தொழில் வாய்ப்புகள் கிடைக்காததால் விரக்தி பெங்காலி நடிகை தூக்கிட்டு தற்கொலை: 15 நாட்களுக்குள் 2 நடிகைகள் இறந்ததால் சோகம்

கொல்கத்தா: தொழில் வாய்ப்புகள் கிடைக்காத விரக்தியில் பெங்காலி நடிகை பிதிஷா டி மஜும்தார் என்பவர் கொல்கத்தாவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா நகரின் நாகர்பஜார் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் பெங்காலி தொலைக்காட்சி நடிகையும், மாடல் அழகியுமான பிதிஷா டி மஜும்தார் வசித்து வருகிறார். இந்நிலையில், அவர் நேற்று முன்தினம் இரவு முதல் தனது வீட்டின் கதவை திறக்க வில்லை. அக்கம்பக்கத்தினர் வீட்டின் கதவு திறக்காதது குறித்து, போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் … Read more

தமிழ்நாட்டில் ஜூன் 12ம் தேதி ஒரு லட்சம் மெகா தடுப்பூசி முகாம்கள்; அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் ஜூன் 12ம் தேதி ஒரு லட்சம் மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார். சென்னை, காஞ்சிபுரம் , திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் என அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் நிரபராதி; போதை பொருள் தடுப்பு பிரிவு அறிக்கை

மும்பை: நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் நிரபராதி என்று போதை பொருள் தடுப்பு பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது. போதிய ஆதாரம் இல்லாததால் கோர்டேலியா போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஆர்யன் கான், அவின் சாஹு மற்றும் 4 நிகழ்ச்சி அமைப்பாளர்கள் மீது வழக்கு எதுவும் இல்லை என போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டுக்கு வந்தது மறக்க முடியாதது , தமிழக மக்களுக்கு மிகவும் நன்றி :பிரதமர் மோடி டிவிட்டரில் பதிவு

சென்னை: நேற்றைய வருகை மறக்க முடியாதது என பிரதமர் நரேந்திரமோடி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். நிகழ்ச்சியின் ஹைலைட்ஸ் என குறிப்பிட்டு 2.07 நிமிட வீடியோவையும் பிரதமர் நரேந்திரமோடி பதிவிட்டுள்ளார்.

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஒடிசாவில் கட்டப்பட்ட பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேகம்-முதல்வர் நவீன் பட்நாயக், ஆந்திர மாநில ஆளுநர் பிஷ்வபூஷன் பங்கேற்பு

திருமலை : திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஒடிசாவில் கட்டப்பட்டுள்ள பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் அந்த மாநில முதல்வர் நவீன் பட்நாயக், ஆந்திர மாநில ஆளுநர்  பிஷ்வபூஷன் ஹரிசந்திரன் கலந்து கொண்டனர்.திருப்பதி ஏழுமலையான் கோயில் சார்பில் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் பெருமாள் கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோயிலில் விசாக சாரதா பீடாதிபதி  ஸ்வரூபானந்தேந்திர சரஸ்வதி சுவாமி, ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக், ஆந்திர மாநில ஆளுநர்  பிஷ்வபூஷன் ஹரிசந்திரன், அறங்காவலர் குழு தலைவர் … Read more

அரசு நிலங்களில் உள்ள 450 வீடுகளை இடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு: சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை: சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில்  இரண்டு மார்க்கத்திலும் கடுமையான போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்பட்டுள்ளது. அரசு நிலங்களில் உள்ள 450 வீடுகளை இடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து மறைமலைநகர் அடுத்த ரயில் நகர் மக்கள் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்

8 ஆண்டுகளாக ஒன்றிய பாஜக அரசின் 8 தவறுகள் என தலைப்பில் விமர்சன ஆவணம் ஒன்றை வெளியிட்டது காங்கிரஸ்..!

டெல்லி: 8 ஆண்டுகளாக ஒன்றிய பாஜக அரசின் 8 தவறுகள் என்ற தலைப்பில் காங்கிரஸ் கட்சி விமர்சன ஆவணம் ஒன்றை வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்கள் அஜய் மாக்கன் மற்றும் ரன்தீப் சுர்ஜேவாலா ஆகியோர் இந்த விமர்சன ஆவணத்தை டெல்லியில் வெளியிட்டனர். அதில்; பொருளாதாரம், அயலுறவுக்கொள்கை, மதநல்லிணக்கணம், நாட்டின் பாதுகாப்பு என அனைத்து துறைகளிலும் மோடி அரசு தோல்வி அடைந்துவிட்டது. வரலாறு காணாத பணவீக்கத்தை மூலம் சாமானிய மக்களின் வாழ்வில் மோடி அரசு விஷத்தை ஏற்றி இருக்கிறது. … Read more

தாம்பரம் வட்டாசியார் அலுவலகத்தில் வருவாய்த்துறை அமைச்சர் ராமச்சந்திரன் திடீர் ஆய்வு

சென்னை: சென்னை  தாம்பரம் வட்டாசியார் அலுவலகத்தில் வருவாய்த்துறை அமைச்சர் ராமச்சந்திரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் உள்ளிட்டவற்றை முறையாக வழங்க அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.  

தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஃபரூக் அப்துல்லாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்

டெல்லி :தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஃபரூக் அப்துல்லாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. டெல்லி தலைமை அலுவலகத்தில் மே 31 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.

மதிப்பெண் அடிப்படையில் எடை போடாமல் மாணவர்களின் தனி திறமையை கவனிக்க வேண்டும்; அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு

சென்னை: திராவிட அரசனாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திகழ்கிறார் என சென்னை, பள்ளிக்கரணையில் புதிய தனியார் பள்ளி திறப்பு விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியுள்ளார். மதிப்பெண் அடிப்படையில் எடை போடாமல் மாணவர்களின் தனி திறமையை கவனிக்க வேண்டும் எனவும் அவர் பேசியுள்ளார்.