்கு திரைப்படத் துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தெலுங்கு திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராகவும், திரைத்துறை பிரபலங்களின் காஸ்ட்யூம் … Read more

தஞ்சை அருகே இன்று சுற்றுலா பஸ் கவிழ்ந்து 2 பேர் பரிதாப பலி: 44 பேர் காயம்

தஞ்சை: கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து நாகை வேளாங்கண்ணிக்கு சுற்றுலா பஸ் நேற்று இரவு புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. பஸ்சில் 49 பயணிகள் இருந்தனர். திருச்சூரை சேர்ந்த சமீர்(45) உள்பட 2 டிரைவர்கள் பஸ்சை ஓட்டி வந்தனர். இன்று அதிகாலை தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் இருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் ஒக்கநாடு கீழையூர் கீழத் தெருவில் ஒரு சாலை வளைவில் சாலையோர தடுப்பு சுவரில் மோதி பஸ் கவிழ்ந்தது. இதில் பஸ்சில் பயணம் செய்த திருச்சூரை சேர்ந்த … Read more

சென்னை ஐசிஎஃப் காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார் டிஜிபி சைலேந்திரபாபு

சென்னை: சென்னை ஐசிஎஃப் காவல் நிலையத்தில் டிஜிபி சைலேந்திரபாபு திடீர் ஆய்வு மேற்கொண்டார். காவல் நிலைய பதிவேடுகள், குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து டிஜிபி சைலேந்திரபாபு ஆய்வு செய்தார். சிறப்பாக பணிபுரிந்த காவலர்களை பாராட்டிய டிஜிபி அவர்களுக்கு ரொக்கப் பரிசும் வழங்கினார்

கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் மாமனை கொன்ற கொள்ளையன் என்கவுன்டரில் சுட்டுக்கொலை: உத்தரபிரதேச போலீசார் அதிரடி

முசாபர்நகர்: கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் மாமனை சுட்டுக் கொன்ற கொள்ளையனை உத்தரபிரதேச போலீசார் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர். இந்திய கிரிக்கெட் அணியின்  முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவின் மாமா உள்ளிட்ட குடும்பத்தார் பஞ்சாப் மாநிலம் பதான்கோட் நகரில் வசித்து வந்தனர். கடந்த 2020ம் ஆண்டு ஆக. 19ம் தேதி  சுரேஷ் ரெய்னாவின் மாமா உள்ளிட்ட குடும்பத்தார் 4 பேரைத் தாக்கி கொள்ளையர்கள் கொள்ளையடித்தனர். இதில் ரெய்னாவின் மாமா அசோக்குமார் கொல்லப்பட்டார். கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலில் அசோக் … Read more

நள்ளிரவில் தீப்பிடித்து எரிந்த ஆம்னி பஸ்: 4 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு

சாத்தூர்: சாத்தூரில் நள்ளிரவில் ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. துரிதமாக செயல்பட்டு டிரைவர் பயணிகளை கீழே இறக்கியதால் 14 பேர் உயிர்தப்பினர். இந்த சம்பவத்தில் கோவில்பட்டி-மதுரை நான்குவழிச்சாலையில் 4 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் இருந்து பயணிகளை ஏற்றி கொண்டு கோயம்புத்தூருக்கு நேற்றிரவு 9.30 மணியளவில் ஆம்னி பஸ் புறப்பட்டது. இந்த பஸ்சை டிரைவர் அகிலன் (45) ஓட்டி வந்தார். பஸ்சில் 14 பயணிகள் இருந்தனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நள்ளிரவு … Read more

பத்திரப்பதிவு கட்டணம் குறைப்பு அமலாகியுள்ள நிலையில் உடனே நடைமுறைப்படுத்த பதிவுத்துறை ஐஜி உத்தரவு

சென்னை: பத்திரப்பதிவு கட்டணம் குறைப்பு அமலாகியுள்ள நிலையில் உடனே நடைமுறைப்படுத்த பதிவுத்துறை ஐஜி உத்தரவு அளித்துள்ளார். விளைநிலங்கள், கட்டடங்களுக்கான வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்பட்டுள்ளதையும் உடனே அமல்படுத்த ஆணை பிறப்பித்துள்ளனர்.

ஒடிசா எல்லையை நோட்டமிட்ட அதிகாரிகளே ஆந்திராவுக்கு திரும்பி செல்லுங்கள்!: ஒன்றிய அமைச்சரின் கோஷத்தால் சலசலப்பு

கோராபுட்: ஒடிசா – ஆந்திர மாநில எல்லையில் உள்ள கோடியாவுக்கு வந்த ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், அங்கிருந்த ஆந்திர மாநில் அதிகாரிகளிடம் ‘ஆந்திராவுக்குத் திரும்பிச் செல்லுங்கள்’ என்று பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஒடிசா மற்றும் ஆந்திரா ஆகிய இரு மாநிலங்களும் எல்லை கிராமமான கோடியாவை சொந்தம் கொண்டாடி வருகின்றன. ‘உத்கல் திவாஸ்’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஒன்றிய கல்வித்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான தர்மேந்திர பிரதான் கோடியாவிற்கு வந்தார். அப்போது அங்கிருந்த ஆந்திர மாநில … Read more

அகஸ்தியர் அருவிக்கு மக்கள் படையெடுப்பு: கார், வேன்களில் குடும்பத்துடன் வந்து உற்சாக குளியல்

வி.கே.புரம்: குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீரின்றி வறண்டதால் அகஸ்தியர் அருவிக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்த வண்ணம் உள்ளனர். நேற்று விடுமுறை தினம் என்பதால் கார், வேன்களில் குடும்பத்துடன் வந்து உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். நெல்லை மாவட்டத்தில் புகழ்பெற்ற பாபநாசம் அகஸ்தியர் அருவியில், கோடை காலம் உட்பட ஆண்டு முழுவதும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் இங்கு தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குளித்து விட்டு செல்வது வழக்கம். தற்போது கோடை காலம் … Read more

வேலூர் அரசு பாதுகாப்பு இல்லத்திலிருந்து தப்பியோடிய 2 சிறார்களை சென்னை போலீசார் கைது செய்தனர்

வேலூர்: வேலூர் அரசு பாதுகாப்பு இல்லத்திலிருந்து தப்பியோடிய 2 சிறார்களை சென்னை போலீசார் கைது செய்தனர். மணலியில் கடையின் பூட்டை உடைக்க முற்பட்டபோது ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர்களிடம் சிக்கினர். வேலூர் அரசு பாதுகாப்பு இல்லத்தில் இருந்து 27ஆம் தேதி 6 சிறார்கள் தப்பிய நிலையில் 3 பேர் பிடிபட்டனர்

பீகார் மாநிலத்தில் வன்முறை ஏற்பட்ட நிலையில் தற்போதைய நிலைமை குறித்து ஆளுநரிடம் கேட்டறிந்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா

டெல்லி: பீகார் மாநிலத்தில் வன்முறை ஏற்பட்ட நிலையில் தற்போதைய நிலைமை குறித்து ஆளுநரிடம் உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டறிந்தார்.பீகாரில் பதற்றமான சூழலை கட்டுக்குள் கொண்டுவர துணை ராணுவ படையினரை உள்துறை அமைச்சகம் அனுப்புகிறது. ஏற்கெனவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நிலைமை கண்காணிக்கப்பட்டு வரும்நிலையில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  ராமநவமியையொட்டி நாலந்தா, சசாரம் ஆகிய மாவட்டங்களில் இரு தரப்பினரிடையேயான மோதல் வன்முறையில் முடிந்தது. வன்முறையில் ஒருவர் உயிரிழந்தநிலையில் பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதி இதுவரை 80 பேரை … Read more