மார்ச் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.60 லட்சம் கோடி: 2ம் இடம்பிடித்தது

புதுடெல்லி: கடந்த மார்ச் மாதத்தில் ஜிஎஸ்டி ரூ.1.60 லட்சம் கோடி வசூலாகி இருப்பதாக ஒன்றிய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. அதில், ‘மார்ச் மாதத்தில் வசூலான மொத்த ஜிஎஸ்டி ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்து 122 கோடி. இதில் ஒன்றிய ஜிஎஸ்டி ரூ.29,546 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ.37,314 கோடி. ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.82,907 கோடி. செஸ் வரி ரூ.10,355 கோடி’ என குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தை விட நடப்பாண்டு   13 சதவீதம் அதிக ஜிஎஸ்டி … Read more

வாடகைத் தாய் மூலம் குழந்தை தகுதிச்சான்றிதழ் வழங்க வாரியம்: மாவட்டந்தோறும் அமைக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறுவோருக்கு தகுதிச்சான்றிதழ் வழங்க மாவட்டந்தோறும் வாரியம் அமைக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. குழந்தையில்லா தம்பதியர், வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள தங்களுக்கு தகுதி உண்டு என மாவட்ட மருத்துவ வாரியத்தின் சார்பில் சான்றிதழ் வழங்கக்கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தனர். இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார். இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: மலட்டுத்தன்மை மறு உருவாக்க உதவிக்கான ஒழுங்குமுறை சட்டம் மற்றும் வாடகைத் தாய் ஒழுங்கு முறை … Read more

மும்பை வந்த விமானத்தில் பணிப்பெண்ணிடம் சில்மிஷம்

மும்பை: மும்பை வந்த விமானத்தில் குடிபோதையில் விமான பணிப்பெண்ணிடம்  அத்துமீறி நட ந்துகொண்ட ஸ்வீடனை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து நேற்று முன்தினம் மும்பை நோக்கி இண்டிகோ விமானம் வந்தது. இந்த விமானத்தில் ஸ்வீடனை சேர்ந்த ஹரால்ட் ஜோனஸ் என்ற பயணியும் வந்துள்ளார். அப்போது ஜோனஸ் பயணிகளின் அனைவரின்  முன்னிலையிலும் விமானப்பணிப்பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார்.   மும்பை   போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் அந்தேரி … Read more

கீழடி அருங்காட்சியகத்தை நடிகர் சூர்யா, ஜோதிகா குடும்பத்துடன் பார்த்தனர்

திருப்புவனம்: கீழடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகத்தை நடிகர் சிவக்குமார், அவரது மனைவி லட்சுமி சிவக்குமார், நடிகர் சூர்யா, அவரது மனைவி ஜோதிகா ஆகியோர் நேற்று பார்வையிட்டனர். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் தொல்லியல் துறை சார்பில் நடந்த அகழாய்வில் சேகரிக்கப்பட்ட தொல்லியல் பொருட்களின் அருங்காட்சியகம் ரூ.18 கோடியே 41 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை கடந்த மார்ச் 5ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின்  திறந்து வைத்தார். நேற்று முன்தினம் வரை பொதுமக்கள், பள்ளி, … Read more

பூட்டான் மன்னர் நாளை வருகை

புதுடெல்லி: பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக். இவர் நாளை இந்தியா வருகிறார். 3 நாள் பயணமாக இந்தியா வரும் அவர்  இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். ஏப்.5 வரை இந்தியாவில் இருக்கும் அவர் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடியுடன்  பேச்சுவார்த்தை நடத்துகிறார். 

ஒரே நாளில் 400க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களுக்கு அனுமதி பணியில் இருந்து தாம்பரம் ஆர்டிஓ விடுவிப்பு: ஆய்வாளர் அதிரடி சஸ்பெண்ட்

தாம்பரம்: தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், புரோக்கர்கள் மூலம் வருபவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பதாகவும், அனைத்து பணிகளுக்கும் முக்கியமான பேப்பர் இருந்தால் மட்டுமே பணிகள் நடப்பதாகவும் புகார் வந்ததின் பேரில் கடந்த அக்டோபர் மாதம் சென்னை ஊழல் தடுப்பு கண்காணிப்பு துறை டிஎஸ்பி தமிழ்மணி தலைமையில் லஞ்ச ஒழிப்பு துறையினர் தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சோதனை நடத்தினர். அங்கிருந்த புரோக்கர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை செய்ததில் வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன், முதல்நிலை ஆய்வாளர் சிவகுமார் … Read more

பாஜ ராஜதந்திரங்கள் அனைத்தும் வீண்!; காங்கிரசுக்கு ஆதரவாக ஓரணியில் கூடும் எதிர்க்கட்சிகள்: ராகுல் சந்திக்கும் வழக்குகள்

டெல்லி: பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய் முடிந்த கதையாகி விட்டது பாஜவின் கதை. எதிர்க்கட்சிகளின் வாயை அடைப்பதற்காக பல அதிரடிகளை காட்டிய பாஜ, ராகுல் விஷயத்தில் அவசரப்பட்டதால் அவர்கள் செய்த வினை பூமராங்க் போல அவர்களுக்கு எதிராக திரும்பி நிற்கிறது. ராகுல் காந்தியை பொறுத்த வரை காங்கிரசில் வலுவான தலைவராக இருந்தாலும், பாஜ அவரை எப்போதும் ஏளனம் செய்வதையே வாடிக்கையாக வைத்திருந்தது. 2004ல் அரசியலில் தீவிரமாக களமிறங்கிய ராகுல், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் 2வது 5 … Read more

ஐபிஎல் டி20 கிரிக்கெட்: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!…

லக்னோ: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில்  டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி அணிக்கு 194 ரன்களை வெற்றி இலக்காக லக்னோ அணி நிர்ணயித்தது. பின்னர் டெல்லி அணி 20 ஓவர்களில் முடிவில் 143 ரன்கள் எடுத்த நிலையில் தோல்வி அடைந்தது.

குறைந்த அளவு மருந்து இருப்பு வைத்திருப்பதால் மருத்துவர்களை தண்டிக்க முடியாது: உச்சநீதிமன்றம் கருத்து

டெல்லி: குறைந்த அளவு மருந்து இருப்பு வைத்திருப்பதால் மருத்துவர்களை தண்டிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. குறைந்த அளவிலான மருந்துகளை மருத்துவர்கள் இருப்பு வைத்திருப்பது என்பது குற்றமாகாது என்று கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் மீதான வழக்கில் நடவடிக்கை கோரிய மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

கேரளாவில் பிரபல துணிக்கடையில் பயங்கர தீ விபத்து: பல கோடி ரூபாய் மதிப்பு ஜவுளிப்பொருட்கள் சேதம்

கேரளா: கேரளாவில் உள்ள பிரபல துணிக்கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான ஜவுளிகள் தீயில் கருகின. கோழிக்கோடு நகர் பகுதியில் ஜெயலட்சியமி என்ற துணிக்கடை 3 மாடி கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. இன்று காலை இந்த கடையின் இரண்டாவது தலத்தில் திடிரென்று தீப்பற்றி கரும் புகை வெளியேறியது. நெருப்பு மளமளவென்று பிற பகுதிகளுக்கும் பரவியதில் கடை முன்பு நிறுத்தப்பட்டிருந்த 2 கார்கள் எரிந்து சேதமடைந்தன. அதற்குள் தகவலறிந்த மாவட்டங்களில் இருந்து 20 … Read more