90ஸ் கிட்ஸ்-க்கு மிகவும் பிடித்த பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் மரணம்…. அதிர்ச்சியில் ரசிகர்கள்; பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல்!!

கொல்கத்தா : பிரபல திரைப்பட பின்னணி இசைப்பாடகர் கே.கே என்று அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 53. கொல்கத்தாவில் நடைபெற்ற பல்வேறு கலாச்சார விழா ஒன்றில் பங்கேற்ற கிருஷ்ணகுமார் குன்னத்திற்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தான் தங்கி இருந்த விடுதிக்கு திரும்பிய அவரது உடல்நிலை மேலும் மோசம் அடைந்த காரணத்தால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். கிருஷ்ணகுமார் குன்னத்தின் திடீர் மறைவிற்கு … Read more

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உட்பட 5,000 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு

சென்னை : பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உட்பட 5,000 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  சட்ட விரோதமாக கூடுதல், அரசு அதிகாரி உத்தரவை மீறி செயல்படல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கோரி மாநில அரசுக்கு எதிராக பாஜகவினர் நேற்று போராட்டம் நடத்தினர். உரிய அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக காவல்துறை இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

மக்கள் நலப்பணியாளர் விவகாரம் தமிழக அரசு ஒப்புதலோடு வந்தால் மட்டுமே விசாரணை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ‘தமிழக அரசின் ஒப்புதலோடு வந்தால் மட்டுமே மக்கள் நலப்பணியாளர் தொடர்பான வழக்கு கோடைக்கால அமர்வில் விசாரிக்கப்படும்,’ என உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. மக்கள் நலப் பணியாளர்கள் தொடர்பான விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் மேல்முறையீட்டு மனுவுக்கு தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘தமிழகத்தில் சுமார் 12,524 கிராம பஞ்சாயத்துகளில் மக்கள் நலபணியாளர்கள் பணி அமர்த்தப்பட உள்ளார்கள். குறிப்பாக மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மாதம் … Read more

அரசின் திட்டங்கள், சட்டப்பேரவை அறிவிப்புகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு

சென்னை :அரசின் திட்டங்கள் மற்றும் சட்டப்பேரவை அறிவிப்புகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொள்கிறார். 2 நாட்கள் நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் அனைத்துத்துறை செயலாளர்கள் பங்கேற்க உள்ளனர்.

பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் கொல்கத்தாவில் மாரடைப்பால் மரணம்

கொல்கத்தா: பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் கொல்கத்தாவில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். தமிழில் கில்லி, அந்நியன், காக்க காக்க, 7ஜி ரெயின்போ காலனி உட்பட ஏராளமான படங்களில் பாடல்களை பாடியுள்ளார்.பின்னணி பாடகர் கே.கே. மரணத்திற்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஜூன்-01: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24-க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

அனுமதியின்றி கார் ரேஸ் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜுக்கு அபராதம்

திருவனந்தபுரம்: மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜோஜு ஜார்ஜ். ஜோசப், நாயாட்டு உள்பட ஏராளமான மலையாள படங்களில் நடித்துள்ள இவர், தமிழில் தனுஷின் ஜகமே தந்திரம் உள்பட சில படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் இடுக்கி அருகே வாகமண் பகுதியிலுள்ள ஒரு தேயிலை தோட்டத்தில் அனுமதியின்றி சிலருடன் கார் ரேசில் ஈடுபட்டார். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் போலீசில் புகார் செய்தார்.இதையடுத்து இடுக்கி மாவட்ட வட்டார … Read more

மீண்டும் படம் இயக்குகிறார் கங்கனா

மும்பை: தனது படங்களின் தொடர் தோல்விகள் காரணமாக, மீண்டும் படம் இயக்கும் முடிவுக்கு வந்திருக்கிறார் கங்கனா ரனவத். ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையான தலைவி படத்தில் கங்கனா நடித்தார். இந்த படம் படுதோல்வி அடைந்தது. சமீபத்தில் இவரது நடிப்பில் தக்காட் இந்தி படம் வெளியானது. ரூ.100 கோடி வியாபாரமான இந்த படம், வெறும் ரூ.3 கோடிதான் வசூலித்தது. வரலாறு காணாத இந்த தோல்வியில் துவண்டு போயிருக்கிறார் கங்கனா. ஜான்சி ராணியின் கதையான மணிகர்னிகா படத்தில் கங்கனா நடித்திருந்தார். அந்த … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,313,278 பேர் பலி

ஜெனீவா:உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63.13 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,313,278 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 532,536,426 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 503,471,602 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 37,395 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

8 ஆண்டுகால ஆட்சியில் ஊழலை ஒழித்துள்ளது பாஜ: பிரதமர் மோடி பெருமிதம்

சிம்லா: ஒன்றியத்தில் பாஜ தலைமையிலான ஆட்சி 8 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதையொட்டி, சிம்லாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘பாஜவின் 8 ஆண்டு கால ஆட்சியில் ஊழல் ஒழிக்கப்பட்டுள்ளது,’ என்றார்.ஒன்றியத்தில் பிரதமர் மோடி தலைமையில் 8 ஆண்டு கால பாஜ ஆட்சி நிறைவு செய்யப்பட்டுள்ளதை கொண்டாடும் வகையில், இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லா பாஜ கட்சி சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து நேற்று சிம்லா வந்த பிரதமர் மோடி,பிரதமர் கிசான் … Read more