வீரதீர செயல் மற்றும் சாதனைகள் புரிந்த 319 காவல்துறையினருக்கு பதக்கம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: வீரதீர செயல் மற்றும் சாதனைகள் புரிந்த 319 வீரர்களுக்கு பதக்கங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் அரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழ்நாடு காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

1947 ஆகஸ்ட் 16 பீரியட் கதை அல்ல: இயக்குனர் விளக்கம்

1947 ஆகஸ்ட் 16 பீரியட் கதை அல்ல: இயக்குனர் விளக்கம் 5/27/2022 3:46:53 PM கவுதம் கார்த்திக் துடிப்பான நடிகராக இருந்தும், வலுவான சினிமா வாரிசாக இருந்தும் சரியான அங்கீகாரம் கிடைக்காமல் தவிக்கிறார். இந்த நிலையில் அவர் நடித்து வரும்  1947 ஆகஸ்ட் 16 என்கிற படத்தை இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் தயாரிக்கிறார். அவரின் உதவியாளர் என்.எஸ்.பொன்குமார் இயக்குகிறார். புதுமுகம் ரேவதி ஹீரோயின். படம் பற்றி இயக்குனர் பொன்குமார் கூறியதாவது: இது சுதந்திரப் போராட்டக் கதையல்ல, ‘சுதந்திரம் … Read more

லடாக்கில் நிகழ்ந்த வாகன விபத்தில் 7 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: படுகாயம் அடைந்தவர்களை மீட்கும் பணியில் இந்திய விமானப்படை தீவிரம்..!

லடாக்: லடாக்கின் துர்துக் பகுதியில் நிகழ்ந்த வாகன விபத்தில் இந்திய ராணுவ வீரர்கள் 7 பேர் உயிரிழந்தனர். துர்துக் பகுதியில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் விபத்தில் சிக்கியது. 26 ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் ஆற்றில் தவறி விழுந்து விபத்துக்குள்ளானது. 26 வீரர்களுடன் சென்ற ராணுவ வாகனம் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர். 16 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். வாகன விபத்தில் மேலும் சில ராணுவ வீரர்கள் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். … Read more

கரூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை

கரூர்: கரூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. வெங்கமேடு, தாந்தோன்றிமலை, காந்தி கிராமம், வையாபுரி நகர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இளையராஜாவிடம் மன அமைதி தேடும் ரஜினிகாந்த்

இளையராஜாவிடம் மன அமைதி தேடும் ரஜினிகாந்த் 5/27/2022 3:48:21 PM சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தும், இசைஞானி இளையராஜாவும் மிகுந்த நட்போடு பழகுகிறவர்கள். இளையராஜாவை ரஜினி எப்போதும் சாமி என்றே அழைப்பார். இருவரும் தனிப்பட்ட குடும்ப விஷயங்களை கூட பகிர்ந்து கொள்வார்கள். இளையராஜா தற்போது கோடம்பாக்த்தில் சொந்தமாக ஸ்டூடியோ அமைத்துள்ளார். மன அமைதி தேவைப்படும்போதெல்லாம் இந்த ஸ்டூடியோவுக்கு செல்வதை ரஜினி வழக்கமாக வைத்துள்ளார். அங்கு நெடுநேரம் செலவு செய்து அமர்ந்து இளையராஜாவின் பாடல்களை கேட்பார். அவர் பணியாற்றுவதை … Read more

லடாக்கின் துர்துக் பகுதியில் நிகழ்ந்த வாகன விபத்தில் இந்திய ராணுவ வீரர்கள் 7 பேர் உயிரிழப்பு..!!

லடாக்: லடாக்கின் துர்துக் பகுதியில் நிகழ்ந்த வாகன விபத்தில் இந்திய ராணுவ வீரர்கள் 7 பேர் உயிரிழந்தனர். வாகன விபத்தில் மேலும் சில ராணுவ வீரர்கள் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், சேலம், ஈரோடு, விழுப்புரம், நீலகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விக்ரம் பிரபு நடிக்கும் ரத்தமும் சதையும்

விக்ரம் பிரபு நடிக்கும் ரத்தமும் சதையும் 5/27/2022 3:50:46 PM கும்கி படத்திற்கு பிறகு விக்ரம் பிரபுவிற்கு திருப்பத்தை தந்துள்ள படம் டானாக்காரன்.  ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதுடன் விமர்சன ரிதீயாகவும் பெரும் பாராட்டுக்களை குவித்தது. குறிப்பாக இப்படத்தில் விக்ரம் பிரபுவின் சிறப்பான  நடிப்பு, அனைவராலும் பாராட்டப்பட்டது.இந்த நிலையில் விக்ரம் பிரபுவின் புதிய படம் அறிவிக்கப்பட்டுள்ளது.   கார்த்திக் மூவி ஹவுஸ் சார்பில் கார்த்திக் அட்வித் தயாரிக்க, விக்ரம் பிரபு நடிக்கும் அடுத்த திரைப்படத்திற்கு இரத்தமும் சதையும் … Read more

கொல்கத்தாவில் மற்றொரு சம்பவம் மாடல் அழகி தற்கொலை

கொல்கத்தா: கொல்கத்தாவில் மாடல் அழகியும், சின்னத்திரை நடிகையுமான மஞ்சுஷா நியோகி தற்கொலை செய்து கொண்டார். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பெங்காலி சின்னத்திரை நடிகையும், மாடல் அழகியுமான மஞ்சுஷா நியோகி என்பவர் வசித்து வந்தார். இவர் இன்று அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த போலீசார் நடிகையின் சடலத்தை கைப்பற்றி வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொல்கத்தாவில் கடந்த 15 நாட்களில் மூன்று நடிகைகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அடுத்தடுத்து நடிகைகள் தற்கொலை செய்து கொள்வதால், … Read more

சேலம் உடையார்பட்டியில் மசாலா அரவை ஆலையில் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் சோதனை

சேலம்: உடையார்பட்டியில் பழனியப்பன் என்பவரின் மசாலா அரவை ஆலையில் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். கலப்பட மசாலா பொடி தயாரிப்பதாக வந்த தகவலையடுத்து அரவை அலையில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.