மேடையில் பாடும்போது மாரடைப்பு பிரபல பாடகர் திடீர் மரணம்

திருவனந்தபுரம்: மேடையில் பாடும்போது மாரடைப்பு ஏற்பட்டு பாடகர் எடவா பஷீர் திடீரென்று மரணம் அடைந்தார். கேரள மாநிலம் கொல்லம் அருகிலுள்ள எடவா பகுதியை சேர்ந்தவர், பஷீர் (78). பழம்பெரும் மேடை பாடகர். ஆரம்பகாலத்தில் கே.ஜே.ஜேசுதாஸ், ரஃபி ஆகியோரின் பாடல்களை கேட்டு பயிற்சி பெற்ற அவர், பிறகு பள்ளி மற்றும் கல்லூரியில் பல பரிசுகள் பெற்றுள்ளார். தனது நண்பர்களுடன் இணைந்து, அனைத்து கேரள இசை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கான கூட்டமைப்பு உருவாக்கி அதன் தலைவராக செயல்பட்டார். கானமேளா இசைக் … Read more

நேபாளத்தில் விமான விபத்து 4 இந்தியர் உட்பட 22 பயணிகள் பலி?

காத்மண்டு: நேபாளத்தில் நடந்த விமான விபத்தில் 4 இந்தியர்கள் உட்பட 22 பேர் சிக்கினர். அவர்களின் கதி என்ன ஆனது என்று தெரியவில்லை. நேபாள நாட்டின் பொகாராவில் இருந்து ஜோம்சாம் என்ற இடத்துக்கு தாரா ஏர் நிறுவனத்தின் 9 என்- ஏஇடி இரட்டை  இன்ஜின் விமானம் நேற்று காலை 9.55 மணிக்கு புறப்பட்டது.  அதில், 19 பயணிகள் உட்பட 22 பேர் பயணம் செய்தனர். ஆனால், விமானம் கிளம்பிய சில நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டு மையத்துடன் அது தொடர்பை … Read more

அடுத்த மாதம் மீண்டும் மின்வெட்டு: குறைவான நிலக்கரி கையிருப்பால் பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கை

புதுடெல்லி: பருவமழைக்கு முந்தைய நிலக்கரி கையிருப்பு குறைவாக இருப்பதால் ஜூலை முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலும் மீண்டும் நாடு முழுவதும் மீண்டும் மின் பற்றாக்குறை பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக ஆய்வறிக்கையில் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. கோடைக்காலம் தொடங்கிய நிலையில் கடந்த மாதம் நாடு முழுவதும் கடுமையான மின் பற்றாக்குறை ஏற்பட்டது. இதற்கு, நாடு முழுவதும் உள்ள 173 அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரி கையிருப்பில் இல்லாததே காரணம் என கூறப்பட்டது. ராஜஸ்தான் உள்ளிட்ட … Read more

கேரளாவில் புதிதாக பரவும் நோய் வெஸ்ட் நைல் காய்ச்சலுக்கு ஒருவர் பலி

திருவனந்தபுரம்: கேரளாவில் புதிதாக பரவிவரும் வெஸ்ட் நைல் என்ற காய்ச்சலுக்கு திருச்சூரை சேர்ந்த ஒருவர் மரணமடைந்தார். இதையடுத்து நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. சுகாதாரத் துறையில் இந்தியாவிலேயே கேரளா முன்னணி மாநிலமாக இருந்த போதிலும் இங்குதான் தொற்று நோய்கள் அதிகமாக உள்ளன. நாட்டிலேயே கேரளாவில் தான் கொரோனா முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. நிபா, பன்றிக் காய்ச்சல்,  எலிக் காய்ச்சல், டெங்கு, பறவைக் காய்ச்சல், ஷிகெல்லா உள்பட பல தொற்று நோய்கள் அடுத்தடுத்து பரவி வருகின்றன. இதைத் … Read more

2 ஆண்டுகளுக்குப் பின் வங்க தேசத்துக்கு ரயில்: இந்தியா தொடங்கியது

கொல்கத்தா: இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியா -வங்கதேசம் இடையே  மீண்டும் பயணிகள் ரயில் சேவை துவங்கியது. கடந்த 2020ம் ஆண்டு  கொரோனா தொற்று பரவல் தீவிரமானதால், இந்தியாவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால், இந்தியா – வங்கதேசம் இடையேயான பந்தன் எக்ஸ்பிரஸ், மைத்ரி எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில்களும் நிறுத்தப்பட்டது. தற்போது, கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில், நிறுத்தப்பட்ட ரயில் சேவைகள் சில இடங்களில் தொடங்கி உள்ளன. வங்கதேசத்துக்கான பயணிகள் … Read more

வெடிகுண்டுகளுடன் இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தான் டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது: அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க சதி

ஜம்மு: நவீன வெடிகுண்டுகளுடன் இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் டிரோனை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள இந்திய எல்லைப் பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பகுதியில் அடிக்கடி பாகிஸ்தானில் இருந்து டிரோன்கள் பறக்க விடப்படும் என்பதால், கூடுதல் கண்காணிப்பு பணி இங்கு நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில், நேற்று காலை இந்திய எல்லைக்குள் அத்துமீறி பாகிஸ்தானுக்குச் சொந்தமான டிரோன் ஒன்று பறந்தது. இதைக் … Read more

லுக் அவுட் நோட்டீஸ் அறிவித்த நிலையில் நடிகை வெளிநாடு செல்ல அனுமதி: டெல்லி நீதிமன்றம் உத்தரவு

மும்பை: லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்ட நிலையில் நடிகை ஜாக்குலின் வெளிநாடு செல்ல அனுமதி அளித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பெற்றுத்தருவதாக கூறிய புரோக்கர் சுகேஷ் சந்திரசேகர், ரூ.200 கோடி மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டு ெடல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கும் தொடர்பு இருப்பதால், அவர் மீதும் அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்தது. இந்த நிலையில், அபுதாபியில் … Read more

மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 10 வேட்பாளர்கள் பெயர் அறிவிப்பு

டெல்லி: மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 10 வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வாகிறார். ராஜிவ் சுக்லா, ரஞ்சித் ரஞ்சன் ஆகியோர் காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவை தேர்தலுக்கு போட்டியிருக்கின்றனர். அஜய் மக்கான் அரியானாவில் இருந்தும், ஜெயராம் ரமேஷ் கர்நாடகத்தில் இருந்து போட்டியிட தேர்வாகிறார். ராஜஸ்தானில் இருந்து ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, முகுல் வாஸ்னிக், பிரமோத் திவாரி ஆகியோர் போட்டியிட தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கோரக்பூர் நோக்கி பறந்து சென்ற போது விமானத்தின் கண்ணாடியில் விரிசல்

மும்பை: கோரக்பூர் நோக்கி சென்ற விமானத்தின் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதால், அந்த விமானம் மும்பையில் தரையிறக்கப்பட்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து நேற்று, உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரை நோக்கிச் சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் கண்ணாடி ஒன்றில் திடீரென விரிசல் ஏற்பட்டது. அதிர்ச்சியடைந்த விமான தொழில்நுட்ப குழுவினர், உடனடியாக விமானத்தை மும்பைக்கு திருப்பிவிடுமாறு விமானியிடம் அறிவுறுத்தினர். அதையடுத்து, விமானத்தை மீண்டும் மும்பைக்கு கொண்டு செல்ல தலைமை விமானி முடிவு செய்தார். இதுகுறித்து … Read more

மோடி பிரதமரான பின்னர் முதன்முறையாக நிலக்கரி இறக்குமதிக்கு ஒன்றிய அரசு அனுமதி: மாநிலங்களின் மின்வெட்டு பிரச்னைக்கு தீர்வு

புதுடெல்லி: மோடி பிரதமரான பின்னர் முதன் முறையாக நிலக்கரியை ஒன்றிய அரசு இறக்குமதி செய்ய அனுமதியளித்துள்ளது. அதனால் வரும்காலங்களில் மாநிலங்களில் மின்வெட்டு பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்று கூறப்படுகிறது. உலகின் மிகப்பெரிய நிலக்கரி சுரங்க நிறுவனமும், ஒன்றிய அரசுக்கு சொந்தமான கோல் இந்தியா லிமிடெட் நிறுவனம், கடந்த 2015ம் ஆண்டுக்கு பின்னர் முதன்முறையாக நிலக்கரி இறக்குமதி செய்கிறது. கடந்த 2014ம் ஆண்டு மோடி பிரதமராக பதவியேற்றப் பின்னர், முதன் முறையாக நிலக்கரி இயக்குமதி செய்யப்படுகிறது. நாடு முழுவதும் … Read more