கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் 4000 நிதி உதவி: திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

புதுடெல்லி:  கொரோனா தொற்றினால் பெற்ேறாரை இழந்த குழந்தைகளுக்கு மாதந்தோறும் ₹4 ஆயிரம் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பிஎம் கேர்ஸ் திட்டத்தின் கீழ், குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி டெல்லியில் காணொலி வாயிலாக நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, கொரோனா தொற்றினால் பெற்றோர்களில் ஒருவரையோ, இரண்டு பேரையுமோ அல்லது பாதுகாவலரையோ இழந்த குழந்தைகளுக்கு மாதந்தோறும் ₹4 ஆயிரம் வழங்கும்  திட்டத்தை தொடங்கி வைத்தார். ₹4000 பெறும் பயனாளிகளுக்கு வங்கி புத்தகம், … Read more

காஷ்மீரில் 2 ஜெய்ஷ் இ தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்:  ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள கிண்டிபோரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் இரவு பாதுகாப்பு படை வீரர்கள் அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கி இருந்த தீவிரவாதிகள் வீரர்கள் மீது திடீரென துப்பாக்கியால் சுட்டனர். இதனை தொடர்ந்து வீரர்கள் தந்த பதிலடியில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். சம்பவ … Read more

எனக்கு தகுதி இல்லையா? காங்கிரசுக்கு எதிராக நக்மா போர்க்கொடி: மாநிலங்களவை தேர்தலில் சீட் மறுக்கப்பட்டதால் அதிருப்தி

புதுடெல்லி: மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படாததால் அதிருப்தி அடைந்த காங்கிரஸ் மகளிரணி பொதுச் செயலாளரான நடிகை நக்மா, ‘18 ஆண்டாகியும் எனக்கு தகுதி இல்லையா?’ என காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார்.மாநிலங்களவையில் 15 மாநிலங்களை சேர்ந்த 57 எம்பி.க்களின் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது. இதனால் காலியாகும் இடங்களுக்கு வரும் 10ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து, மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் 10 வேட்பாளர்களின் பட்டியலை காங்கிரஸ் நேற்று முன்தினம் வெளியிட்டது. இதில், காங்கிரஸ் மூத்த … Read more

தெலங்கானாவில் பரபரப்பு அமைச்சர் மீது நாற்காலி வீச்சு: பேச்சை பாதியில் நிறுத்திவிட்டு ஓட்டம்

திருமலை: தெலங்கானா மாநில அமைச்சர் பங்கேற்ற பொதுக்குழு கூட்டத்தில் எதிர்ப்பாளர்கள் ரகளையில் ஈடுபட்டதால், பேச்சை பாதியில் நிறுத்திவிட்டு அமைச்சர் ஓட்டம் பிடித்தார். அப்போது அவர் மீது நாற்காலி, தண்ணீர் பாட்டில்கள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருப்பவர் மல்லா ரெட்டி. மேட்சல் மாவட்டத்தில் உள்ள காட்கேசரில் நேற்று முன்தினம் மாலை ‘‘ரெட்டிகளின் சிம்ம கர்ஜனை’’ என்ற ரெட்டி சமூகத்தை சேர்ந்தவர்களின்  பொதுகுழுக்கூட்டம் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில், ரெட்டி சமூகத்தின் … Read more

பாலகிருஷ்ணா ஜோடியாகும் தமன்னா

ஐதராபாத்: பாலகிருஷ்ணா ஜோடியாக தமன்னா நடிக்கும் பட ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளது.அகண்டா படத்துக்கு பிறகு பொயப்படி னு இயக்கும் படத்தில் மீண்டும் பாலகிருஷ்ணா நடிக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க உள்ளார். இப்படத்துக்கான படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. இதில் நடித்தபடியே அனில் ரவிப்புடி இயக்கும் படத்திலும் பாலகிருஷ்ணா நடிக்கிறார். இதில் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்க தமன்னா ஒப்பந்தமாகியுள்ளார். படத்தில் பாலகிருஷ்ணாவின் மகளாக தெலுங்கு நடிகை லீலா ஒப்பந்தமாகியுள்ளார். இவர் பிரபாசுடன் ராஜா டீலக்ஸ், ரவிதேஜாவுடன் தமாகா ஆகிய … Read more

ரஷ்யாவில் படிக்க பண வசதியின்றி மருத்துவ மாணவி தற்கொலை முயற்சி: நாகை அருகே பரபரப்பு

வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா ஆயக்காரன்புலம் 3ம் சேத்தியை சேர்ந்தவர் மாற்றுதிறனாளி கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி பார்வதி. விவசாய கூலி வேலை பார்த்து வருகிறார். இவர்களது மகள் கீர்த்திகா(21). கடந்த 2018ம் ஆண்டு  நிலத்தை விற்று ரஷ்யாவில் மகளை மருத்துவ படிப்பில் சேர்த்துள்ளார். அங்கு 2 ஆண்டுகள் படித்தார். நிதி நெருக்கடியால் மகளை மேற்கொண்டு படிக்க வைக்க முடியவில்லை.  படிப்பை தொடர முடியாமல் மனம் உடைந்த நிலையில் இருந்த கீர்த்திகா, நேற்று விஷம் குடித்து தற்கொலைக்கு … Read more

உலக அளவில் வலுவான விமானப்படை இந்தியாவுக்கு 3வது இடம்: தளபதி பெருமிதம்

புனே:மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் (என்டிஏ) 142வது பிரிவினரின் பயிற்சி நிறைவு அணிவகுப்பில் பங்கேற்ற விமானப்படை தளபதி விஆர். சவுதாரி பேசியதாவது: நாட்டின் வலிமை வாய்ந்த ராணுவம், விமானம் மற்றும் கப்பற்படை ஆகிய 3 சேவைகளும் அடுத்த தலைமுறைக்காக போரிடும் இயந்திரங்களில் அதிக முதலீடு செய்துள்ளன. புதிய தொழில்நுட்பங்களை பின்பற்றுவதால், அதற்கேற்ப நமது போர் முறைகளில் புதுமையை புகுத்த வேண்டும். உலகின் வலிமை வாய்ந்த விமானப்படைகளின் தரவரிசை குறியீட்டில், இந்திய விமானப்படை 3ம் நிலைக்கு … Read more

இன்று இடைத்தேர்தல் உத்தரகாண்ட் முதல்வராக புஷ்கர் சிங் தாமி தொடர்வாரா?

டேராடூன்: உத்தரகாண்டின் சம்பவாத் தொகுதியில் இன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டுமே தாமி முதல்வராக நீடிக்க முடியும். உத்தரகாண்ட் மாநிலத்தில் நடந்து முடிந்த  சட்டமன்ற தேர்தலில் பாஜ வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. ஆனால், காதிமா தொகுதியில் போட்டியிட்ட முதல்வர்  வேட்பாளரான புஷ்கர் சிங் தாமி தோல்வியடைந்தார். எனினும் தாமி சட்டமன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டு முதல்வர் பொறுப்பேற்றார். ஆறு மாதங்களுக்குள் அவர் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதால் அவர் … Read more

தென்மேற்கு பருவமழை கேரளாவில் தீவிரம்: அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை

திருவனந்தபுரம்: கேரளாவில் 3 நாட்களுக்கு முன்பே தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்டது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் 1ம் தேதி தொடங்கும். இந்த வருடம் 5 நாட்களுக்கு முன்பே பருவமழை தொடங்கும் என்று மத்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த வருடம் கேரளாவில் கோடைமழை எதிர்பார்த்ததைவிட அதிகமாக பெய்து உள்ளது. கடந்த மார்ச் 1 முதல் மே 28 வரை 98% கூடுதலாக கோடை மழை பெய்து உள்ளது குறிப்பிடத்தக்கது. தொடக்கத்தில் மழையின் தீவிரம் … Read more

சாலை விபத்தில் கார் டிரைவர் பலி

புழல்: செங்குன்றம் அடுத்த அலமாதி பகுதியை சேர்ந்தவர் நாகராஜ்(44). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் கார் டிரைவராக பணியாற்றினார். நேற்று காலை இவர் சென்னை மூலக்கடையில் இருந்து பைக்கில் தனது வீட்டுக்கு சென்றார். புழல் மத்திய சிறைச்சாலை அருகே சென்றபோது, பின்னால் வந்த லாரி எதிர்பாராதவிதமாக பைக் மீது மோதியது. இதில், நிலைதடுமாறி கீழே விழுந்த அவர் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.