விலைவாசி உயர்வை தடுக்க சர்க்கரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு: ஒன்றிய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: சர்க்கரை கையிருப்பை பராமரிப்பதற்கும், விலையை கட்டுக்குள் வைப்பதற்கும் வரும் 1ம் தேதி முதல் சர்க்கரை ஏற்றுமதிக்கு ஒன்றிய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.ரஷ்யா- உக்ரைன் போர் காரணமாக வினியோக சங்கிலி பாதிக்கப்பட்டு, சர்க்கரைக்கான தேவை கணிசமாக அதிகரித்து வருகிறது. உள்நாட்டில் போதிய அளவில் சர்க்கரை கையிருப்பை உறுதி செய்யவும், சர்க்கரை விலையை கட்டுக்குள் வைக்கவும், அதன் ஏற்றுமதிக்கு ஒன்றிய அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, வரும் ஜூன் 1ம் தேதியில் இருந்து, எந்த சர்க்கரை ஏற்றுமதியாக … Read more

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு 19 மாணவர்கள் உட்பட 21 பேர் பலி: குற்றவாளியை போலீஸ் சுட்டு கொன்றது

ஹூஸ்டன்: அமெரிக்காவில் உள்ள தொடக்கப் பள்ளிக்குள் நுழைந்த இளைஞன் நடத்திய கண் மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில், அங்கிருந்த 19 மாணவ, மாணவிகள், 2 ஆசிரியர்கள் என மொத்தம் 21 பேரை சுட்டுக் கொன்றான். இச்சம்பவத்துக்கு அதிபர் பைடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் துப்பாக்கி வைத்து கொள்வது என்பது மனித உரிமைகளில் ஒன்றாக உள்ளது. இந்த துப்பாக்கி கலாசாரம் தற்போது மிகவும் மோசமடைந்து வருகிறது. இதற்கு முன்பு அதிபராக இருந்த ஒபாமா இதனைக் கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகள் … Read more

2 வருடத்துக்கு பிறகு தொடங்கும் மோகன்லால், திரிஷா படம்

திருவனந்தபுரம்: மோகன்லால், திரிஷா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு 2 வருடங்களுக்கு பிறகு தொடங்க உள்ளது. மோகன்லால் நடிப்பில் திரிஷ்யம், திரிஷ்யம் 2 படங்களை இயக்கியவர் ஜீத்து ஜோசப். சமீபத்தில் மோகன்லால் நடித்த டுவெல்த் மேன் படத்தை இயக்கி இருந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மோகன்லால், திரிஷா நடிப்பில் ராம் என்ற படத்தை உருவாக்குவதாக ஜீத்து ஜோசப் தெரிவித்தார். கொரோனா பாதிப்பின் காரணமாக அதிக தொழில்நுட்ப கலைஞர்களை வைத்து இந்த படம் உருவாக்க முடியாததால், பல இடங்களில் … Read more

3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை காவலர் வீரமரணம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் நஜிபாத் சந்திப்பு சோதனை சாவடி பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருந்தனர். அந்த இடத்தை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்ததும், அவர்களின் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு வீரர்கள் கொடுத்த பதிலடியில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த சண்டையின்போது, போலீஸ்காரர் ஒருவர் வீர மரணமடைந்தார். கொல்லப்பட்ட தீவிரவாதிகள் அனைவரும், பாகிஸ்தானில் செயல்படும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்தவர்கள்.

நன்கொடை வசூலித்து தில்லுமுல்லு 2,100 கட்சிகள் மீது நடவடிக்கை: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

புதுடெல்லி: இந்திய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் கடந்த 15ம் தேதி பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்ற பின்னர் நிதி முறைகேடுகள், விதிமுறைகளை மீறி செயல்படும், ‘பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள்’ மீது  நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, விதிமுறைகளை மீறி நன்கொடைகளை  பெற்று மோசடியில் ஈடுபட்டு வரும் இதுபோன்ற கட்சிகள் மீதான அதிரடி துவங்கி உள்ளது. கடுமையான நிதி முறைகேட்டில் ஈடுபட்ட 3 அரசியல் கட்சிகள் மீது நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும், … Read more

அதிமுக சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிப்பு

சென்னை: அதிமுக சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. முன்னாள் அமைச்சர் சி.வவி.சண்முகம், முதுகுளத்தூர் அதிமுக ஒன்றிய செயலாளர் ஆர்.தர்மர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் வரும் ஜூன் 10 ஆம் தேதி நடைபெறுகிறது.

சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு: சிபிஐயை தொடர்ந்து அமலாக்கத்துறை நடவடிக்கை..!

டெல்லி: சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான ப.சிதம்பரத்தின் மகனான எம்பி கார்த்தி சிதம்பரம், காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி காலத்தில் விதிமுறைகளை மீறி ரூ. 50 லட்சம் லஞ்சம் பெற்றுக்கொண்டு 263 சீனர்களுக்கு விசா வழங்கியதாக புகார் எழுந்தது. அதையடுத்து கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. அதனை தொடர்ந்து அவருக்குத் தொடர்புடைய 10 இடங்களில் கடந்த வாரம் சோதனை … Read more

பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வருவதையொட்டி டிரோன்கள், ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை: காவல்துறை அறிவிப்பு

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வருவதையொட்டி டிரோன், ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டிருப்பதாக போலீஸ் அறிவித்துள்ளது. தடையை மீறி டிரோன்களை பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னையில் 22,000 போலீசாருடன் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

லாரி மீது பைக் மோதிய விபத்தில் இருவர் உயிரிழப்பு

திருப்பதி: சென்னை – திருப்பதி நெடுஞ்சாலையில் லாரி மீது பைக் மோதிய விபத்தில் லாரி தீப்பிடித்து எரிந்தது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் அருகே பஞ்சாப் மாநிலத்தில் இருந்து சரக்கு ஏற்றி வந்த லாரி, எதிரே வந்த பைக் மீது மோதியதில் தீப்பிடித்து எரிந்தது.லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் விபத்திலிருந்து தப்பி, விபத்து குறித்து தகவல் அளித்ததன் பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விபத்து ஏற்பட்ட … Read more

தமிழகத்தில் 8 இடங்களில் சதமடித்த வெயில்: அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 104 டிகிரி ஃ பாரன்ஹீட் வெப்பம்

சென்னை: தமிழகத்தில் அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 104 டிகிரி ஃ பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. அடுத்தபடியாக மற்றும் திருச்சியில் 102 டிகிரி, வேலூரில் 101 டிகிரி, சென்னை நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம், கடலூர், மதுரை, தஞ்சையில் தலா 100 டிகிரி ஃ பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.