கேரளாவில் 5 நாட்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்பு

திருவனந்தபுரம்: கேரளத்தில் பல மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. பல மாவட்டங்களில் குறிப்பிட்ட சில இடங்களில் மழை பெய்யும். கேரள மீனவர்கள் நாளை கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆதார் அட்டையுடன் முழு எண்ணையும் அளிக்க வேண்டாம் என்ற சுற்றறிக்கையை திரும்ப பெற்றது UIDAI

டெல்லி: ஆதார் அட்டையுடன் முழு எண்ணையும் அளிக்க வேண்டாம் என்ற சுற்றறிக்கையை UIDAI திரும்ப பெற்றது. ஆதார் அட்டையை எப்போதும் போல் பயன்படுத்தலாம் எனவும் விளக்கம் அளித்துள்ளது.

நேபாள விமானம் விழுந்த இடம் கண்டுபிடிப்பு

மஸ்டாங்: காலையில் 4 இந்தியர்கள் உள்பட 22 பேருடன் வழி தவறி சென்றுவிட்ட விமான விழுந்த இடம் தெரிய வந்துள்ளது. மஸ்டாங் என்ற வட்டாரத்தில் உள்ள கோவாங் என்ற இடத்தில் விமானம் விழுந்து கிடப்பது ஹெலிகாப்டர் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் சென்றவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை என்று விமான நிலைய அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

சுற்றுசூழலை பாதுகாக்க தூய காற்றுக்கொள்கையை ஜூன் 5-ம் தேதி வெளியிட உள்ளோம்: பா.ம.க. தலைவர் அன்புமணி

சென்னை: சுற்றுசூழலை பாதுகாக்க தூய காற்றுக்கொள்கையை ஜூன் 5-ம் தேதி வெளியிட உள்ளோம் என பா.ம.க. தலைவர் அன்புமணி கூறியுள்ளார். மேலும் ஆன்லைன் சூதாட்டத்தை ஒழிக்க உடனே சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும் எனவும் வன்னியர் உள் ஒதுக்கீடு விவகாரத்தில் மீண்டும் சட்ட சிக்கல் வராமல் பார்த்துக்கொள்ள முதல்வரிடம் வலியுறுத்தினேன் என பா.ம.க. தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.

‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் தஞ்சை மகளிர் குழுவுக்கு பிரதமர் மோடி பாராட்டு

புதுடெல்லி: மன் கி பாத் நிகழ்ச்சியில் தஞ்சை மகளிர் சுயஉதவி குழுவினரை பிரதமர் மோடி பாராட்டினர். பிரதமர் மோடி இன்று ‘மன் கி பாத்’ என்ற வானொலி நிகழ்ச்சியில் பேசுகையில், ‘ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் மூலம் புதிய இந்தியா உருவாகி வருகிறது. நாடு முழுவதும் ஸ்டார்ட்அப்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கேதார்நாத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆனால் சில யாத்ரீகர்கள் பரப்பும் அசுத்தத்தால் கவலையடைகிறேன். புனிதப் பயணம் மேற்கொள்ளும் போது, அங்கு குப்பைகளை கொட்டுவதை … Read more

தமிழகத்தில் 12 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 12 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் தெற்கு மண்டல துணை ஆணையராக சிம்ரன்ஜீத் சிங் கலான் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

HDFC வங்கியின் 100 வாடிக்கையாளர்கள் கணக்கில் தலா ரூ.13 கோடி தவறுதலாக வரவு வைக்கப்பட்டதால் பரபரப்பு

சென்னை: சென்னை தி.நகர் HDFC வாடிக்கையாளர்கள் 100 பேர் கணக்கில் ரூ.13 கோடி வரவு வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறால் தவறுதலாக 100 பேரின் வங்கி கணக்கில் தலா ரூ.13 கோடி சென்றதால் பரபரப்பு நிலவியுள்ளது.  

டி.ராஜேந்தரை சந்தித்து உடல்நலம் விசாரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் டி.ராஜேந்தரை சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நலம் விசாரித்தார். உடல்நலக்குறைவால் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் டி.ராஜேந்தர் சிகிச்சை பெற்று வருகிறார்.  

தலையாட்டி பொம்மை அனுப்பிய தஞ்சை மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு பிரதமர் மோடி நன்றி

டெல்லி: தலையாட்டி பொம்மை அனுப்பிய தஞ்சையை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். மன் கி பாத் எனும் வானொலி நிகழ்ச்சியின் வாயிலாக பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். 

சிதம்பரம் நடராஜர் கோயில் கணக்குகளை ஆய்வு செய்ய ஒத்துழைப்பு அளிக்கும்படி தீட்சிதர்களுக்கு அறநிலையத்துறை நோட்டீஸ்

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயில் சட்டவிதிகளின்படி நிர்வாகிக்கப்படுகிறதா என்பது குறித்து 2 நாட்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் சபையின் செயலாளருக்கு அறநிலையத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அறநிலையத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழு 7,8-ம் தேதிகளில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.