இந்தியாவின் எல்லா மொழிகளும் நாட்டின் தேசிய மொழி தான்: ஒன்றிய அமைச்சர் பேச்சு

சூரத்: இந்தியாவின் எல்லா மொழிகளும் நாட்டின் தேசிய மொழி தான் என தேசிய கல்வி கொள்கை மாநாட்டில் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். எந்த மொழியும் இந்தி ஆங்கிலத்துக்கு குறைந்ததல்ல . இது தான் தேசிய கல்வி கொள்கையின் முக்கிய நோக்கம் எனவும் கூறினார்.

இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளும் தேசிய மொழிதான் : ஒன்றிய அமைச்சர்

குஜராத் : இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளும் தேசிய மொழிதான் என்று குஜராத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசினார். இந்தி, ஆங்கிலத்தை விட எந்த மொழியும் குறைந்தது இல்லை என்றும் இதையே தேசிய கல்வி கொள்கை வலியுறுத்துகிறது என்றும் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 4,000ஐ தாண்டியது.. 10 பேர் பலி : ஒன்றிய சுகாதாரத்துறை

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 4, 041 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,31,68,585 ஆக உயர்ந்தது.* புதிதாக 10 பேர் இறந்துள்ளனர்.* … Read more

சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்தை சீரமைக்க, விவகாரங்களை விசாரிக்க குழுவை நியமிக்க அதிகாரம் உண்டு : அறநிலையத்துறை

சென்னை : சிதம்பரம் நடராஜர் கோயில் பொது கோயிலாக இருப்பதால் இந்து அறநிலையத் துறைக்கு அதிகாரம் உண்டு என்று தீட்சிதர்கள் புகார்களுக்கு இந்து அறநிலையத்துறை பதில் அளித்துள்ளார். கோயில் நிர்வாகத்தை சீரமைக்க, கோயில் விவகாரங்களை விசாரிக்க குழுவை நியமிக்க அதிகாரம் உள்ளது என்றும் ஆய்வு குழுவுக்கு தீட்சிதர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் இந்து அறநிலையத்துறை விளக்கம் அளித்துள்ளது.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று முதல் 3 நாட்கள் உத்தர பிரதேசம் பயணம்

டெல்லி : குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று முதல் 3 நாட்கள் உத்தர பிரதேசம் பயணம் மேற்கொள்கிறார்.கான்பூரில் உள்ள தனது சொந்த கிராமத்தில் இன்று பொதுமக்களிடையே உரையாற்றுகிறார்.

திருநெல்வேலி பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு!!

திருநெல்வேலி: திருநெல்வேலி பாபநாசம் அணையில் இருந்து கார் பருவ சாகுபடிக்காக இன்று தண்ணீர் திறக்கப்படுகிறது. பாபநாசம் அணையில் இருந்து இன்று காலை 10 மணிக்கு தண்ணீரை திறந்து வைக்கிறார் சபாநாயகர் அப்பாவு.

ஜம்மு – காஷ்மீரில் பீகார் தொழிலாளர் சுட்டுக்கொலை!!

ஸ்ரீநகர் : ஜம்மு – காஷ்மீரின் புட்காம் மாவட்டத்தில் பீகாரை சேர்ந்த 17 வயதான தொழிலாளரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.சதுரா கிராமத்தில் செங்கல் சூளையில் வேலை பார்த்த தில்கேஷ்குமார் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

கொரோனாவுக்கு உலக அளவில் 6,317,087பேர் பலி

ஜெனீவா:உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63.17 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,317,087 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 533,961,137 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 504,839,752பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 36,700 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ராஜஸ்தானை சேர்ந்த இளைஞருக்கு கொடூரம் ஜம்முவில் வங்கியில் நுழைந்து மேலாளர் சுட்டு படுகொலை: தீவிரவாதிகள் அட்டூழியம்

புதுடெல்லி, : ஜம்மு காஷ்மீரில் நேற்று வங்கிக்குள் நுழைந்த தீவிரவாதி, அங்கு பணியாற்றிய  இளம் மேலாளரை சுட்டுக் கொன்றான். ஜம்மு காஷ்மீரில் கடந்த சில வாரங்களாக அப்பாவி மக்கள், அரசு ஊழியர்கள், சிறுபான்மையினர், போலீசார் போன்றவர்களை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்று பரபரப்பு ஏற்படுத்தி வருகின்றனர். கடந்த மாதம் தாசில்தார் அலுவலகத்தில் நுழைந்த தீவிரவாதிகள், பண்டிட் பிரிவை சேர்ந்த ராகுல் பட் என்ற ஊழியரை சுட்டுக் கொன்றனர். இதைத் தொடர்ந்து, 2 போலீசாரையும் கொன்றனர். கடந்த ஒரு வாரத்தில் … Read more

ஜூன்-03 : பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24-க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.