சூழல் முக்கியத்துவம் வாய்ந்த மண்டலங்களில் நிரந்தர கட்டுமானங்கள் இருக்க கூடாது: உச்சநீதிமன்றம்

டெல்லி: ஒவ்வொரு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியும் ஒரு கி.மீ. அளவுக்கு சூழல் முக்கியத்துவம் வாய்ந்த மண்டலத்தை கொண்டிருக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சூழல் முக்கியத்துவம் வாய்ந்த மண்டலத்தில் நிரந்தர கட்டுமானங்கள் இருக்க கூடாது. சூழல் முக்கியத்துவம் வாய்ந்த மண்டலங்களில் நிரந்தர கட்டுமானங்கள் இருக்க கூடாது. சூழல் முக்கியத்துவம் வாய்ந்த மண்டலங்களில் உள்ள கட்டுமானங்களின் பட்டியலை 3 மாதத்திற்குள் சமர்ப்பிக்க மாநில தலைமை வன பாதுகாவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

பொதுநல வழக்குகள் என்ற பெயரில் விளம்பர நோக்கத்திற்காக வழக்குகள் தாக்கல் செய்வது சமீபத்தில் அதிகரிப்பு: உச்சநீதிமன்றம் அதிருப்தி

டெல்லி: பொதுநல வழக்குகள் என்ற பெயரில் விளம்பர நோக்கத்திற்காக வழக்குகள் தாக்கல் செய்வது சமீபத்தில் அதிகரித்துள்ளதாக உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. இது போன்ற வழக்குகள் தொடர்ந்து நீதித்துறையின் நேரத்தை வீணடிப்பதாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

இந்தியாவை உலக நாடுகள் பாராட்டுகின்றன: பிரதமர் மோடி பெருமிதம்..!

டெல்லி: இந்தியாவின் செயல்திறனை பார்த்து உலக நாடுகள் பாராட்டுகின்றன என உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உலகின் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து கடந்தாண்டு 84 பில்லியன் டாலர் அந்திய முதலீடு வந்துள்ளது. மத்திய அரசின் சீர்திருத்தங்கள் மூலம் இந்தியா ஒரு வலுவான தேசமாக உருவெடுத்துள்ளது எனவும் கூறினார்.

நெல்லை அருகே அண்ணனை வெட்டிக் கொன்ற தம்பி

நெல்லை: நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே அச்சியூரில் வயலுக்கு நீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட தகராறில் அண்ணனை தம்பி வெட்டிக் கொன்றார். அண்ணன் நம்பிராஜனை தம்பி ஆறுமுகவேல் அரிவாளால் வெட்டிக் கொண்டார். முன்னதாக நம்பிராஜன் வெட்டியதில் பலத்த காயம் அடைந்த தம்பி ஆறுமுகவேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஒவ்வொரு மசூதியிலும் சிவலிங்கத்தை ஏன் தேட வேண்டும்? :ஆர்.எஸ்.எஸ் தலைவர், மோகன் பகவத் பேச்சு

நாக்பூர் : இந்தியா ஒரு மதம், ஒரு மொழி மீது நம்பிக்கை கொண்ட நாடு இல்லை என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர், மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.  நாக்பூரில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய ஆர்.எஸ்.எஸ் தலைவர், மோகன் பகவத்,’ஞானவாபி மசூதி – காசி விஸ்வநாதர் கோயில் பிரச்னைக்கு சுமுக தீர்வு காணப்பட வேண்டும். இந்து மற்றும் முஸ்லீம் தரப்பினர் ஒன்றாக அமர்ந்து பிரச்னையை சமரசமாக தீர்த்துக்கொள்ள வேண்டும். ஞானவாபி மசூதி – காசி விஸ்வநாதர் ஆலய சர்ச்சையில் நீதிமன்றம் என்ன … Read more

பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு இல்லம் கொடுத்து அவர்களுக்கு நல்வாழ்வை தந்தார் கலைஞர்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு இல்லம் கொடுத்து அவர்களுக்கு நல்வாழ்வை தந்தார் கலைஞர் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தனது பிறந்தநாளை தனக்காக கொண்டாடாமல் ஏழைகளுக்காக கொண்டாடிய தலைவர் தான் கலைஞர் எனவும் கூறினார்.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் வரும் 13-ம் தேதி ஆஜராக ராகுல்காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன்

டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் வரும் 13-ம் தேதி ஆஜராக ராகுல்காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. வெளிநாட்டு பயணம் காரணமாக நேற்றைய விசாரணைக்கு ராகுல் காந்தி ஆஜராகவில்லை. வெளிநாட்டில் இருப்பதால் அவகாசம் கேட்டதையடுத்து  ராகுல்காந்திக்கு அமலாக்கத்துறை புதிய தேதியை அறிவித்துள்ளது.

கள்ளிக்குடி அருகே காட்டுப்பன்றி தாக்கி மாணவி காயம்

மதுரை: மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே லாலாபுரத்தில் காட்டுப்பன்றி தாக்கியதில் காயம் அடைந்த மாணவி ரதி விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். காட்டுப் பன்றி தாக்கியதில் வயிற்றுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டம் நாட்டின் மதச்சார்பின்மைக்கு எதிரானது: பினராயி விஜயன்

திருவனந்தபுரம்: குடியுரிமை திருத்தச் சட்டம் நாட்டின் மதச்சார்பின்மைக்கு எதிரானது என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மதத்தின் அடிப்படையில் குடியுரிமையை நிர்ணயிக்க இங்கு யாருக்கும் அதிகாரம் இல்லை. இந்த விஷயத்தில் எங்கள் அரசு தெளிவான நிலைப்பாட்டை கொண்டுள்ளது எனவும் கூறினார்.

சென்னையில் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: சென்னை கலைவாணர் அரங்கில் மலர் கண்காட்சியை எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கருணாநிதி பிறந்தநாளையொட்டி தோட்டக்கலை துறை சார்பில் சென்னையில் மலர் கண்காட்சி நடைபெறுகிறது. ஜூன் 5ம் தேதி வரை நடக்கும் மலர் கண்காட்சியை பார்க்க பெரியவர்களுக்கு ரூ.50, சிறார்களுக்கு ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.