குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த விமானப்படை அதிகாரி குரூப்கேப்டன் வருண் சிங்கிற்கு சவுர்ய சக்ரா விருது

டெல்லி: குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த விமானப்படை அதிகாரி குரூப்கேப்டன் வருண் சிங்கிற்கு பாதுகாப்புத் துறையில் வழங்கப்படும் 3-வது உயரிய விருதான சவுர்ய சக்ரா விருது வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கிய விருதை வருண் சிங்கின் மனைவி தாயார் பெற்றுக்கொண்டனர். வானில் பறந்தபோது கோளாறு ஏற்பட்ட தேஜஸ் போர் விமானத்தை சாமர்த்தியமாக தரையிறக்கியதற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சர்கள், துறை சார்ந்த செயலாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை

சென்னை: அமைச்சர்கள், துறை சார்ந்த செயலாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்துகிறார். தேர்தல் வாக்குறுதிதியில் அளித்த திட்டங்களின் நிலை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடைபெறுகிறது.

மீண்டும் ராஜ்யசபா எம்பி பதவிக்கான சீட் கொடுக்காததால் 2 ஒன்றிய அமைச்சர்களின் பதவிக்கு சிக்கல்?.. பாஜக, ஐக்கிய ஜனதா தளம் முடிவால் விரைவில் அமைச்சரவை மாற்றம்..!

டெல்லி: பாஜகவின் மாநிலங்களவை வேட்பாளர்கள் பட்டியலில் ஒன்றிய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வியின் பெயர் இல்லை. அதேபோல் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் எம்பியும், ஒன்றிய அமைச்சருமான ஆர்பி சிங்கிற்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டதால், அவர்களது பதவிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, விரைவில் ஒன்றிய அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது. தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், கர்நாடகா, ஒடிசா, மகாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பீகார், ஜார்கண்ட் மற்றும் அரியானா ஆகிய … Read more

மதுரையில் நடைபெற்ற மாநகராட்சி துப்புரவு பணியாளர்களின் போராட்டம் வாபஸ்

மதுரை: மதுரை மாநகராட்சி துப்புரவு பணியாளர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. 28 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2 நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். மாவட்ட ஆட்சியர் அனிஸ் சேகர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவை தொகை 86,912 கோடி ரூபாயை விடுவித்தது ஒன்றிய அரசு: தமிழகத்துக்கு ரூ.9,602 கோடி விடுவிப்பு

டெல்லி: மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவை தொகை 86,912 கோடி ரூபாயை ஒன்றிய அரசு விடுவித்தது. இதில் தமிழகத்துக்கு ரூ.9,602 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி நிலுவை தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் என பல்வேறு மாநில அரசுகள் ஒன்றிய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கு கடந்த 26ம் தேதி தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேடையிலேயே ஜிஎஸ்டி நிலுவை தொகையை விடுவிக்க வலியுறுத்தினார். இந்நிலையில் மாநில … Read more

ஜவுளி உற்பத்தியாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்தது

கோவை: திருப்பூர், கோவை மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்தது. வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக விசைத்தறியாளர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று நாளை முதல் மீண்டும் ஜவுளி உற்பத்தி தொடங்கப்படுகிறது. நூல் விலை உயர்வு காரணமாக காடாத்துணி உற்பத்தி செயற்கை நூலிமைகள் கொண்டு தொடங்கப்படும் என ஜவுளி உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கணவருடன் ஏற்பட்ட தகராறில் 6 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்ற கொடூர தாய்

ராய்காட்: தனது கணவருடன் ஏற்பட்ட தகராறில் 6 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்ற கொடூர தாயை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டம் காரவலி கிராமத்தில் கணவருடன் வசித்து வந்த 30 வயதான இளம்பெண்ணுக்கு 6 குழந்தைகள் உள்ளனர். 18 மாத பச்சிங்குழந்தை உட்பட மற்ற அனைவருமே 10 வயதிற்கு உட்பட்டவர்கள்தான். 6 குழந்தைகளில் 5 குழந்தைகள் பெண் குழந்தைகள். கணவன் – மனைவிக்குள் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படும். மேலும் … Read more

மோசடி செய்த வழக்கில் கைதான கார்த்திக் கோபிநாத்தின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு

சென்னை: சிறுவாச்சூர் கோயிலை புனரமைப்பதாக கூறி ரூ.34 லட்சம் வசூலித்து மோசடி செய்த வழக்கில் கைதான கார்த்திக் கோபிநாத்தின் ஜாமீன் மனுவை பூவிருந்தவல்லி சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்தது. மோசடி வழக்கில் கைதான கார்த்திக் கோபிநாத் 15 நாள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் உள்ளார்.

காங்கிரசில் இருந்து விலகிய நிலையில் நாளை மறுநாள் குஜராத் மாநில பாஜக தலைவர் முன்னிலையில் பாஜவில் இணைகிறார் ஹர்திக் பட்டேல்..!

அகமதாபாத்: நான் பாஜவில் சேரவில்லை என்றும் அதுகுறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ஹர்திக் படேல் கடந்தவாரம் கூறியிருந்த நிலையில், அவர் வரும் 2ம் தேதி பாஜவில் இணைவதாக கூறப்படுகிறது. குஜராத் காங்கிரஸ் செயல் தலைவர் ஹர்திக் படேல் கடந்த வாரம், தனது பதவியை ராஜினாமா செய்தார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில், ‘காங்கிரஸ் கட்சியின் பதவியில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நான் தைரியமாக ராஜினாமா செய்திருக்கிறேன். … Read more

திருச்சி அருகே 11-ம் வகுப்பு மாணவிக்கு கத்திக்குத்து

திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் 11-ம் வகுப்பு மாணவியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியுள்ளார். கத்திக்குத்தில் படுகாயமடைந்த மாணவி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.