கோப்புகளில் கையெழுத்திடும்போது மட்டுமே பிரதமர்; மற்ற நேரங்களில் மக்களின் சேவகன்: சிம்லாவில் பிரதமர் மோடி உருக்கமான பேச்சு

இமாச்சல்: நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவுமே தன்னுடைய வாழ்க்கையை அர்பணித்துள்ளதாக பிரதமர் மோடி உருக்கமாக தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பாரதிய ஜனதா அரசின் 8 ஆண்டுகால ஆட்சி நிறைவை ஒட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பாஜக ஏற்பாடு செய்துள்ளது. இந்த வகையில் இன்று இமாச்சலப்பிரதேசம் சென்ற பிரதமர் மோடிக்கு கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கு பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்த பிரதமர், ஒன்றிய அரசின் திட்டங்களால் பயனடைந்த மக்களுடன் கலந்துரையாடினார். நிகழ்ச்சியில் பேசிய … Read more

நன்னிலம் அருகே தூர்வாரப்பட்ட கொத்தங்குடி வாய்க்காலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

திருவாரூர்: நன்னிலம் அருகே ரூ.9.95 லட்சம் செலவில் தூர்வாரப்பட்ட கொத்தங்குடி வாய்க்காலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்துள்ளார். டெல்டா மாவட்டங்களில் வாய்க்கால் தூர்வாரும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் 2-வது நாளாக ஆய்வு செய்து வருகிறார்.

காங்கிரஸ் கமிட்டியில் இருந்து விலகிய ஹர்திக் பட்டேல் ஜூன் 2-ம் தேதி பாஜகவில் இணைகிறார்

குஜராத்: குஜராத் மாநில காங்கிரஸ் கமிட்டியில் இருந்து விலகிய ஹர்திக் பட்டேல் ஜூன் 2-ம் தேதி பாஜகவில் இணையுள்ளார். நாளை மறுநாள் குஜராத் மாநில பாஜக தலைவர் பாட்டீல் முன்னிலையில் பாஜகவில் இணைகிறார்.

உலகக் கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டி: மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தங்கம் வென்றது இந்திய அணி

டென்மார்க்: உலகக் கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டி மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய அணி தங்கம் வென்றது. இளவேனின் வாலறிவன், ஸ்ரேயா அகர்வால், ரமிதா ஆகியோர் அடங்கிய இந்திய குழு இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றது. இறுதிப்போட்டியில் டென்மார்க் அணியை 17-5 என்ற கணக்கில் இந்திய அணி வீழ்த்தியது.

பெரியார் பல்கலைக்கழகம் நடத்தும் தொலைதூர பட்டப்படிப்புகள் செல்லாது; பல்கலைக்கழக மானிய குழு அறிவிப்பு

டெல்லி: பெரியார் பல்கலைக் கழகம் நடத்தும் தொலைதூர பட்டப்படிப்புகள் செல்லாது என யுஜிசி அறிவித்துள்ளது. மாணவர்கள் யாரும் பெரியார் பல்கலைக்கழக தொலைதூர படிப்புகளில் சேர வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. முன் அனுமதி பெறாமல் தொலைதூர பட்டப் படிப்புகளை விசாரிக்க தமிழக அரசுக்கு பரிந்துரை அளித்துள்ளது.அதே சமயம்,முன் அனுமதி பெறாமல் தொலைதூரக் கல்வி,ஆன்லைன் வகுப்புகள் நடத்துவது குறித்து பெரியார் பல்கலைக்கழகத்திடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக ஆளுநர், உயர்கல்வித்துறை செயலர் ஆகியோருக்கு யுஜிசி பரிந்துரைத்துள்ளது.

புதிய கல்விக்கொள்கையை படிக்காமல் நாங்கள் கருத்துகளை தெரிவிக்கவில்லை: அமைச்சர் பொன்முடி

சென்னை: புதிய கல்விக்கொள்கையை ஆழ்ந்து படித்து விட்டு தான் கருத்து தெரிவிக்கின்றோம் என உயர்கல்வி அமைச்சர் பொன்முடி பேசினார். ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்துக்கு அமைச்சர் விளக்கம் அளித்தார். புதிய கல்விக்கொள்கையை படிக்காமல் நாங்கள் கருத்துகளை தெரிவிக்கவில்லை என கூறினார். வேற்றுமையில் ஒற்றுமை என ஆளுநர் நேற்று பேசினார். அதன்படி எங்கள் கருத்துகளை ஏற்றுக்கொள்வார் என நம்புகிறோம் என தெரிவித்தார்.

கர்நாடகாவில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வேட்புமனு தாக்கல்

கர்நாடகா: கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலின் போது அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் எடியூரப்பா உடன் இருந்தனர்.

ஜம்மு மாநிலம் குல்காம் மாவட்டத்தில் உயர்நிலைப் பள்ளி ஆசிரியை தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில், உயர்நிலைப் பள்ளி ஆசிரியை தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இன்று காலை நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.

நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானை கைது செய்த போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி சென்னைக்கு மாற்றம்.!

மும்பை: மும்பையில் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கானை கைது செய்த போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி சமீர் வாங்கடே, சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆர்யன் கான் குற்றமற்றவர் என போதைப் பொருள் தடுப்பு பிரிவு சான்றிதழ் அளித்த நிலையில் சமீர் மாற்றப்பட்டுள்ளார்.2021 -ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ம் தேதி மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதை விருந்து நடைபெறுவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனை … Read more

திருக்கடையூர் அருகே அனந்தமங்கலத்தில் நேரடி நெல் விதைப்பு பணிகளை ஆய்வு செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அருகே அனந்தமங்கலம் கிராமத்தில் நேரடி நெல் விதைப்பு பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். ராமசந்திரன் கால்வாயில் நிறைவடைந்த தூர்வாரும் பணிகளையும் முதல்வர் ஆய்வு செய்கிறார்.