ஜம்முவில் பிரபல டிவி நடிகை சுட்டுக்கொலை: தீவிரவாதிகள் வெறியாட்டம்

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் பிரபல டிவி நடிகையை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படைகள் எடுத்து வரும் கடும் நடவடிக்கைகளில், தீவிரவாதிகள் வேட்டையாடப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளான லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமதுவை சேர்ந்த தீவிரவாதிகள் தொடர்ந்து கொல்லப்பட்டு வருகின்றனர். நேற்றும் கூட, குப்வாரா மாவட்டத்தில் 3 லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டுமே ஜம்மு காஷ்மீரில் வெளிநாடுகளை சேர்ந்த 26 தீவிரவாதிகளை … Read more

காலியாக உள்ள நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளுக்கு ஜூன் 23ம் தேதி இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

புதுடெல்லி: காலியாக உள்ள நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 23ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பஞ்சாப், உத்தரபிரதேசம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் காலியாக உள்ள நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளுக்கு ஜூன் 23ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 3 மக்களவை தொகுதிகள், 7 சட்டசபை தொகுதிகளுக்கு ஜூன் 23ல் இடைத்தேர்தல் நடைபெறும். ஜூன் 26ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் … Read more

கிருஷ்ணகிரி அருகே மின்சாரம் தாக்கி 9ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு..!!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த பி.சி.புதூரில் மின்சாரம் தாக்கி 9ம் வகுப்பு மாணவர் விக்னேஷ் உயிரிழந்தார். குட்டையில் குளிக்கும்போது மின்கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி விக்னேஷ் பலியாகினார்.

விபசாரத்திற்கு செல்கிறீர்களா? ஆட்டோவில் சென்ற பிரபல நடிகையிடம் அவமரியாதையாக நடந்த இன்ஸ்பெக்டர்: நடவடிக்கை எடுக்க சிபாரிசு

திருவனந்தபுரம்: கொச்சியில் இரவில் தன்னுடைய தோழிகளுடன் ஆட்டோவில் சென்ற பிரபல மலையாள நடிகை அர்ச்சனா கவியிடம் மோசமான முறையில் நடந்து கொண்ட இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. மலையாள சினிமாவில் நீலத்தாமரை என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் அர்ச்சனா கவி. பின்னர் இவர் சால்ட் அன்ட் பெப்பர், பெஸ்ட் ஆப் லக், ஸ்பானிஷ் மசாலா, நாடோடி மன்னன் உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழில் அரவாண், ஞானக்கிறுக்கன் ஆகிய படங்களில் நடித்துள்ள இவர் தெலுங்கிலும் … Read more

பிரபல கர்நாடக இசைக்கலைஞர் சுதா ரகுநாதன் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு எதிரான புகார் ரத்து: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பிரபல கர்நாடக இசைக்கலைஞர் சுதா ரகுநாதன் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு எதிரான புகார் ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. சுதா ரகுநாதன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகளுக்கு எதிராக ஜெமினி நிறுவனம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் புகார் தெரிவித்திருந்தது. உரிமையியல் பிரச்னை தொடர்பான விவகாரத்தில் உரிமையியல் நீதிமன்றத்தை தான் நாட வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

உலகின் 3வது பெரிய நுகர்வோர் சந்தை மற்றும் முதலீட்டு நிறுவனங்களுக்கான சூழலியல் அமைப்பு இந்தியாவில் உள்ளது; பிரதமர் மோடி பேச்சு

உலகின் மூன்றாவது பெரிய நுகர்வோர் சந்தை இந்தியாவில் உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஐதராபாத்தில் இந்திய தொழில் வர்த்தக பள்ளி நிறுவப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதன் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதற்காக பிரதமர் மோடி ஐதராபாத் சென்றுள்ளார். நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி பின்னர் கூறியதாவது: இந்திய தொழில் வர்த்தக பள்ளி நிறுவப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைந்ததை நாம் அனைவரும் கொண்டாடுகிறோம். இன்று பல ஊழியர்கள் பட்டங்களும், தங்கப் பதக்கங்களும் … Read more

ராமேஸ்வரத்தில் மீனவப் பெண் எரித்துக்கொலை: நகைக்கடையில் மாவட்ட எஸ்.பி. ஆய்வு

ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் கூட்டு பாலியல் செய்து கொல்லப்பட்ட மீனவ பெண்ணின் நகைகளை அடகு வைத்ததாக தகவல் வெளியானது. 6 வடமாநிலத்தவர்கள் அளித்த தகவலின் படி மாவட்ட எஸ்.பி. அனைத்து நகை கடைகளிலும் ஆய்வு மேற்கொள்கிறார். கடல்பாசி சேகரிக்க சென்ற பெண், 6 வடமாநிலத்தவர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார். 

கேரளாவில் இறைச்சி துண்டு தொண்டையில் சிக்கி கல்லூரி மாணவி உயிரிழப்பு

கேரளா: கேரள மாநிலம் செத்தலூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆஷிக்  இவரது மனைவி பாத்திமா ஹானான்  இவர் திருமணத்திற்கு பிறகும் தனியார் கல்லூரி ஒன்றில் தனது படிப்பை தொடர்ந்து வந்தார். இந்நிலையில் நேற்று வீட்டில் ஹானான் இறைச்சி உணவைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரது தொண்டையில் இறைச்சி துண்டு ஒன்று சிக்கிக் கொண்டுள்ளது. இதனால் அவர் மூச்சு விட முடியாமல் அவதிப்பட்டுள்ளார். பிறகு அவரை உடனே அருகே இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். அங்கு தொடர் சிகிச்சையிலிருந்த … Read more

உக்ரைன் போரில் ரஷ்யா வெல்லாது: ஜெர்மன் அதிபர் ஒலாப் ஸ்கோல்ஸ் கருத்து

பெர்லின்: உக்ரைனில் அமைதி உருவாக புதின் அனுமதிக்க மாட்டார். உக்ரைன் போரில் ரஷ்யா வெற்றி பெறாது; தனது நோக்கத்தில் புதின் தோற்றுவிட்டார் என ஜெர்மன் அதிபர் ஒலாப் ஸ்கோல்ஸ் கருத்து தெரிவித்தார்.

பலாத்கார வழக்கில் திடீர் திருப்பம்; நடிகையின் புகாரில் விளக்கம் அளிக்க கேரள அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு எர்ணாகுளத்தில் உள்ள தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தின் அனுமதியுடன் தொடர் விசாரணையும் நடைபெறுகிறது. இம்மாத இறுதிக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட நடிகை கடந்த சில நாட்களுக்கு முன் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் பலாத்கார வழக்கில் முதலில் இருந்த வேகம் தற்போது இல்லை. விசாரணையில் ஆளுங்கட்சியினர் … Read more