ஜூலை முதல் வாரத்தில் புதுச்சேரி கடற்கரையில் பிரதமர் மோடி தேசியக்கொடி ஏற்றுகிறார்

புதுச்சேரி: ஜூலை முதல் வாரத்தில் புதுச்சேரி கடற்கரையில் 100 அடி உயர கம்பத்தில் பிரதமர் மோடி தேசியக்கொடி ஏற்றுகிறார். 75வது சுதந்திரத்தினத்தை ஒட்டி 75 இடங்களில் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்வை பிரதமர் புதுச்சேரியில் துவங்குகிறார்.

மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் சி.வி. சண்முகம், தர்மர் வேட்பு மனு தாக்கல்

சென்னை: மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் சி.வி. சண்முகம், தர்மர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கலின் போது எதிர்கட்சி தலைவர் ஈபிஎஸ். துணை தலைவர் ஓபிஎஸ்., வேலுமணி, முனுசாமி உடன் இருந்தனர்.

சித்து மூஸ்வாலா மரணம்: சிபிஐ மற்றும் தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு பரிந்துரைக்க வேண்டும்

பஞ்சாப்: பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா மரணம் குறித்து சிபிஐ மற்றும் தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு பரிந்துரைக்க வேண்டும் என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு உயிரிழந்த சித்துவின் தந்தை பால்கவுர் சிங் கடிதம் வழங்கினார். அவர் நேற்று பஞ்சாப் மாநிலம் மான்சா மாவட்டத்தில் சுட்டுக் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்தில் 13 கிலோ கஞ்சா பறிமுதல்

வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்தில் 13 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் அன்றாட செலவுகளுக்கு மாதம்தோறும் ரூ.4 ஆயிரம் வழங்க ஏற்பாடு : பிரதமர் மோடி

டெல்லி : கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதி உதவி வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடக்கி வைத்தார்.ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் காப்பீடு அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சியையும் பிரதமர் மோடி காணொளி வாயிலாக தொடக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கான பி.எம். கேர்ஸ் பாஸ்புக் மற்றும் ஆயுஷ்மான் பாரத்- பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் சுகாதார அட்டை குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ‘கொரோனாவால் உயிரிழந்த குடும்பத்தினருடன் நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் … Read more

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் காப்பீடு அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சியை காணொளியில் திறந்து வைத்தார் பிரதமர் மோடி

டெல்லி: ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் காப்பீடு அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சியை பிரதமர் மோடி காணொளியில் திறந்து வைத்தார். உலகம் முழுவதும் பாதிப்பு ஏற்பட்டது போலவே நமது நாட்டிலும் அனைத்துப் பகுதிகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என பேசினார்.

புல்வாமாவின் குண்டிபோரா பகுதியில் நடந்த என்கவுன்டரில் தீவிரவாதி 2 பேர் சுட்டுக்கொலை

புல்வாமா: புல்வாமாவின் குண்டிபோரா பகுதியில் நடந்த என்கவுன்டரில் தீவிரவாதி 2 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து இரண்டு ஏகே ரக துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று முதல் ஜூன் 7 வரை அரசு முறை பயணமாக வெளிநாடு செல்கிறார் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு

டெல்லி: குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு அரசு முறை பயணமாக இன்று முதல் ஜூன் 7 வரை ஆப்ரிக்கா. காபோன், செனகல், கத்தார் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். வெங்கையா நாயுடுடன் தேனி எம்.பி, ரவீர்ந்திரநாத் குமார் உள்ளிட்ட 3 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பயணம் மேற்கொள்கின்றனர்.

இந்திய பொருளாதாரத்தை மூழ்கடித்தது தான் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட ஒரே சாதனை : ராகுல் காந்தி விளாசல்

மும்பை : இந்திய பொருளாதாரத்தை மூழ்கடித்தது தான் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட ஒரே சாதனை என்று காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். கடந்த 2016ம் ஆண்டு உயர் மதிப்புகளை கொண்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் மதிப்பு இழந்ததாக பிரதமர் மோடி அறிவித்தார். உயர் மதிப்புள்ள நோட்டுகளால் தான் ஊழல், கறுப்புப் பணம், கள்ளநோட்டு புழக்கம் போன்ற மோசடிகள் நடப்பதாக கூறிவிட்டு அதை விட அதிக மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுக்கள் வெளியிடப்பட்டது சர்ச்சையானது. பணமதிப்பு … Read more

கடவுளின் பெயரை சொல்லி ரூ. 50 லட்சம் வசூல் :பாஜக ஆதரவாளரான கார்த்திக் கோபிநாத் கைது

சென்னை : பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் உள்ள மதுர காளியம்மன் கோவிலை புனரமைப்பதாக கூறி இணையதளம் வழியாக ரூ. 50 லட்சம் வசூலித்து மோசடி செய்த புகார் பாஜக ஆதரவாளரான கார்த்திக் கோபிநாத் கைது செய்யப்பட்டுள்ளார்.கார்த்திக் கோபிநாத் கடவுளின் பெயரை சொல்லி வசூலில் ஈடுபட்டு மோசடி செய்துவிட்டதாக காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டு இருந்தது.