டான்ஜெட்கோ நிலுவைத் தொகைக்கான அபராதத்தை ரத்து செய்ய ஒன்றிய அரசு புதிய திட்டம்

டெல்லி: டான்ஜெட்கோ நிலுவைத் தொகைக்கான அபராதத்தை ரத்து செய்ய ஒன்றிய அரசு புதிய திட்டம் அமைத்துள்ளது. தவணை முறையில் நிலுவைத் தொகையை செலுத்த அனுமதி தருவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்தது. நாடு முழுவதும் உள்ள மின்விநியோக அமைப்புகளின் நிலுவைத் தொகை ரூ.1 லட்சம் கோடியை கடந்துள்ளது.

சேலம் ஏற்காட்டில் ஜூன் 1ம் தேதி வரை நடைபெறவுள்ள கோடை விழா கோலாகலமாக தொடங்கியது..!!

சேலம்: சேலம் ஏற்காட்டில்  ஜூன் 1ம் தேதி வரை நடைபெறவுள்ள கோடை விழா கோலாகலமாக தொடங்கியது. கோடை விழாவையொட்டி மலர் கண்காட்சி, மாம்பழக் கண்காட்சி, காய்கறி கண்காட்சி இடம் பெற்றுள்ளது. மலர்களை கொண்டு மேட்டூர் அணை, பேருந்து, வள்ளுவர்கோட்டம், மாட்டு வண்டி வடிவமைக்கப்பட்டுள்ளன.

3 பாக். தீவிரவாதிகள் சுட்டுக் கொலை: இந்திய வீரர் ஒருவர் வீரமரணம்

ஜம்மு: ஜம்மு – காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவில் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே இன்று காலை கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் போலீஸ்காரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். பாதுகாப்புப் படையினர் நடத்திய பதிலடி தாக்குதலில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் மூவரும் பாகிஸ்தானியர்கள் என்று கூறப்படுகிறது.இந்த என்கவுன்டர் குறித்து ஐஜிபி விஜய் குமார் கூறுகையில், ‘பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட 3 பேரும் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள். இவர்கள் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்துடன் … Read more

பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வருகை!: தமிழகம் முழுவதும் ரயில் நிலையங்களில் கண்காணிப்பு தீவிரம்..!!

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வருவதையொட்டி தமிழகம் முழுவதும் ரயில் நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்று ரயில்வே காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இரு சக்கர வாகனத்தில் பின் இருக்கையில் அமர்ந்து பயணிப்போருக்கும் ஹெல்மெட் கட்டாயம்: மும்பை மாநகர காவல் அறிவிப்பு

மும்பை: இரு சக்கர வாகனத்தில் பின் இருக்கையில் இருப்போருக்கும் ஹெல்மெட் கட்டாயம் என மும்பை மாநகர காவல் அறிவித்துள்ளது. நாடுமுழுவதும் சாலை விபத்துகளில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கின்றனர். இதனால் சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதனடிப்படையில் மும்பையில் இரு சக்கர வாகனத்தில் பின் இருக்கையில் இருப்போருக்கும் ஹெல்மெட் கட்டாயம் என மும்பை மாநகர காவல் தெரிவித்துள்ளது.  இந்த விதி 15 நாட்களில் அமலுக்கு வரும் எனவும் விதியை மீறினால் … Read more

குற்றாலம் பேரூராட்சி துணைத் தலைவராக அதிமுக வேட்பாளர் தேர்வு

தென்காசி: குற்றாலம் பேரூராட்சி துணைத்தலைவராக அதிமுகவை சேர்ந்த தங்கபாண்டி தேர்வு செய்யப்பட்டார். பேரூராட்சி தலைவராக அதிமுகவை சேர்ந்த கணேஷ் தாமோதரன் தேர்வான நிலையில் துணைத் தலைவரும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

அம்பேத்கர் மாவட்ட பெயரை நீக்க கோரி பயங்கர கலவரம் ஆந்திராவில் அமைச்சர் அலுவலகம், எம்எல்ஏ வீடு தீ வைத்து எரிப்பு: 2வது நாளாக 144 தடைநீடிப்பு; இணையதள சேவை துண்டிப்பு

திருமலை: அம்பேத்கர் மாவட்ட பெயரை நீக்க கோரி ஆந்திராவில் நேற்று நடந்த பயங்கர கலவரம் காரணமாக இன்று 2வது நாளாக 144 தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.ஆந்திராவில் இருந்த 13 மாவட்டங்களை பிரித்து கூடுதலாக 13 புதிய மாவட்டங்கள் ஏற்படுத்தப்பட்டது. அதில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் இருந்த அமலாபுரத்தை, மாவட்ட தலைநகராக வைத்து கோணசீமா மாவட்டம் உருவாக்கப்பட்டது. இந்த மாவட்டத்தை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் கோணசீமா மாவட்டம் என பெயர் சூட்ட அரசு முடிவு செய்து … Read more

தமிழகத்திற்கு ரூ.31,400 கோடி மதிப்புள்ள 11 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி: அண்ணாமலை அறிவிப்பு

சென்னை: தமிழகத்திற்கு ரூ.31,400 கோடி மதிப்புள்ள 11 திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ரூ.500 கோடி மதிப்பில் மதுரை – தேனி 75 கி.மீ. அகல ரயில்பாதை உள்ளிட்ட திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். தமிழக மக்கள் சார்பில் பிரதமர் மோடியை வரவேற்கிறேன் என தெரிவித்திருக்கிறார்.

இரு சக்கர வாகனத்தில் பின் இருக்கையில் இருப்போருக்கும் ஹெல்மெட் கட்டாயம்: மும்பை மாநகர காவல் அறிவிப்பு

மும்பை: இரு சக்கர வாகனத்தில் பின் இருக்கையில் இருப்போருக்கும் ஹெல்மெட் கட்டாயம் என மும்பை மாநகர காவல் அறிவித்தது. 15 நாட்களில் இந்த விதி அமலுக்கு வரும்; விதி மீறினால், 500 ரூபாய் அபராதம் மற்றும் 3 மாதங்கள் லைசன்ஸ் சஸ்பெண்ட் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி மணப்பாறை அருகே குளத்தில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 3 பேர் பலி..!!

திருச்சி: மணப்பாறை அருகே கீழப்பூசாரிப்பட்டி கிராமத்தில் குளத்தில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 3 பேர் உயிரிழந்தனர். கீழப்பூசாரிப்பட்டியில் உள்ள பாப்பான்குளத்தில் சிறுவர்கள் இறங்கி குளித்தபோது சேற்றில் சிக்கி உயிரிழந்தனர். உயிரிழந்த 3 மாணவர்களும் 9 மற்றும் 10-ம் வகுப்பு படித்து வந்ததாக போலீசார் தகவல் தெரிவித்தனர்.