சட்ட விரோத பண பரிமாற்ற விவகாரம் டெல்லி அமைச்சரை 9 நாள் காவலில் விசாரிக்க அனுமதி: சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் கைதான டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினை வரும் 9ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கி டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசில் சுகாதாரத்துறை அமைச்சராக உள்ள சத்யேந்திர ஜெயின், கொல்கத்தாவைச் சேர்ந்த நிறுவனத்துடன் கடந்த 2015-16ம் ஆண்டில் ஹவாலா பரிவர்த்தனைகளில் ஈடுபட்டதாக சிபிஐ குற்றம் சாட்டியது. சிபிஐயின் முதல் தகவல் அறிக்கை அடிப்படையில், … Read more

பள்ளி ஆசிரியை சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்:  ஜம்மு காஷ்மீரில் அரசு பள்ளிக்குள் நுழைந்த தீவிரவாதிகள் அங்கு இருந்த காஷ்மீர் பண்டிட் ஆசிரியையை சரமாரியாக சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜம்முவின் சம்பா மாவட்டத்தை சேர்ந்தவர்  ரஜ்னி (36). இவர் குல்காம் மாவட்டத்தில் கோபால்போராவில் உள்ள  அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று பள்ளிக்குள் நுழைந்த தீவிரவாதிகள் அங்கிருந்த ரஜ்னியை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். பலத்த காயமடைந்த ரஜ்னியை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.

ஹர்திக் படேல் நாளை பாஜவில் இணைகிறார்

புதுடெல்லி: குஜராத் மாநிலத்தில் கடந்த 2015ம் ஆண்டு படிதார் சமூகத்திற்கான இட ஒதுக்கீட்டிற்காக போராட்டம் நடத்தி மிகப்பெரிய அளவில் பேசப்பட்ட நபர்களுள் ஒருவர் ஹர்திக் படேல். இதையடுத்து அவர், குஜராத் மாநில காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவராக நியமனம் செய்யப்பட்டார். உட்கட்சி பூசல் காரணமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து கடந்த மாதம் ஹர்திக் படேல் வெளியேறினார். இந்நிலையில் ஹர்திக் படேல் பாஜவில் இணையப் போவது உறுதியாகி உள்ளது. ஹர்திக் படேல் நாளை பாஜவில் இணைய இருப்பதாக அம்மாநில … Read more

ராஜஸ்தான் மாநிலங்களவை தேர்தலில் திடீரென களத்தில் குதித்த பிரபல ஊடக உரிமையாளர்: காங்கிரசுக்கு சிக்கல்

புதுடெல்லி:  ராஜஸ்தானில் 4 மாநிலங்களவை எம்பி பதவிகளுக்கான தேர்தல் வரும் 10ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், யாரும் எதிர்பாராத திருப்பமாக எஸ்செல் குழுமத்தின் தலைவரும், ஜீ குழுமம் உள்ளிட்ட ஊடக நிறுவனங்களின் தலைவருமான சுபாஷ் சந்திரா வேட்புமனு தாக்கல் செய்தார். பாஜ ஆதரவோடு அவர் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். இதன் காரணமாக, ஒரு தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெறுவது கேள்வி குறியாகி உள்ளது. பிரமோத் திவாரியை எதிர்த்து சுபாஷ் சந்திரா களமிறங்கி உள்ளார்.

பஞ்சாப்பில் பலத்த பாதுகாப்புடன் மூஸ்சேவாலா உடல் தகனம்

சண்டிகர்: சண்டிகரில் மர்மநபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சித்து மூஸ்சேவாலாவின் சடலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. பஞ்சாப் பாப் பாடகரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான சித்து மூஸ்சேவாலா(28) சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் மான்சா தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர். மூஸ்சேவாலா உட்பட மொத்தம் 424 பேருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை பஞ்சாப் ஆம் ஆத்மி அரசு கடந்த சனியன்று விலக்கி கொண்டது. இந்நிலையில், அடுத்த நாளே மூஸ்சேவாலா மர்மநபர்களால் சரமாரியாக சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் … Read more

தவறு யார் செய்தாலும் தவறு தான்: தாம்பரம் காவல் ஆணையர் ரவி

சென்னை: தவறு யார் செய்தாலும் தவறு தான் என பணி ஓய்வு பெறும் நிகழ்ச்சியில் தாம்பரம் காவல் ஆணையர் ரவி தெரிவித்துள்ளார். மக்களின் பணிதான் முக்கியம், மற்றவர்களின் நலனுக்காக வாழ வேண்டும். நாம் அதிகாரிகள், அலுவலர்கள் இல்லை, மக்கள் தான் நமக்கு எஜமானர்கள். சட்டம் – ஒழுங்கு பிரச்சனையை கையாளும் போது கவனமாக இருக்க வேண்டும். வாழ்க்கை ஒரு சக்கரம், ஓய்வு பெறுவதால் காவல் சீருடை அணிய முடியவில்லை என்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது எனவும் கூறினார்.

கோடை விடுமுறைக்குப் பிறகு கேரளாவில் நாளை பள்ளிகள் திறப்பு; ஓடாத பஸ்கள் வகுப்பறையாக மாற்றம்.!

திருவனந்தபுரம்: கோடை விடுமுறைக்கு பிறகு கேரளாவில் நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. கேரளாவில் பள்ளிகள் முழு ஆண்டுத் தேர்வுக்குப் பிறகு கடந்த ஏப்ரல் மாதம் மூடப்பட்டன. வழக்கமாக எல்லா வருடங்களிலும் ஜூன் 1ம் தேதி முதல் தான் பள்ளிகள் திறக்கப்படும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 வருடங்களாக மிகவும் தாமதமாகவே பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்த நிலையில் 2 வருடங்களுக்கு பிறகு வழக்கம் போல ஜூன் 1ம் தேதி (நாளை) பள்ளிகளை திறக்க தீர்மானிக்கப்பட்டு உள்ளது. … Read more

சாலை பாதுகாப்பு தொடர்பாக மாவட்ட அளவில் குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: சாலை பாதுகாப்பு தொடர்பாக மாவட்ட அளவில் குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரை தலைவராக கொண்ட குழுவில் 14 பேர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.,

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு ஜூன்-9 வரை அமலாக்கத்துறை காவல்: சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவு

டெல்லி: டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயினை ஜூன்- 9 வரை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்யப்பட்ட டெல்லி சுகாதாரத்துறை அமைச்சரை ஜூன் 9-ந் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்தது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வலது கரமாக செயல்படுவர் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின். கடந்த சில மாதங்களாக சத்யேந்தர் ஜெயின் … Read more

சென்னையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை

சென்னை: சென்னை சேத்துப்பட்டில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நாகமூர்த்திக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலெட்சுமி தீர்ப்பு வழங்கியுள்ளார். கடந்த 2018-ல் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக நாகமூர்த்தி(57) என்பவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டது.