வெளிநாடுகளில் இருப்பது போன்று தமிழ்நாட்டில் சாகச சுற்றுலா நடத்தப்படும்: அமைச்சர் மதிவேந்தன் தகவல்

சென்னை: வெளிநாடுகளில் இருப்பது போன்று தமிழ்நாட்டில் சாகச சுற்றுலா நடத்தப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் அறிவித்துள்ளார். இதுகுறித்து பேட்டியளித்த அவர், சாகச சுற்றுலாவுக்கு புதிய நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. ரூ.25 லட்சம் மதிப்பில் ஏற்காடு படகு இல்லத்தில் மிதக்கும் உணவகம் அமைக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.

புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் ரசாயன பவுடர் மூலம் பழுக்க வைத்த 1 டன் மாம்பழங்கள் பறிமுதல்

புதுச்சேரி: புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் ரசாயன பவுடர் மூலம் பழுக்க வைத்த 1 டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பழக்கடைகளில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் மாம்பழங்களை பறிமுதல் செய்தனர்.

பிரதமர் நரேந்திர மோடி வருகை எதிரொலி!: சென்னை விமான நிலையத்தையொட்டி வாகனங்கள் நிற்க தடை..!!

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருவதன் எதிரொலியாக விமான நிலையத்தையொட்டி வாகனங்கள் நிற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் மூலமாக பிரதமர் மோடி அடையாறு ஐ.என்.எஸ். தளம் செல்கிறார். மாலை 5.05 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார். சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நகை, பணம் கொள்ளையடித்த வீட்டில் ‘ஐ லவ் யூ’ என எழுதி சென்ற திருடர்கள்; கோவாவில் விநோத சம்பவம்

பனாஜி: கோவா மாநிலத்தில் ஒரு வீட்டில் கொள்ளையடித்த மர்ம ஆசாமிகள், அங்கு ‘ஐ லவ் யூ’ என்று எழுதி சென்ற விநோத சம்பவம் நடந்துள்ளது. கோவா மாநிலம் மார்கோவ் நகரில் வசித்து வருபவர் ஆசிப் செக். 2 நாட்கள் பயணமாக வெளியூருக்கு சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு திறந்திருந்தது. அதிர்ச்சிடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, ரூ.20 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் மற்றும் ரூ.1.5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை … Read more

கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய மே 30 வரை தடை: டெல்லி நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை மே 30 வரை அமலாக்கத்துறை கைது செய்ய டெல்லி நீதிமன்றம் தடை விதித்தது. சீனருக்கு விசா பெற்றுத்தர லஞ்சம் வாங்கியதாக கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

தெலங்கானாவில் விரைவில் அரசியல் மாற்றம் நிகழும்: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

தெலுங்கானா: தெலங்கானாவில் விரைவில் அரசியல் மாற்றம் நிகழும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தெலங்கானா, ஹைதராபாத்தில் பாஜக தொண்டர்கள் முன்னிலையில் பிரதமர் மோடி பேசினார். குடும்ப அரசியல் காரணமாக இளைஞர்களுக்கு அரசியலில் நுழைய வாய்ப்பு கிடைப்பதில்லை என அப்போது தெரிவித்தார்.

ராமேஸ்வரத்தில் மீனவப் பெண் எரித்துக்கொலை: நகைக்கடை ஒன்றில் எஸ்.பி. திடீர் விசாரணை

ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் பெண் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக நகைக்கடையில் விசாரணை நடத்தினர். வழக்கில் திடீர் திருப்புமுனையாக மாவட்ட எஸ்.பி.கார்த்திக், நகைக்கடை ஒன்றில் விசாரணை நடத்தி வருகிறார். ராமேஸ்வரம் அருகே கடல்பாசி சேகரிக்கச் சென்ற மீனவப் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு நேற்று கொலை செய்யப்பட்டார்.

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே பட்டப்பகலில் அரசுப் பேருந்து கடத்தல்: ஒருவர் கைது..போலீசார் விசாரணை..!!

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே ஆலுவா அரசு பேருந்து பணிமனையில் இருந்து அரசுப் பேருந்து கடத்தப்பட்டது. கடத்தி சென்ற பேருந்து சாலையோரம் நின்ற மூன்றுக்கும் மேற்பட்ட வாகனங்களின் மீது மோதியது. காளூர் பகுதியில் போலீசார் தடுத்து நிறுத்தி பேருந்தை மீட்டனர். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

தமிழகம் முழுவதும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்களை நியமித்திடுக: டிடிவி தினகரன் கோரிக்கை

சென்னை: தமிழகம் முழுவதும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 10 ஆயிரம் ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர் நியமனத்திற்கு உடனே ஒப்புதல் தர வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார். உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் உச்சநீதிமன்ற வழக்கை காரணம் காட்டி காலம் தாழ்த்தக்கூடாது என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். அரசு காலம் தாழ்த்துவதால் ஆசிரியர்கள், பணியாளர்கள் ஊதியமின்றி செயல்படும் நிலை ஏற்பட்டுள்ளது என டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

சிவசேனா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அனில் பிரப்-க்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை

மும்பை : பணமோசடி விசாரணை தொடர்பாக மராட்டிய அமைச்சரும் சிவசேனா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அனில் பிரப்-க்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டுள்ளது. நிலம் பேரம் ஒன்றில் நடந்த முறைகேடுகள் தொடர்பான பணமோசடி விசாரணையின் ஒருபகுதியாக இந்த சோதனை நடைபெற்றது.அனில் பிரப் மீது பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் புதிய வழக்குப்பதிவு செய்யப்பட்டதையடுத்து மராட்டியத்தில் புனே, மும்பை மற்றும் தபோலி ஆகிய நகரங்களில் உள்ள 7 வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறையால் சோதனை நடத்தப்படுகிறது.ரத்தினகிரி … Read more