கட்சித்தாவல் தடை சட்டத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் தேர்தலில் நிற்பதை தடுக்க முடியுமா?: உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் கமிஷன் விளக்கம்

புதுடெல்லி: கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் அதே தொகுதியில் இடைத்தேர்தலில் போட்டியிடுவதை தடுக்க ஒன்றிய அரசு தான் முடிவு எடுக்க முடியும் என்று உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயா தாக்கூர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்,’ ஒரு எம்பி அல்லது எம்எல்ஏ சட்டவிதி எண் 191(1)(இ) பிரிவின் 10வது விதிமுறைப்படி கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்டால் அந்த … Read more

கொடுக்கல், வாங்கல் தகராறில் சமாதானம் பேச வந்த ஆட்டோ டிரைவர் கொலை

திருப்பூர்: திருப்பூர் கொங்கு மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (40). ஆட்டோ டிரைவர். இவரது நண்பர் சக்திவேக்கும், அந்த பகுதியை சேர்ந்த முனியசாமி (35), மாரியப்பன் (40) ஆகியோருக்கும்  பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னை இருந்து வந்தது. கடந்த 29ம் தேதி  சக்திவேல், மணிகண்டனிடம் சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார். அவர், கொங்கு மெயின்ரோடுக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதில், தகராறு முற்றவே ஆத்திரமடைந்த மாரியப்பன், முனியசாமி ஆகிய இருவரும் சேர்ந்து, மணிகண்டனை தாக்கி கத்தியால் குத்தியுள்ளனர். இதில் … Read more

ஆரம்ப சுகாதார நிலையத்தை தொடர்ந்து கால்நடை மருத்துவமனை கட்டும் நடிகை

பெங்களூரு: பழம்பெரும் கன்னட நடிகை லீலாவதி (85), தமிழில், ‘பட்டினத்தார்’, ‘வளர்பிறை’, ‘அவள் ஒரு தொடர்கதை’, ‘அவர்கள்’, ‘நான் அவனில்லை’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பல மொழிகளில் 500க்கு மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். பெங்களூருவை அடுத்த சோலதேவனஹல்லி மலைப்பகுதியில் உள்ள பண்ணை வீட்டில்தான் தற்போது லீலாவதி வசித்து வருகிறார். இவரது மகன் வினோத் ராஜூ கன்னட சினிமாவில் நடிகராக இருக்கிறார்.சோலதேவனஹல்லியில் ஆரம்ப சுகாதார நிலையத்தை சமீபத்தில்தான் லீலாவதி கட்டினார். இதன் மூலம் ஏழைகள் பயன்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் … Read more

கடன் தருவதாக பெண்களிடம் ஆதார், பான் கார்டு விவரம் சேகரிப்பு: பைனான்ஸ் ஊழியர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை

வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த பெருமாள்பேட்டை பகுதியில் சிலர் மகளிர் குழுவினருக்கு  ரூ.1 லட்சம் வட்டியில்லா கடன் உதவி அளிப்பதாக கூறி, அப்பகுதியில் உள்ள பெண்களின் ஆதார் கார்டு, பான் கார்டு உள்ளிட்ட விவரங்களை சேகரித்து வருவதாக வாணியம்பாடி நகர போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அங்கு சென்ற வாணியம்பாடி நகர போலீசாரும் வருவாய்த்துறையினரும், விவரங்களை சேகரித்து கொண்டிருந்த 2 பெண்களை பிடித்து விசாரித்தனர். இதில், அவர்கள் சேலம் பகுதியை சேர்ந்த தனியார் நிதி நிறுவன … Read more

குமாரசாமி கட்சிக்கு தொடர்புடைய கூட்டுறவு வங்கிகளில் ஐடி ரெய்டு

ஹாசன்: கர்நாடக மாநிலத்தில் மதசார்பற்ற ஜனதா தள கட்சிக்கு தொடர்புடைய கூட்டுறவு வங்கிகளில் வருமானவரித்துறை சோதனை நடத்தினர். கர்நாடக மாநிலத்தில் மே 10ம் தேதி தேர்தல் நடக்கிறது. இந்நிலையில்குமார சாமி தலைமையிலான மஜத கட்சிக்கு தொடர்புடைய கூட்டுறவு வங்கிகளில் வருமானவரித்துறையினர் திடீரென சோதனை மேற்கொண்டுள்ளனர். இந்த கூட்டுறவு வங்கியின் இயக்குனர்களாக முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், முன்னாள் அமைச்சர் எச்.டி.ரேவண்ணாவின் மகன் சூரஜ் ரேவண்ணா இருக்கிறார். இவர் மஜத மேலவை உறுப்பினராக உள்ளார். மேலும் மஜத எம்எல்ஏ … Read more

செய்யாறு அருகே அரசு பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை ஆசிரியர் போக்சோவில் கைது

செய்யாறு: செய்யாறு அருகே அரசு பள்ளியில் 9ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆங்கில ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த கூழமந்தலில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இங்கு காஞ்சிபுரம் டவுன் ராஜகோபால் தெருவை சேர்ந்த முருகன்(43) என்பவர்  ஆங்கில ஆசிரியராக உள்ளார். இவர் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு  கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டி வந்தாராம். இதேபோல் நேற்று … Read more

கொரோனா தொற்றுக்க ஒரே நாளில் 9 பேர் பலி

புதுடெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் 2994 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று மட்டும் 9 பேர் பலியானார்கள். நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று முன்தினம் 3095 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று சற்று குறைந்து 2994 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று மட்டும் 9 பேர் பலியானார்கள். டெல்லி, கர்நாடகா, பஞ்சாப், கேரளா மாநிலங்களில் தலா 2 பேரும், குஜராத்தில் ஒருவரும் பலியானார்கள். இதனால் ஒட்டுமொத்த … Read more

வேலூர் அருகே மாடு விடும் விழா களத்தில் தடுமாறி ஓடிய காளை ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு

கே.வி.குப்பம்: வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த  வடுகன்தாங்கல் ஊராட்சி  இ.பி. காலனி பகுதியில் நேற்று  மாடுவிடும் விழா நடைபெற்றது. 235 காளகைள் பங்கேற்றன. காளைகள் வாடி வாசலில் இருந்து ஒன்றன்பின் ஒன்றாக கட்டவிழ்த்து விடப்பட்டன.   ஓடு பாதையில் ஓடிய காளைகளை இளைஞர்கள் சிலர் துன்புறுத்தியதால் 2 காளைகள் திக்குமுக்காடி தடுப்புகள் மீது மோதியதில்  லேசான காயம் ஏற்பட்டது. ஓடு பாதையின் அருகில்  ஏரி உள்ளது. ஏரியில் தண்ணீர் இருந்தும் முறையான தடுப்புகள் அமைக்காததால் சில காளைகள் தண்ணீரில் … Read more

வைக்கம் போராட்டம் போல் இன்றைய சவால்களையும் இணைந்து வெல்ல வேண்டும்: கேரள முதல்வர் பினராயி விஜயன் பேச்சு

திருவனந்தபுரம்: வைக்கம் சத்யாகிரக போராட்டம் போல் இன்றைய சவால்களையும் இணைந்து போராடி வெல்ல வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசினார். வைக்கம் சத்தியாகிரக போராட்ட நூற்றாண்டு விழாவில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசியது: தமிழ்நாட்டில் சட்டசபை நடைபெறும் நேரமாக இருந்த போதிலும் இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வந்தது வைக்கம் சத்யாகிரக போராட்டத்திற்கு அவரும், தமிழ்நாடு அரசும் கொடுக்கும் முக்கியத்துவம் தான் காரணமாகும். அதற்காக நான் தமிழக … Read more

ரிஷிகளால், வேதங்களால் உருவானது இந்தியா எந்த ராஜாவாலும் உருவாக்கப்படவில்லை: ஆளுநர் பேச்சு

ராஜபாளையம்: இந்தியா ரிஷிகளால், வேதங்களால் உருவானது. எந்த ராஜாவாலும் உருவாக்கப்படவில்லை என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் உள்ள ராஜூக்கள் கல்லூரி 50வது ஆண்டு பொன்விழா, கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. ஆட்சிமன்றக் குழுத்தலைவர் பிரகாஷ் வரவேற்றார்.  கவுரவ விருந்தினராக ராம்கோ நிறுவனங்களின் சேர்மன் பி.ஆர்.வெங்கட்ராம ராஜா பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு, பொன்விழா அறிவியல் வளாகம் கட்டுவதற்கு நிதியுதவி வழங்கிய ஆர்.ராம்ஜி, பி.எம்.ராமராஜ், வி.ரவிக்குமார், … Read more