கோவையில் முதல் பேருந்து ஓட்டுநர் ஆனார் இளம்பெண்: பணியை தொடங்கிய சர்மிளாவிற்கு குவியும் பாராட்டு

கோவை: கோவை மாவட்டத்தில் முதல் பேருந்து ஓட்டுனரான இளம்பெண் சர்மிளாவிற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. கோவை மாவட்டம் வடவள்ளியை சேர்ந்தவர் சர்மிளா இவருக்கு சிறு வயது முதலே வாகனங்களை இயக்குவதில் அதீத ஆர்வம் இருந்துள்ளது. அதன் காரணமாக கடந்த 2019ம் ஆண்டு லோட் ஆட்டோ ஓட்ட கற்று கொண்ட சர்மிளா அதற்கான உரிமத்தை பெற்றார். அதை தொடர்ந்து கனரக வாகனங்களை இயக்கவும் கற்றுக்கொண்ட சர்மிளா மக்களுக்காக பேருந்து ஓட்ட வேண்டும் என்ற லட்சியம் … Read more

காரைக்கால் கைலாசநாதர் கோயில் பங்குனி திருவிழாவின் அனைத்து நாட்களிலும் சுவாமி ஊர்வலம் நடத்த ஐகோர்ட் உத்தரவு

சென்னை: காரைக்கால் கைலாசநாதர் கோயில் பங்குனி திருவிழாவின் அனைத்து நாட்களிலும் சுவாமி ஊர்வலம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. சுவாமி ஊர்வலத்தை தடுப்போர் மீது இரக்கம் காட்டாமல் நடவடிக்கை எடுக்கவும் புதுச்சேரி அரசுக்கு கோர்ட் ஆணையிட்டுள்ளது. அமைதியான முறையில் ஊர்வலம் நடைபெற தேவையான பாதுகாப்பு அளிக்கவும் காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 10 நாள் நடைபெறும் பங்குனி உத்திர விழாவில் 1, 9, 10ம் நாளில் சுவாமி உலா என்ற அறிவிப்பை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டிருந்தது.

திருப்பதியில் ஆயுர்வேத மருந்து தயாரிப்பு மையம் திறப்பு ஆண்டுக்கு ₹5 கோடி மருந்துகளை உற்பத்தி செய்ய இலக்கு

*ஆயுஷ் மருத்துவமனைகளுக்கு சப்ளை *அறங்காவலர் குழு தலைவர்  தகவல் திருமலை : திருப்பதி ஸ்ரீவெங்கடேஸ்வரா ஆயுர்வேத மருந்தகத்தில், புதிய ஆயுர்வேத மருந்து தயாரிப்பு மையத்தை திறந்து வைத்த அறங்காவலர் குழு தலைவர், ஆண்டுதோறும் ₹5 கோடி மதிப்பில் ஆயுர்வேத மருந்துகளை உற்பத்தி செய்யவும், ஆயுஷ் மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்யவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில், திருப்பதி அடுத்த நரசிங்கபுரம் பகுதியில் ஸ்ரீவெங்கடேஸ்வரா ஆயுர்வேத மருந்தகம் உள்ளது. இங்கு புதிதாக கட்டியுள்ள ஆயுர்வேத மருந்துகள் தயாரிப்பு மையத்தை … Read more

பல் பிடுங்கி சஸ்பெண்ட் ஆன ஏஎஸ்பி பல்வீர்சிங்கிற்கு ஆதரவாக `பேனர்’ வைத்த கிராம மக்கள்

நெல்லை: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி ஆக இருந்தவர் பல்வீர்சிங். இவர் மீது குற்ற வழக்குகளில் விசாரணைக்கு ஆஜராக வந்தவர்களின் பற்களை பிடுங்கியதாக குற்றச்சாட்டு எழுந்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் ஏஎஸ்பி பல்வீர்சிங் அம்பாசமுத்திரம் சரகத்தில் இருந்தபோது அவர் செய்த சாதனைகள், அப்பகுதியில் குற்றச் சம்பவங்கள் குறைந்திருப்பது குறித்த தகவல்கள் வாட்ஸ்அப்பில் வைரலானது. மேலும் சட்டம், ஒழுங்கை பராமரிப்பதற்காக சிசிடிவி கேமராக்கள் அமைக்க முயற்சி எடுத்தது ஆகியவையும் சமூக வலைதளங்களில் வைரலானது. பொட்டல் கிராமம், சுப்பிரமணியபுரம் பகுதியை … Read more

இந்தியா, இலங்கை இடையே குறைந்த தூர பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை: அமைச்சர் ஏ.வ.வேலு பேச்சு

சென்னை: இந்தியா, இலங்கை இடையே குறைந்த தூர பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேரவையில் அமைச்சர் ஏ.வ.வேலு தெரிவித்துள்ளார். ராமேஸ்வரம் – தலைமன்னார் (50 கி.மீ.) ராமேஸ்வரம் – காங்கேசன்துறை (100 கி.மீ) ஆகிய வழித்தடங்களில் கப்பல் போக்குவரத்து தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலையை இணைக்கும் கடல்சார் பாதசாரிகள் பாலம் 2024ல் நிறைவுறும் என்றும் அமைச்சர் கூறினார்.

டெல்லியில் இளம்பெண் காரில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

டெல்லி: டெல்லியில் இளம்பெண் காரில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேர் மீது 800 பக்க குற்றப்பத்திரிகை ரோகிணி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. டெல்லி காவல்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை மீது ஏப்ரல் 13ல் பரிசீலனை செய்யப்படும் என்று ரோகிணி நீதிமன்றம் கூறியுள்ளது. டெல்லியில் ஆங்கில புத்தாண்டு அன்று அஞ்சலி என்ற இளம்பெண் கார் மோதிய விபத்தில் உயிரிழந்தார்.

மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே 15ம் தேதி முதல் மலை ரயில் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே ஏப்ரல் 15ம் தேதி முதல் சிறப்பு மலை ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு தினமும் நீலகிரி மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. மலை ரெயிலில் தமிழகம் மட்டுமல்லாது கர்நாடகா, கேரளா உள்ளிட்ட உள்நாடுகள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆர்வமுடம் பயணம் செய்து மலைப்பகுதியில் உள்ள இயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசித்து வருகின்றனர். 123 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த மலை ரயிலை … Read more

ஹிஜாவு நிதி நிறுவன முறைகேடு வழக்கில் மேலும் 2 பேர் கைது..!!

சென்னை: ஹிஜாவு நிதி நிறுவன முறைகேடு வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே 10க்கும் மேற்பட்டோர் கைதான நிலையில் நிறுவன இயக்குநர்களில் ஒருவரான கலைச்செல்வி, அவரது கணவர் கைது செய்யப்பட்டனர். தேடப்படும் முக்கிய நபர்களான அலெக்சாண்டர், மகாலட்சுமி ஆகியோரைத் தேடும் பணியில் காவல்துறை ஈடுபட்டுள்ளது.

காஸ் விலை, டோல் வரி, தங்கம், புதிய வரிவிதிப்பு உட்பட 8 விதமான நடைமுறைகள் இன்று முதல் அமல்: 2023-2024ம் நிதியாண்டு தொடங்கியதால் ஏராளமான மாற்றங்கள்

புதுடெல்லி: 2023-2024ம் நிதியாண்டு இன்று தொடங்கியதால் காஸ் விலை, டோல் வரி, தங்கம், புதிய வரிவிதிப்பு உட்பட 8 விதமான நடைமுறைகள் இன்று முதல் அமலுக்கு வருகிறது. நாடாளுமன்ற பொது பட்ஜெட் (2023-2024) கடந்த பிப். 1ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி இன்று முதல் (ஏப். 1) புதிய நிதியாண்டுக்கான விதிமுறைகள் அமலுக்கு வருகிறது. அதாவது இந்த நிதியாண்டுக்கான புது கணக்கு இன்று தொடங்கப்படுவதால், சில விதிமுறைகளும் அமலுக்கு வருகின்றன. அந்த வகையில் இன்று முதல் … Read more

தென்காசி அருகே மண் மனம் மாறாமல் நடக்கும் பங்குனி நோன்பு திருவிழா

தென்காசி: இயந்திரமயமான வாழ்க்கையில் புதிய தொழில் நுட்பங்களின் வருகையால் மனிதனின் வாழ்க்கை முறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றத்தை நோக்கி தான் ஒவ்வொரு காலகட்டங்களில் நமது பயணத்தை மேற்கொண்டு வருகிறோம். பழங்காலத்தில் இருந்து உண்ணும் உணவு, உடுத்தும் உடை, உறங்கும் வீடு, கற்கும் கல்வி, வீட்டு விசேஷங்கள் என அனைத்துமே மாறிவிட்டது. கால மாற்றத்தால் அம்மி, உரல் போன்றவை மிக்சி, கிரைண்டர் என மாறியது. தற்போது அதுவும் இன்றி மாவு பாக்ெகட்டுகளாக விற்பனைக்கு வந்து விட்டது. … Read more