ஆர்யன் கானை போதைப்பொருள் வழக்கில் சிக்கவைத்த போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடே மீது நடவடிக்கை

மும்பை: இந்தி இளம் நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தை தொடர்ந்து இந்தி திரையுலகில் போதைப்பொருள் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இதையடுத்து நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் வழக்கில் மும்பை மண்டல போதைப்பொருள் தடுப்பு பிரிவு இயக்குனர் சமீர் வான்கடேவால் கைது செய்யப்பட்டார்.இந்நிலையில் ஆர்யன் கான் குற்றமற்றவர் என நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணையில் நடந்த தவறுகளை போதைப்பொருள் தடுப்பு பிரிவு தலைவர் எஸ்.என்.பிரதான் ஒப்புக்கொண்டுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரிகள் … Read more

குரூப் 2, 2ஏ தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு வெளியீடு: டிஎன்பிஎஸ்சி

சென்னை: குரூப் 2, 2ஏ தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. உத்தேச விடைக்குறிப்பில் ஆட்சேபனைகள் இருப்பின் ஒரு வாரத்திற்குள் பதிவு செய்யலாம் என டிஎன்பிஎஸ்சி கூறியுள்ளது.

லடாக்கில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் விபத்திற்குள்ளானதில் 7 வீரர்கள் உயிரிழப்பு: பிரதமர் மோடி இரங்கல்

லே: லடாக்கில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் விபத்திற்குள்ளானதில் 7 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். லடாக்கில் பேருந்து விபத்திற்குள்ளானதில் நமது துணிச்சல் மிக்க ராணுவ வீரர்கள் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது. உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய வேண்டும் என விரும்புகிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் … Read more

மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண உதவித்தொகை முழுவதையும் ரொக்கமாக வழங்க தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண உதவித்தொகை முழுவதையும் ரொக்கமாக வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பட்டப்படிப்பு, டிப்ளமோ முடித்த மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.50,000 திருமண உதவித்தொகை வழங்கப்படுகிறது.

பிரதமர் மோடிக்கு 17 கேள்விகளுடன் ஐதராபாத் முழுவதும் பதாகைகள்: தெலுங்கானா மாநிலத்துக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை என்ன?.. என கேள்வி..!

ஐதராபாத்: பிரதமர் மோடி நேற்று தெலுங்கானா வந்த போது ஐதராபாத் நகரில் பல்வேறு இடங்களில் மாநில வளர்ச்சி திட்டங்களின் நிலை குறித்த 17 கேள்விகளுடன் வைக்கப்பட்ட பதாகைகள் அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவுக்கு பிரதமர் மோடி நேற்று வந்த போது வரவேற்பதை முதலமைச்சர் கே.சந்திரசேகரராவ் புறக்கணித்தார். இதனிடையே தெலுங்கானா மாநிலத்துக்கு மோடி அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதது என்?. என்று கேள்விகளை எழுப்பி ஐதராபாத் நகரின் முக்கிய இடங்களில் பதாகைகள் வைக்கப்பட்டு இருந்தன. 2016ம் ஆண்டு தெலுங்கானா … Read more

லடாக்கின் துர்துக் பகுதியில் வாகனத விபத்தில் இறந்த 7 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்

டெல்லி: லடாக்கின் துர்துக் பகுதியில் வாகனத விபத்தில் இறந்த 7 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும், பாதிக்கப்பட்டோருக்கு தேவையான உதவி செய்ய உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

பொது சிவில் சட்டத்தை அமலுக்கு கொண்டு வருவது குறித்து ஆய்வு செய்ய வரைவுக்குழு அமைப்பு

உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை அமலுக்கு கொண்டு வருவது குறித்து ஆய்வு செய்ய வரைவுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி ரஞ்சனா தேசாய் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவை ஒன்றிய அரசு அமைத்துள்ளது.

மக்களின் காவலர்களாக இருந்து சிறந்து விளங்குவோரை பாராட்டுகிறேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: மக்களின் காவலர்களாக இருந்து சிறந்து விளங்குவோரை பாராட்டுகிறேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு. காவல்துறை நம் நண்பன் என்று சொல்லும் வகையில் காவலர்கள் செயல்பட வேண்டும் என்று முதலமைச்சர் கூறியுள்ளார். குற்றங்கள் நடைபெறாத சூழலை உருவாக்க வேண்டும் என்பதே எனது கோரிக்கை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.     

வீரன் ஆன ஆதி

வீரன் ஆன ஆதி 5/27/2022 3:44:13 PM மீசைய முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால், சிவகுமாரின் சபதம் படங்களில் நடித்த ஹிப்ஆப் தமிழா ஆதி அடுத்து நடிக்கும் படம் வீரன். ஏஆர்கே.சரவணன் இயக்குகிறார். ஆதி நடிப்பதோடு இசை அமைக்கிறார். இதில் ஆதிரா ராஜ் நாயகியாக நடிக்கிறார். மேலும் முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் ஆகியோர் இணைந்து  நடிக்கிறார்கள். சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன் மற்றும் செந்தில் தியாகராஜன் தயாரிக்கிறார்கள், தீபக்  மேனன் ஒளிப்பதிவு செய்கிறார். இதன் … Read more

கொரோனா பேரிடர் காலத்திற்கு பிறகு தமிழக பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் வீழ்ச்சி!: ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

டெல்லி: கொரோனா பேரிடர் காலத்திற்கு பிறகு தமிழக பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் குறைந்துள்ளது என்று ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. கொரோனா பேரிடரால் மாணவர்களின் கற்றல் திறன் எந்த அளவுக்கு மாற்றம் கண்டுள்ளது என்பது குறித்து ஒன்றிய கல்வி அமைச்சகம் தேசிய அளவில் ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வில் 3,5,8 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறன் ஆன்லைன் முறையில் சோதிக்கப்பட்டது. இதில் தமிழக மாணவர்களின் கற்றல் திறன், அனைத்து பாடப்பிரிவுகளிலும் … Read more