மாணவர்களை எதிர்காலத்துக்கு தயார்படுத்த பிரதமரின் ஸ்ரீ பள்ளிகள் ஒன்றிய அரசு புது திட்டம்: ஒன்றிய கல்வி அமைச்சர் அறிவிப்பு

புதுடெல்லி, : `மாணவர்களை எதிர்காலத்துக்கு தயார்படுத்த புதிய தேசிய கல்வி கொள்கையின் அடிப்படையில், ‘பிரதமரின் ஸ்ரீபள்ளிகள்’ என்ற புதிய திட்டத்தை அமல்படுத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது,’ என்று ஒன்றிய கல்வி அமைச்சர் தெரிவித்தார். புதிய தேசிய கல்வி கொள்கை குறித்து நாடு முழுவதும் விவாதங்கள் நடந்து வரும் நிலையில், இது பற்றி விவாதிப்பதற்காக அனைத்து மாநில கல்வி அமைச்சர்களின் 2 நாள் மாநாடு, ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில், குஜராத்தின் காந்திநகரில் நேற்று முன்தினம் தொடங்கியது.  … Read more

அலேக்காக தூக்க கழுகு போல் வட்டமிடும் பாஜ எம்எல்ஏ.க்களை அடை காக்கும் காங்.சொகுசு விடுதிகளில் தங்கவைப்பு: மாநிலங்களவை தேர்தலில் பரபரப்பு

புதுடெல்லி: மாநிலங்களவை தேர்தலில் 4 இடங்களை கூடுதலாக பெற திட்டமிட்டு உள்ள பாஜ. தனது ஆதரவுடன் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர்களையும், தனது கட்சி வேட்பாளர்களையும் வெற்றி பெற செய்வதற்காக காங்கிரஸ், சுயேச்சை எம்எல்ஏ.க்களை அலேக்காக தூக்க வட்டமிட்டு வருகிறது. அதனிடம் இருந்து காப்பாற்ற, ராஜஸ்தான், அரியானா எம்ல்ஏ.க்களை பாதுகாப்பான இடங்களுக்கு காங்கிரஸ் அழைத்துச் சென்று தங்க வைத்துள்ளது.நாடு முழுவதும் 15 மாநிலங்களில் காலியாகும் 57 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு வரும் 10ம் தேதி தேர்தல் நடக்கிறது. வேட்புமனு … Read more

அமலாக்கத் துறை விசாரணை நடக்கும் நிலையில் சோனியாவுக்கு கொரோனா தொற்று: ராகுலும் ஆஜராகவில்லை

புதுடெல்லி: வருகின்ற 8ம் தேதி டெல்லியில் ஆஜராக அமலாக்கத் துறை உத்தரவிட்ட நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு, தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். நேஷனல் ஹெரால்டு நிதி முறைகேடு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி   வரும் 8ம் தேதி ஆஜராக  அமலாக்கத் துறை நேற்று முன்தினம் சம்மன் அனுப்பியது. அதேபோல், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கும் ஜூன் 2ம் தேதி (நேற்று) விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், வெளிநாட்டில் … Read more

குறைதீர்ப்பு மேல்முறையீட்டு கமிட்டி சமூக வலைதள நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு மேலும் ஒரு ‘செக்’: விரைவில் சட்டத் திருத்தம்

புதுடெல்லி, : பேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களை கோடிக்கணக்கான மககள் பயன்படுத்துகின்றனர். இதில், நாட்டின் இறையாண்மை, பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் பொய்யான தகவல்களும், தனிநபர்களை சாடும் தகவல்களும் சரமாரியாக பதிவிடப்படுகின்றன. இதை கட்டுப்படுத்தும் விதமாகவும், இதுபோன்ற பதிவுகளால் பாதிக்கப்படும் தனிநபர்களின் குறைகளை தீர்க்கவும், ஒன்றிய அரசு கடந்தாண்டு சட்டத் திருத்தம் கொண்டு வந்தது. இதன்படி, 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனர்களை கொண்ட சமூகவலைதள நிறுவனங்கள், குறைதீர்ப்பு அதிகாரி, உதவி அதிகாரி மற்றும் … Read more

மணமகனும் நானே; மணமகளும் நானே: குஜராத்தில் இளம்பெண் அதிரடி திருமணம்

அகமதாபாத், : குஜராத் மாநிலத்தில்  உள்ள பரோடாவை  சேர்ந்தவர் ஷாமா பிந்து (24 ). சமூகவியல் பாடத்தில் பட்டப்படிப்பு படித்துள்ளார். குஜராத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். சாதாரண நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்தான். ஆனால், நாட்டையே வியப்பில் ஆழ்த்தக் கூடிய அதிரடி முடிவை எடுத்துள்ளார். அது, ‘நானே ராஜா; நானே மந்திரி’ என்பதுபோல், ‘நானே மணமகன்; நானே மணமகள்’ என்ற பாணியில் திருமணம் செய்ய உள்ளார். ஆம். மணமகனே இல்லாமல் தனக்கு தானே வரும் … Read more

சில்லி பாயிண்ட்……

*அமெரிக்கவில் 2 டி0 ஆட்டங்களில் விளையாட இந்தியா ஒப்புக் கொணடுள்ளது’ என்று வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி ஆக.6, 7 தேதிகளில்   புளோரிடாவில் இந்த ஆட்டங்கள் நடக்கும். * ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன் அணிக்கும்,  தென் அமரிக்க கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன் அணிக்கும் இடையே ‘லா பைனலிசிமா கோப்பை’ கால்பந்து போட்டி நேற்று இங்கிலாந்தின் வெம்ப்ளே அரங்கில் நடந்தது. அதில் 2021ம் ஆண்டில்  கோபா கோப்பை வென்ற அர்ஜென்டீனா(தென் அமெரிக்கா) அணி 3-0 … Read more

ஆந்திரா வாட்ஸ் அப் குழுவில் வைரல் பச்சிளம் குழந்தை ₹3 லட்சத்துக்கு ஏலம்: 2 டாக்டர்கள் அதிரடி கைது

திருமலை: ஆந்திர மாநிலம், என்டிஆர் மாவட்டம், ஜி கோந்துரு மண்டலத்தைச் சேர்ந்த பதிவு செய்யப்பட்ட மருத்துவப் பயிற்சியாளர் மருத்துவர் ஆர்.எம்.பி. புஷ்பலதா, வாட்ஸ்அப் குழுவில் பிறந்து 3 நாட்களே ஆன பெண் குழந்தை ரூ3 லட்சத்திற்கு விற்பனைக்கு உள்ளதாக புகைப்படம் மற்றும் வீடியோவையும் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரில், அஜித்சிங் நகர் போலீஸ் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியானது.ஆர்எம்பி புஷ்பலதா குழந்தையின் தாயான துர்காவின் பக்கத்து வீட்டுக்காரர்.  துர்காவிற்கு ஏற்கனவே இரண்டு மகன்கள் உள்ளனர்.  மூன்றாவது … Read more

கேரளாவில் பன்றிக் காய்ச்சலுக்கு 12 வயது சிறுமி பலி

திருவனந்தபுரம், : கேரளாவில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 12  வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.கேரள மாநிலம், கோழிக்கோடு அருகே உள்ள உள்யேரி பகுதியைச் சேர்ந்த  12 வயது சிறுமி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கொயிலாண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நிலைமை மோசமானதை தொடர்ந்து உடனடியாக அந்த சிறுமியை கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கு பரிசோதித்த போது அந்த சிறுமிக்கு பன்றிக்காய்ச்சல்  பரவியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. … Read more

சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு..!!

சென்னை: கிண்டி ராஜ்பவனில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு நடைபெற்று வருகிறது. நிலுவையில் உள்ள சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தரும்படி ஆளுநரிடம், முதல்வர் வலியுறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆளுநருடனான முதல்வரின் சந்திப்பில் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, தங்கம் தென்னரசு உள்ளனர். நளினி, முருகன் உள்பட 6 பேர் விடுதலை குறித்தும் ஆளுநரிடம் முதல்வர் ஆலோசிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் ஜவுளி ஏற்றுமதி 44.4 பில்லியன் டாலராக உயர்வு

டெல்லி: நடப்பாண்டில் இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி 44.4 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. கைவினை பொருட்கள், ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியில் வளர்ச்சி கண்டிருப்பதாக தகவல் வெளியானது.