அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் இதுவரை 12 மாவட்டங்களில் 5.61 லட்சம் பேர் பாதிப்பு

அசாம்: அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் இதுவரை 12 மாவட்டங்களில் 5.61 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாகோன் , காசார், மோரிகோன் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் 5.61 லட்சம் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். வெள்ளத்தால் கடந்த 24 மணி நேரத்தில் நாகோனில் 2 பேர் பலியாகியுள்ளனர் என்றும் அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையும் தகவல் தெரிவித்துள்ளது. 

ராமேஸ்வரத்தில் மீனவப் பெண் பாலியல் வன்கொடுமை; ஊர் மக்கள் சாலை மறியல்.! 200 பேர் மீது வழக்குப்பதிவு

ராமேஸ்வரம்: மீனவர் சமூக பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து ராமேஸ்வரம் வடகாடு கிராம மக்கள் சாலை மறியல் செய்தனர். இது தொடர்பாக பெயர் குறிப்பிடாமல் 200 பேர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரதமர் மோடி மீது தமிழகத்தில் அன்பும், பாசமும் பெருகி வருகிறது; அமித்ஷா ட்விட்

டெல்லி: பிரதமர் மோடி மீது தமிழகத்தில் அன்பும், பாசமும் பெருகி வருகிறது என ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். தமிழர்கள் பிரதமர் மோடியை விரும்புகிறார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குட்கா, பான் மசாலா, புகையிலை பொருட்களுக்கு மேலும் ஓராண்டு தடை: தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியீடு

சென்னை : குட்கா, பான் மசாலா, புகையிலை பொருட்களுக்கு மேலும் ஓராண்டு தடை விதித்து தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது.குட்கா, பான் மசாலா மற்றும் புகையிலை பொருட்கள் தயாரித்தல், விநியோகித்தலுக்கு மேலும் ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. 2010ம் ஆண்டு முதல் விதிக்கப்பட்ட தடை கடந்த மே 23ம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில் மேலும் ஓராண்டு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் 2,710 பேருக்கு கொரோனா.. 14 பேர் பலி…. 2,296 பேர் குணமடைந்தனர்!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 2,710 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,31,47,530 ஆக உயர்ந்தது.* புதிதாக 14 பேர் இறந்துள்ளனர்.* இதனால், … Read more

குறுவை சாகுபடிக்காக கல்லணையில் இன்று தண்ணீர் திறப்பு!

திருச்சி : டெல்டா மாவட்ட குறுவை சாகுபடிக்காக கல்லணையிலிருந்து இன்று மாலை தண்ணீர் திறந்து திறக்கப்படுகிறது. இன்று மாலை கல்லணை திறக்கப்படும் நிலையில் 4 லட்சம்  விளை நிலங்கள் பாசன வசதி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்பி, எம்எல்ஏ.க்கள் தேசிய மாநாடு பெண்கள் அதிகளவில் தேர்தலில் போட்டியிட்டு வெல்ல வேண்டும்: ஜனாதிபதி ராம்நாத் பேச்சு

திருவனந்தபுரம்: சுதந்திர இந்தியாவின் 75வது ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்று வரும் ‘‘ஆசாதி கா அமிர்த் உத்ஸவ்’வின் தொடர்ச்சியாக பெரும்பாலான மாநில சட்டசபைகளிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன்படி நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை பெண் உறுப்பினர்களின் 2 நாள் தேசிய மாநாட்டை திருவனந்தபுரம் சட்டசபையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ேநற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாது: பெண்கள் மிகவும் வலிமை வாய்ந்தவர்கள். அதனால்தான் அவர்களை சக்தியின் மறு உருவம் என்று நாம் கூறி வருகிறோம். … Read more

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் 3 திமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல்

சென்னை : மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் 3 திமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர். திமுக வேட்பாளர்கள் கிரிராஜன், ராஜேஷ்குமார், கல்யாணசுந்தரம் ஆகியோர் வேட்புமனு தாக்கல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வேட்புமனு அளிக்க உள்ளனர்.

நில முறைகேடு வழக்கில் ஜூன் 17ம் தேதி நேரில் ஆஜராக எடியூரப்பாவுக்கு நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரு : நில முறைகேடு வழக்கில் ஜூன் 17ம் தேதி நேரில் ஆஜராக எடியூரப்பாவுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.. பெங்களூருவில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் வாசுதேவரெட்டி என்பவர் மனு தாக்கல் செய்து இருந்தார்.

சாதனை ஒருபுறம்; வேதனை மறுபுறம் பள்ளிக்கு நடந்து செல்லும் 48 சதவீதம் மாணவர்கள்: ஒன்றிய அரசின் ஆய்வில் தகவல்

புதுடெல்லி: இந்தியா என்னதான் பல்வேறு துறைகளில் முன்னேறி வந்தாலும், இந்தியாவில் 48 சதவீத மாணவர்கள் பள்ளிக்கு நடந்தே செல்கின்றனர் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. நாட்டில் உள்ள 730 மாவட்டங்களில் உள்ள 1 லட்சத்து 18 ஆயிரத்து  பள்ளிக்கூடங்களில் 3,5,8ம் வகுப்புகளில் பயிலும்  மாணவர்களிடம் பல்வேறு தகவல்களை திரட்டும் வகையில் ஒன்றிய கல்வித்துறை சார்பில், ‘தேசிய  அளவிலான சாதனை ஆய்வு- 2021‘ நடத்தப்பட்டது. இதில், கிராமம் மற்றும் நகர்ப்புறங்களை சேர்ந்த 34 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். அரசு, … Read more