சீன விசா விவகாரத்தில் அமலாக்கத்துறை வழக்கு: ஜூன் 3ம் தேதி வரை கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தடை

டெல்லி: கார்த்தி சிதம்பரம் முன்ஜாமீன் கோரி தொடர்ந்த வழக்கில், ஜூன் 3ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினராக கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக சிபிஐ சில வழக்குகளை தொடுத்துள்ளது. அதில் குறிப்பாக 2008 முதல் 2014ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சீனர்களுக்கு இந்தியாவில் பணி புரிவதற்கான விசா எடுத்துக் கொடுப்பதில் முறைகேடு நடந்ததாகவும், அதற்கு தலா 50 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும் ஒரு புகாரானது எழுந்தது. … Read more

தமிழ்நாட்டில் 21 மாவட்டங்களில் ஓரிரு மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: கேரளத்தில் தென்மேற்கு பருவமழை வலுத்து வருவதால் தமிழ்நாட்டில் 21 மாவட்டங்களில் ஓரிரு மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, கரூர், சேலம், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு: முதல் 4 இடங்களை பிடித்து பெண்கள் சாதனை

 டெல்லி: கடந்த ஜனவரியில் யுபிஎஸ்சி எழுத்துத்தேர்வும், ஏப்ரல்-மே மாதத்தில் நேர்காணலும் நடைபெற்ற நிலையில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 685 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் யுபிஎஸ்சி அறிவிக்கப்பட்டுள்ளது.  தேசிய அளவில் எஸ்ருதி ஷ்ரமா என்பவர் முதலிடம், தமிழக அளவில் அஸ்வதி ஸ்ரீ என்பவர் முதலிடம், தேசிய அளவில் 42வது இடம்  தேர்ச்சி பெற்றவர்கள் இஏஎஸ், இஎப்எஸ், ஐபிஎஸ் மற்றும் மத்திய அரசின் ஏ மற்றும் பி பிரிவு பணிகளில் அமர்த்தப்படுவார்கள். அகில இந்திய அளவில் … Read more

கஞ்சா வழக்குகளில் முதன்முறையாக வங்கிக் கணக்குகளை முடக்கி காவல்துறை நடவடிக்கை

மதுரை: கஞ்சா வழக்குகளில் முதன்முறையாக வங்கிக் கணக்குகளை முடக்கி காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. மதுரை, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் 494 கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய 813 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.

விசா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்தை ஜூன் 3ம் தேதி வரை கைது செய்ய தடை

டெல்லி: விசா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்தை ஜூன் 3ம் தேதி வரை கைது செய்ய தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய இடைக்காலத்தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ரூ.34 லட்சம் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் கோபிநாத் அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்

சென்னை: ரூ.34 லட்சம் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட பாஜவை சேர்ந்த கார்த்திக் கோபிநாத் அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகினார். சிறுவாச்சூர் கோயிலை புனரமைப்பதாக கூறி ரூ.34 லட்சம் வசூலித்து மோசடி செய்ததாக கார்த்திக் கோபிநாத் கைது செய்யப்பட்டார்.

பெங்களூருவில் விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத் மீது கறுப்பு மை வீச்சு

பெங்களூரு: பெங்களூருவில் விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத் மீது கறுப்பு மை வீசப்பட்டுள்ளது. விவசாயசங்கத் தலைவர் ராகேஷ் திகாயத் மீது கறுப்பு மை வீசிய விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெங்களூரு போலீசார் உரிய பாதுகாப்பு தரவில்லை என ராகேஷ் திகாயத் குற்றச்சாட்டினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் கடிதம்

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் கடிதம் எழுதியுள்ளார். கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது குழுவுக்கு தலைவராக எஸ்.பி.முத்துராமன், உறுப்பினர்களாக நாசர், கரு.பழனியப்பன் ஆகியோரை நியமித்ததற்கு நெஞ்சார்ந்த நன்றி என அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்பட்ட அத்தியாவசிய மருந்து பொருட்கள் மற்றும் உணவு பொருட்கள் விநியோகம்

கொழும்பு: இலங்கை மக்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்பட்ட அத்தியாவசிய மருந்து பொருட்கள் மற்றும் உணவு பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துணைத்தூதரகம் மூலமாக தூதரக அதிகாரி ராகேஷ் விநியோகத்தை தொடங்கி வைத்தார்.

மாநிலங்களவை தேர்தலில் ஆதரவு தருகிற திமுக, முதல்வர் மு.க.ஸ்டாலின் தோழமை கட்சிகளுக்கு நன்றி; ப.சிதம்பரம் பேட்டி

சென்னை: மாநிலங்களவை தேர்தலில் ஆதரவு தருகிற திமுக, முதல்வர் மு.க.ஸ்டாலின் தோழமை கட்சிகளுக்கு நன்றி என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். மாநிலங்களவை தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்த பிறகு ப.சிதம்பரம் பேட்டி அளித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் கொள்கையை அழுத்தமாக சொல்லி வருபவன் நான் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.