நேபாளத்தில் விமானம் நொறுங்கிய விழுந்த விபத்தில் 22 பேரும் உயிரிழப்பு: 21 பேரின் உடல் மீட்கப்பட்ட நிலையில் எஞ்சிய ஒருவரின் உடலை தேடும் பணி தீவிரம்..!

காத்மண்டு: நேபாள நாட்டின் சுற்றுலா நகரமான போகாராவில் இருந்து 22 பேருடன் நேற்று காலை ‘தாரா’ ஏர் என்ற விமானம் புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களில் விமானம் மாயமானது. விமானத்தில் 4 இந்தியர்கள் (மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியை சேர்ந்த குடும்பத்தினர்), 2 ஜெர்மனியர்கள், 13 நேபாள பயணிகளும் 3 விமான ஊழியர்களும் சேர்த்து 22 பேர் பயணித்தனர். விமானம் மாயமானதையடுத்து, அதை தேடும் பணியில் நேபாள ராணுவம் தீவிரமாக ஈடுபட்டு வந்தது. இந்நிலையில், மாயமான விமானம் … Read more

ஞானவாபி மசூதி தொடர்பான ஆய்வறிக்கை வெளியிட வாரணாசி நீதிமன்றம் தடை

உத்தரப்பிரதேசம்: ஞானவாபி மசூதி தொடர்பான ஆய்வறிக்கை வெளியிட வாரணாசி நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஆய்வறிக்கை விவரங்கள் மனிதர்களுக்கு அளிக்கப்பட்ட நிலையில் அவற்றை வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது.  

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கைது: ஹவாலா பரிவர்த்தனையில் ஈடுபட்ட வழக்கில் அமலாக்கத்துறை அதிரடி

டெல்லி: டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயினை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். தலைநகர் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவி வகித்து வருகிறார். அவரது அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்து வருபவர் சத்யேந்திர ஜெயின். இந்நிலையில் கொல்கத்தாவை மையமாக கொண்டு செயல்படும் ஒரு நிறுவனத்துடன் ஹவாலா பண பரிவர்த்தனை செய்ததாக சட்ட விரோத பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கைது செய்யப்பட்டுள்ளார். இதனை … Read more

மக்கள் போராட்டம்: டாஸ்மாக் கடை மூடல்

புதுக்கோட்டை: குளத்தூர்நாயக்கர்பட்டியில் மக்களின் போராட்டதையடுத்து டாஸ்மாக் கடை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. 15 நாட்களில் டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றுவதாக அதிகாரிகள் உறுதியளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கைது

டெல்லி: டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கைது செய்யப்பட்டுள்ளார். கொல்கத்தாவைச் சேர்ந்த நிறுவனத்துடன் இணைந்து ஹவாலா பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் பேரில்  சத்யேந்திர ஜெயினை அமலாக்கத்துறை கைது செய்தது.

உண்மைக்கு மாறான தகவல்களை வழங்கி வரும் எடப்பாடி பழனிசாமிக்கு தங்கம் தென்னரசு கண்டனம்

சென்னை: உண்மைக்கு மாறான தகவல்களை வழங்கி வரும் எடப்பாடி பழனிசாமிக்கு தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு எல்லா வகையிலும் பொது அமைதியை பேணிக்காத்து வருகிறது எனவும் திமுக ஆட்சி அமைந்த பின் பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது எனவும் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

5 வயது வளர்ப்பு மகளை பலாத்காரம் செய்த தந்தை மரணம்: போலீஸ் காவலில் இறந்ததாக குற்றச்சாட்டு

புதுடெல்லி: டெல்லியில் 5 வயது வளர்ப்பு மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தையை பொதுமக்கள் அடித்ததால் அவர் இறந்துவிட்டதாக போலீசார் தெரிவித்தனர். தென்மேற்கு டெல்லியின் தாப்ரி பகுதியில் வசித்து வந்த 30 வயதுடைய பெண்ணுக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ளது. கணவரை பிரிந்த இவர், இரண்டாவதாக 40 வயதுடைய ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் 40 வயதுடைய அந்த நபர், 5 வயதான தனது வளர்ப்பு மகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.அதையறிந்த அப்பகுதிமக்கள், அவரை … Read more

ரூ.34 லட்சம் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட பாஜவை சேர்ந்த கார்த்திக் கோபிநாத்துக்கு 15 நாட்கள் சிறை

சென்னை: ரூ.34 லட்சம் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட பாஜவை சேர்ந்த கார்த்திக் கோபிநாத்துக்கு 15 நாட்கள் சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. சிறுவாச்சூர் கோயிலை புனரமைப்பதாக கூறி ரூ.34 லட்சம் வசூலித்து மோசடி செய்ததாக கார்த்திக் கோபிநாத் கைது செய்யப்பட்டார்.

கோயிலுக்கு சென்று திரும்பியபோது பரிதாபம்; லாரி மீது ஆட்டோ மோதி 7 பேர் பரிதாப பலி: பெண்கள் உள்பட 21 பேர் படுகாயம்

திருமலை: சிமென்ட் ேலாடுடன் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது சரக்கு ஆட்டோ மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் கோயிலுக்கு சென்று திரும்பிய பெண்கள் உள்பட 7 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 21 பேர் படுகாயம் அடைந்தனர். ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் ரந்தசிந்தலாவில் உள்ள வட்டரபாவி கிராமத்தை சேர்ந்த 38 பேர் சைலம் பிரம்மராம்பிகை சமேத மல்லிகார்ஜுன சுவாமி கோயிலுக்கு செல்ல முடிவு செய்தனர். அதன்படி நேற்று மாலை சரக்கு வேனில் கோயிலுக்கு சென்றனர். … Read more

சிதம்பரம் நடராஜர் கோயில் கணக்குகளை அறநிலையத்துறையின் ஒருங்கிணைப்பு குழு ஆய்வு செய்ய பொது தீட்சிதர்கள் எதிர்ப்பு

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயில் கணக்குகளை அறநிலையத்துறையின் ஒருங்கிணைப்பு குழு ஆய்வு செய்ய பொது தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மத நம்பிக்கைக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்க வேண்டும் என விலியுறுத்தி வருகின்றனர்.