கொரோனா பரவலால் ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்பது வதந்தியே: அமைச்சர் சுப்பிரமணியன் விளக்கம்

சென்னை: கொரோனா பரவலால் ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்பது வதந்தியே என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். வாட்ஸ்-ஆப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பரவும் தகவல்களில் உண்மையில்லை என அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

ஏப்ரல் 1 இன்று மோடி அனைவரையும் முட்டாளாக்குகிறார் என்று காங்கிரஸ் அறிக்கைவிடும்: வந்தேபாரத் ரயிலை தொடக்கி வைத்து பிரதமர் மோடி பேச்சு

போபால்: போபால் – டெல்லி இடையேயான வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். மத்தியபிரதேசத்தின் போபால் – தலைநகர் டெல்லி இடையே வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி இன்று கொடியசைத்து தொடங்கிவைத்தார். இது 11வது வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயிலாகும். இந்த ரயில் போபாலின் ராணி கமல்பதி ரயில் நிலையத்தில் புறப்பட்டு 708 கிலோ மீட்டர்கள் தூரம் பயணித்து தலைநகர் டெல்லியின் ஹஸ்ரத் நிசாமுதின் ரயில் நிலையத்தை வந்தடைகிறது. இந்த ரயிலின் பயண … Read more

ஒன்றிய அரசு தராததால் அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

மேட்டுப்பாளையம்: ஒன்றிய அரசு தராததால் அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார். மக்களிடம் நோய் எதிர்ப்பாற்றல் உள்ளதால் உருமாறிய கொரோனா பரவலால் பெரிய அளவில் பாதிப்பில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏப்.7-ம் தேதி மாலை 4.30 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு

சென்னை: ஏப்.7-ம் தேதி மாலை 4.30 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் என பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

ஆந்திராவில் தெலுங்கு தேசம் – ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கிடையே மோதல்..!!

ஆந்திரா: ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் தெலுங்கு தேசம் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. மோதலின் போது தெலுங்கு தேச கட்சி நிர்வாகியான ரகுநாத ரெட்டியின் கார் அடித்து நொறுக்கப்பட்டது. நிகழ்விடத்திற்கு விரைந்த சென்ற போலீசார் மோதலில் ஈடுபட்ட இருதரப்பினரையும் விரட்டி அடித்தனர்.

தமிழகம் முழுவதும் சுங்க கட்டண உயர்வை கண்டித்து 55 சுங்கச்சாவடிகளை முற்றுகையிட்டு லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்: மாநில தலைவர் பரபரப்பு பேட்டி

சேலம்: தமிழகம் முழுவதும் சுங்கச்சாவடி கட்டண உயர்வை கண்டித்து, 55 சுங்கச்சாவடிகளை முற்றுகையிட்டு லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில், ஒன்றிய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் 566 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் ஒப்பந்த அடிப்படையில் கட்டணம் வசூலிக்க தனியார் நிறுவனங் களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 55 சுங்கச்சாவடிகளிலும் இந்த நடைமுறையிலேயே வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.  ஆண்டுக்கு ஒரு முறை இந்த சுங்கச்சாவடிகளின் கட்டணம் … Read more

சென்னையில் 5 மெட்ரோ ரயில்நிலையங்களில் ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பப்படும் என அறிவிப்பு

சென்னை: சென்னையில் 5 மெட்ரோ ரயில்நிலையங்களில் ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வடபழனி,சென்ட்ரல்,திருமங்கலம்,விம்கோ நகர்,நந்தனம் ரயில்நிலையங்களில் எல்இடி திரையில் ஒளிபரப்பப்படும். ரயில் நிலையங்களில் கிரிக்கெட் போட்டியை பார்க்க 1 மணி நேரத்துக்கு ரூ.10வசூலிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் வைக்கத்தில் உள்ள பெரியார் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை..!!

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வைக்கத்தில் உள்ள பெரியார் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள பெரியார் படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு பொன்னாடை போர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் நினைவு பரிசு வழங்கினார்.

ராஜபாளையம் வந்த தமிழ்நாடு ஆளுநருக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது

ராஜபாளையம்: ராஜபாளையம் வந்த தமிழ்நாடு ஆளுநருக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராஜபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 50ம் ஆண்டு பொன்விழா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி அங்கு சென்றுள்ளார். அவரது வருகையை அறிந்து ராஜபாளையத்தில் திரண்ட 100க்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கட்சியினர் கறுப்புக்கொடி ஏந்தியபடி ஊர்வலமாக செல்ல முயன்றனர். அப்போது ஆன்லைன் ரம்மி தடை சட்டதுக்கும், நீட் விளக்கு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காத ஆளுநரை கண்டித்து முழக்கம் ஏற்படுத்தப்பட்டது. … Read more

கோயில் நுழைவு போராட்டங்களை நடத்துவதற்கான தூண்டுகோலாக அமைந்தது வைக்கம் போராட்டம்தான்: கேரள முதல்வர் பினராயி விஜயன் பேச்சு

திருவனந்தபுரம்: கோயில் நுழைவு போராட்டங்களை நடத்துவதற்கான தூண்டுகோலாக அமைந்தது வைக்கம் போராட்டம்தான் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் பினராயி உரையாற்றினார். மகாத்மா காந்தி போராட்டத்தில் பங்கேற்றதால் வைக்கம் போராட்டம் தேசிய கவனம் பெற்றது. சட்டப்பேரவை நடக்கும் நேரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இங்கு வந்து விழாவில் பங்கேற்று சிறப்பித்துள்ளார். வைக்கம் போராட்டத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உணர்த்தியுள்ளார் என்று கேரள முதல்வர் கூறினார்.