மத்திய பாஜக ஆட்சியில் ரூ. 2,000 கள்ள நோட்டு 54%; ரூ. 500 கள்ள நோட்டு 102% அதிகரிப்பு: ரிசர்வ் வங்கி ஷாக் தகவல்

மும்பை : நாட்டில் கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக கூறியுள்ள ரிசர்வ் வங்கி குறிப்பாக 500 ரூபாய் கள்ள நோட்டுக்கள் 2 மடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு உயர் மதிப்புகளை கொண்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் மதிப்பு இழந்ததாக பிரதமர் மோடி அறிவித்தார். உயர் மதிப்புள்ள நோட்டுகளால் தான் ஊழல், கறுப்புப் பணம், கள்ளநோட்டு புழக்கம் போன்ற மோசடிகள் நடப்பதாக கூறிவிட்டு அதை விட அதிக மதிப்புள்ள 2000 ரூபாய் … Read more

ராமேஸ்வரம் – மதுரை மார்க்கத்தில் மீண்டும் ரயில் சேவை

மதுரை :மதுரை – ராமேஸ்வரம் இடையிலான பயணிகள் ரயில் சேவை இன்று முதல் துவக்கப்படும் என்று  தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.இரண்டு ஆண்டுகளுக்குப்பின் இயக்கப்படும் மதுரை -ராமேஸ்வரம்,  ராமேஸ்வரம் -மதுரை வழித்தட ரயில்கள் ராமேஸ்வரம் ,பாம்பன், மண்டபம், மண்டபம் முகாம் ,உச்சிப்புளி, வாலாந்தரவை, ராமநாதபுரம், சத்திரக்குடி ,பரமக்குடி, சூடியூர், மானாமதுரை, ராஜகம்பீரம், திருப்பாசேத்தி, திருப்புவனம் ,சிலைமான், மதுரை கிழக்கு ஆகிய வழித்தடங்களில் நின்று செல்லும்.

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 'பி.எம்.கேர்ஸ்' திட்ட பலன்களை இன்று வழங்குகிறார் பிரதமர் மோடி

டெல்லி : குழந்தைகளுக்கான பி.எம். கேர்ஸ் திட்டத்தின் கீழ் பயன்களை இன்று காலை 10:30 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் திரு நரேந்திர மோடி வழங்குகிறார். பள்ளி செல்லும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை பிரதமர் மோடி அளிப்பார். இந்த நிகழ்ச்சியின்போது குழந்தைகளுக்கான பி.எம். கேர்ஸ் கணக்கியல் புத்தகம் மற்றும் ஆயுஷ்மான் பாரத்- பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் சுகாதார அட்டை குழந்தைகளுக்கு வழங்கப்படும்.மார்ச் 11, 2020 முதல் பிப்ரவரி 28, 2022 வரை கோவிட் … Read more

மாநிலங்களவை தேர்தல் : காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ப.சிதம்பரம் இன்று வேட்புமனு தாக்கல்

சென்னை :  தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகிறார் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம். காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ப.சிதம்பரம் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். இது குறித்து ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,’ தமிழ்நாட்டில் இருந்து ராஜ்யசபாவுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக இன்று மதியம் 12 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்கிறேன்;காங்கிரஸ் தலைவர், காங்கிரஸ் தலைமை, உறுப்பினர்கள், நண்பர்களின் ஆதரவு மற்றும் வாழ்த்துக்கு நன்றி,’ எனத் தெரிவித்துள்ளார்.

பி.எம்.கேர்ஸ் திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கான உதவிகளை இன்று வழங்குகிறார் பிரதமர் மோடி

டெல்லி : கொரோனா பெருந்தொற்று காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான பி.எம். கேர்ஸ் திட்டத்தின் கீழ் பயன்களை இன்று காலை 10:30 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி வழங்குகிறார். பள்ளி செல்லும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை பிரதமர் அளிக்கிறார். இந்த நிகழ்ச்சியின்போது குழந்தைகளுக்கான பி.எம். கேர்ஸ் கணக்கியல் புத்தகம் மற்றும் ஆயுஷ்மான் பாரத்- பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் சுகாதார அட்டை குழந்தைகளுக்கு வழங்கப்படும்.

மே-30: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24-க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

மாநிலங்களவை தேர்தல் கர்நாடகா வேட்பாளராக நிர்மலா சீதாராமன் போட்டி

புதுடெல்லி: தமிழகம் உட்பட 15 மாநிலங்களில் காலியாக உள்ள 57 மாநிலங்களவை எம்பி பதவிகளுக்கான தேர்தலை தேர்தல் ஆணையம் கடந்த  வாரம் அறிவித்தது. அடுத்த மாதம் 10ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளையுடன் முடிகிறது. இதனால், பல்வேறு கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. மகாராஷ்டிரா, கர்நாடகா, உத்தர பிரதேசம், பீகார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரகாண்ட், அரியானா மாநிலங்களில் போட்டியிடும் 16 வேட்பாளர்களின் பட்டியலை பாஜ நேற்று வெளியிட்டது. இதில், ஒன்றிய அமைச்சர்கள் … Read more

2 நாட்கள் காத்திருந்து ஏழுமலையான் தரிசனம் வரலாற்றில் இல்லாத அளவிற்கு திருப்பதியில் பக்தர்கள் கூட்டம்: ‘யாரும் வர வேண்டாம்’: அதிகாரி வேண்டுகோள்

திருமலை: ‘வரலாற்றில் இல்லாத அளவில் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால், ஏழுமலையான் தரிசனத்துக்கு 2 நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், யாரும் வர வேண்டாம்,’ என்று தேவஸ்தான அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆந்திர மாநிலம், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வார விடுமுறையான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால், நேற்று முன்தினம் மாலை வைகுண்டம் காத்திருப்பு அறைகள் அனைத்தும் நிரம்பி தரிகொண்ட வெங்கமாம்பா அன்னதான கூடம் … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,310,740 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63.10 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,310,740 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 531,545,114 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 502,252,748 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 37,620 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

லுக்அவுட் நோட்டீஸ் அறிவித்த நிலையில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் வெளிநாடு செல்ல அனுமதி: டெல்லி நீதிமன்றம் உத்தரவு

மும்பை: லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில். நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் வெளிநாடு செல்ல அனுமதி அளித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பெற்றுத்தருவதாக கூறிய புரோக்கர் சுகேஷ் சந்திரசேகர், ரூ.200 கோடி மிரட்டி பணம் பறித்த வழக் கில் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இவ்வழக்கில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கும் தொடர்பு இருப்பதால், அவர்மீதும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த நிலையில், அபுதாபியில் … Read more