பஞ்சாப் பாடகரும், காங்கிரஸ் தலைவருமான சித்து மூஸ்வாலா சுட்டுக் கொலை

சண்டிகர்: பஞ்சாப் பாடகரும், காங்கிரஸ் தலைவருமான சித்து மூஸ்வாலா சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். சித்து மூஸ்வாலாவுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு அண்மையில் விலக்கிக் கொல்லப்பட்ட நிலையில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

அவதூறாக பேசிய விவகாரம்: பாஜக பெண் செய்தி தொடர்பாளர் மீது வழக்கு

மும்பை: குறிப்பிட்ட வகுப்பினரை அவதூறாக பேசிய விவகாரம் தொடர்பாக பாஜக பெண் செய்தி தொடர்பாளர் நூபர் ஷர்மா மீது மும்பை போலீசார் வழக்குபதிந்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் ஞானவாபி மசூதி விவகாரம் தொடர்பாக தனியார் தொலைக்காட்சி சேனலில் அளித்த பேட்டி தொடர்பாக, பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் நூபுர் ஷர்மாவின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. அதில் குறிப்பிட்ட வகுப்பினரை அவதூறு செய்யும் வகையில், அவர் பேசியதாக கூறப்படுகிறது. இதற்கிடையே இவரது பேச்சுக்கு கண்டனம் ெதரிவித்து சிலர் … Read more

தமிழ்நாட்டில் இருந்து காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவைக்கு முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் போட்டி

சென்னை: தமிழ்நாட்டில் இருந்து காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவைக்கு முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் போட்டிவிடுகிறார். சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்சாரம், சிமெண்ட், சுரங்கங்கள், துறைமுகங்களை தொடர்ந்து ஏர் ஒர்க்ஸ், ட்ரோன் தொழிலில் கால்பதிக்கும் அதானி குழுமம்: 2 நிறுவனங்களின் பங்குகளை வாங்கியதாக தகவல்

மும்பை: மின்சாரம், சிமெண்ட், சுரங்கங்கள், துறைமுகங்கள் என்று பல துறைகளில் கால் பதித்த அதானி குழுமம், தற்போது ஏர் ஒர்க்ஸ், ட்ரோன் தொழிலிலும் கால் பதிக்கிறது. அதனால், 2 நிறுவனங்களின் பங்குகளை சமீபத்தில் வாங்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதானி குழும நிறுவனமானது மின்சாரம், சிமெண்ட், ட்ரோன்கள், உணவு, சுரங்கங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் போன்ற துறைகளில் கால் பதித்துள்ளது. ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி, அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானியின் சொத்து மதிப்பு சுமார் 102 … Read more

ஐபிஎல் இறுதிப்போட்டி: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங் தேர்வு

குஜராத்: ஐபிஎல் இறுதிப்போட்டியில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. குஜராத்தில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து ராஜஸ்தான் அணி முதலில் களமிறங்க உள்ளது.

தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கியது

சென்னை: கடந்த வாரம் அரபிக் கடல் பகுதியில் உருவான காற்றழுத்தம் தற்போது மேலும் வலுப்பெற்றுள்ளதால், கேரளாவில் இந்த  ஆண்டுக்கான தென் மேற்கு பருவமழை தொடங்கும் சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது என்று கடந்த 20ம் தேதியே இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதற்கேற்ப  கடந்த 26ம் தேதி தென் மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கிவிட்டது. அதன் அறிகுறியாக தற்போது கேரளாவில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. மேலும், மாகே, லட்சத்தீவு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு புதுச்சேரி, … Read more

மாநிலங்களவை தேர்தலுக்கான பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு

டெல்லி: மாநிலங்களவை தேர்தலுக்கான பாஜக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.  ஒன்றிய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியூஸ் கோயல் உள்ளிட்ட 16 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகிறார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், மகாராஷ்டிராவில் இருந்து மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் மாநிலங்களவை உறுப்பினராகிறார்.

இந்திய எல்லைக்குள் ஊடுருவிய பாக். ட்ரோனை சுட்டு வீழ்த்திய வீரர்கள்

ஜம்மு: இந்திய எல்லைக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் ட்ரோனை கதுவா மாவட்ட பகுதியில் இந்திய வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். ஜம்மு – காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தின் ராஜ்பாக் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தல்லி ஹரியா சக் எல்லையில் ஆளில்லா விமானம் (ட்ரோன்) இன்று காலை பறந்து சென்றது. இப்பகுதியானது இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் உள்ளது. பாகிஸ்தான் எல்லையில் இருந்து வந்த இந்த ஆளில்லா விமானத்தை எல்லைப் பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். இதுகுறித்து பாதுகாப்பு வட்டாரங்கள் … Read more

தேரில் மின்சாரம் பாய்ந்து 3 பேர் பரிதாப பலி: 8 பேர் படுகாயம்

திருமலை: விழா முடிந்து தேரை ஷெட்டில் நிறுத்துவதற்காக இழுத்து சென்றபோது உயரழுத்த மின்கம்பியில் உரசியது. இதில் மின்சாரம் பாய்ந்ததில் 3 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 8க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். தெலங்கானா மாநிலம் நல்ெகாண்டா மாவட்டம் கேதேபள்ளியில் ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கென கடந்த ஆண்டு இரும்பால் ஆன புதிய தேர் உருவாக்கப்பட்டது.கடந்த மாதம் நடந்த ராமநவமியின்போது இந்த தேரில் சுவாமி வீதி உலா நடந்தது. அதன்பின்னர் கோயில் அருகே தேரை நிறுத்தியிருந்தினர். … Read more

தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை: நீலகிரி, தேனி, கோவை, திண்டுக்கல், தென்காசி உட்பட 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாளை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால்  பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.