அமெரிக்காவில் துப்பாக்கிக் கலாச்சாரம் ஒழிவது எப்போது?: திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி

சென்னை: அமெரிக்காவில் துப்பாக்கிக் கலாச்சாரம் ஒழிவது எப்போது? என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பினார். மனித குலமே எந்நாட்டவராக இருந்தாலும் வெட்கித் தலைகுனிய வேண்டிய செய்தி என கூறினார். 

ஏரிக்குள் கார் பாய்ந்து ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி: திருமணத்திற்கு சென்றபோது அதிகாலை சோகம்

திருமலை: ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் ரெட்டிவாரி கிராமத்தை சேர்ந்தவர் கங்கிரெட்டி. இவரது மனைவி மதுலதா. மகள் குஷிதாரெட்டி, மகன் தேவன்ஷ்ரெட்டி. இவர்களது உறவினர் ஒருவரின் திருமணம் இன்று சித்தூர் மாவட்டம் பலமனேரில் நடந்தது. இதில் பங்கேற்பதற்காக கங்கிரெட்டி தனது குடும்பத்தினருடன் இன்று அதிகாலை காரில் புறப்பட்டார். மதனப்பள்ளி அருகே உள்ள புங்கனூர் சாலை வழியாக வந்தபோது ஏரி மீதுள்ள சிறுபாலத்தை கடக்க முயன்றனர். அப்போது எதிர்பாராமல் கார் கட்டுப்பாட்டை இழந்து ஏரிக்குள் பாய்ந்து கவிழ்ந்தது. இதனை … Read more

தமிழகத்தின் உட்கட்டமைப்புக்கு இன்று முக்கியமான நாள்: ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் உரை

சென்னை: தமிழகத்தின் உட்கட்டமைப்புக்கு இன்று முக்கியமான நாள் ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் பேசியுள்ளார். ரூ.31,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடிக்கு ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் நன்றி கூறினார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் தங்கியிருந்த அறைக்குள் புகுந்த பாம்புகள்!

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் பல்வேறு அறைகள் வாடகைக்கு வழங்கப்படுகிறது. அவ்வாறு பத்மாவதி விசாரணை மையம் அருகே உள்ள பாண்டவா விருந்தினர் மாளிகையில் நாகபாம்பு ஒன்று வந்தது. உடனடியாக அங்கிருந்த பக்தர்கள் தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு சென்ற பாம்பு பிடிக்கும் ஊழியரான பாஸ்கர் அந்த பாம்பை பத்திரமாக பிடித்தார். இதேபோன்று ஜி.என்.சி சோதனை சாவடி அருகே உள்ள தேவஸ்தான தோட்டத்துறை நர்சரியில் சாரைப்பாம்பு … Read more

அரசு விழாவில் பங்கேற்க ஐதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி..!!

சென்னை: பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைப்பதற்காக ஐதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். சென்னை – நேரு உள்விளையாட்டு அரங்கங்களில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி வருகை புரிந்துள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு உள்ளிட்டோர் பிரதமரை வரவேற்றனர். இன்னும் சற்று நேரத்தில் ஹெலிகாப்டர் வாயிலாக அடையாறு ஐஎன்எஸ் கடற்படை தளத்திற்கு செல்ல உள்ளார்.

கேரள சட்டசபையில் நாடாளுமன்ற, சட்டப்பேரவை பெண் உறுப்பினர்கள் தேசிய மாநாடு: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைத்தார்

திருவனந்தபுரம்: கேரள சட்டசபையில் நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை பெண் உறுப்பினர்களின் 2 நாள் தேசிய மாநாட்டை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று தொடங்கி வைத்தார். சுதந்திர இந்தியாவின் 75வது ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்று வரும் ‘ஆசாதி கா அமிர்த் திருவிழா’ வின் தொடர்ச்சியாக பெரும்பாலான மாநில சட்டசபைகளிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன்படி நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை பெண் உறுப்பினர்களின் 2 நாள் தேசிய மாநாட்டை கேரள சட்டசபையில் (திருவனந்தபுரம்) நடத்த தீர்மானிக்கப்பட்டது. ஜனாதிபதி … Read more

அரசு விழாவில் பங்கேற்க சென்னை வந்த பிரதமர் மோடியை வரவேற்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: அரசு விழாவில் பங்கேற்பதற்காக சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடியை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். ஐ.என்.எஸ். கடற்படைத் தளத்தில் பிரதமர் மோடியை முதலமைச்சர் வரவேற்றார். ஐ.என்.எஸ். கடற்படைத் தளத்தில் இருந்து சாலை மார்க்கமாக ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கிற்கு பிரதமர் மோடி செல்கிறார்.

ஹிஜாப் தடையை அமல்படுத்தக்கோரி கல்லூரி வளாகத்திற்குள் மாணவ மாணவிகள் போராட்டம்!

பெங்களூரு: கர்நாடகாவில் பள்ளி மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டது போல கல்லூரி மாணவிகளும் தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி மங்களூருவில் மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பள்ளி மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதித்த கர்நாடக அரசு கடந்த பிப்ரவரி முதல் புதிய சீருடை சட்டத்தை அமல்படுத்தி அரசாணை வெளியிடப்பட்டது. இதை எதிர்த்து மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில் கர்நாடக அரசாணை செல்லும் என்று மார்ச் 15-ம் … Read more

சென்னை வரவுள்ள பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க கூடியுள்ள பரத நாட்டிய கலைஞர்கள்..!!

சென்னை: சென்னை வரவுள்ள பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க பொதுமக்கள், பரத நாட்டிய கலைஞர்கள் கூடியுள்ளனர். பொதுமக்களை கட்டுப்படுத்தும் வகையில் காவல்துறை தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி மாலை 5.05 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார்.

மேற்கு வங்கத்தில் மாநில பல்கலைக்கழகங்களில் ஆளுநருக்கு பதில் முதல்வரே துணைவேந்தராக இருப்பார்: அமைச்சர் ப்ரத்யா பாசு தகவல்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் மாநில அரசால் நடத்தப்படும் பல்கலைக்கழகங்களில் ஆளுநருக்கு பதில் முதல்வரே துணைவேந்தராக இருப்பார் என்று அமைச்சர் ப்ரத்யா பாசு தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேரவையில் விரைவில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார். துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்யும் வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் சில நாட்களுக்கு முன்பு சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.