காங்கிரஸில் இருந்து கழண்டுகொண்டார் மூத்த தலைவர் கபில் சிபல்: சமாஜ்வாதி சார்பில் ராஜ்யசபாவுக்கு போட்டி!!

லக்னோ : காங்கிரஸ் மூத்த தலைவரான கபில் சிபல் கட்சியில் இருந்து விலகி அகிலேஷின் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார். காங்கிரஸ் கட்சி கடந்த 2014, 2019 ஆகிய இரு மக்களவை தேர்தலில் தோல்வி அடைந்த நிலையில், பல மாநிலங்களிலும் ஆட்சியை பறிகொடுத்து வருகிறது. இதனால், கட்சி தலைமை குறித்து காங்கிரசில் அதிருப்தி ஏற்பட்டது. மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட 23 தலைவர்கள் அதிருப்தி அணியில் சேர்ந்தனர். இவர்கள் ஜி-23 தலைவர்கள் என அழைக்கப்படுகின்றனர்.இந்த ஜி23 … Read more

தமிழ்நாட்டில் காலை 8.30 மணி நிலவரப்படி சென்னை உள்பட 11 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டியது..!!

சென்னை: தமிழ்நாட்டில் காலை 8.30 மணி நிலவரப்படி சென்னை உள்பட 11 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டியது. மீனம்பாக்கம், கரூர் பரமத்தி, மதுரை விமான நிலையம் ஆகிய இடங்களில் இன்று வெயில் 104 டிகிரி ஃபாரன்ஹீட்டை எட்டும். கடலூர், நாமக்கல், தஞ்சை, திருச்சி, திருத்தணி, வேலூரிலும் இன்று வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை தாண்டக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதியில் ஆலோசனை கூட்டம் வீடு கட்டும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்-துணை முதல்வர் உத்தரவு

திருப்பதி : திருப்பதியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் ஜெகன் அண்ணா வீடு கட்டும் திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் துணை முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார். திருப்பதி கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாநில துணை முதல்வர் நாராயணசாமி தலைமை தாங்கினார். அப்போது, அவர் பேசியதாவது: அனைத்து மக்களும் சிறப்பாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நமது முதல்வர் ஜெகன்மோகன் நவரத்தினா திட்டத்தை அமல்படுத்தினார். இதனால், … Read more

5 நாள் பயணமாக சென்னை வந்தார் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு..!!

சென்னை: 5 நாள் பயணமாக  குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு சென்னை வந்தார். தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் சிலையை மே 28ம் தேதி திறந்து வைக்கிறார்.

மங்களூருவில் இடிக்கப்பட்ட மசூதி பகுதியில் கோவில் அம்சங்கள் இருப்பதாக இந்துத்துவா அமைப்பினர் புதிய சர்ச்சை : 144 தடை உத்தரவு

மைசூர் : கர்நாடகாவில் ஹிஜாப் மற்றும் ஹலால் பிரச்சனையைத் தொடர்ந்து கோவிலின் மீது மசூதிக் கட்டப்பட்டு இருப்பதாக இந்துத்துவா அமைப்புகள் புதிய சர்ச்சையை கிளம்பியுள்ளன. மங்களூரில் உள்ள மாலலி என்ற இடத்தில் கேரள முறைப்படி கட்டப்பட்ட மதானி ஜும்மா மசூதியின் ஒரு பகுதி புனரமைப்பு பணிக்காக மசூதி நிர்வாகத்தினரால் இடிக்கப்பட்டது. இந்த புனரமைப்பு பணியின் போது, அதில் இந்து கோவில் இருந்ததற்கான அம்ஸங்கள் காணப்படுவதாக விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் உரிமைக் கோரினர். 2 வாரங்களுக்கு முன்பு … Read more

பாஜக நிர்வாகி கொலை: கவனக்குறைவாக இருந்த பாதுகாவலர் பணியிடை நீக்கம்

சென்னை: சென்னையில் பாஜக நிர்வாகி பாலசந்தர் கொல்லப்பட்ட வழக்கில் அவரின் பாதுகாவலர் பாலமுருகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பணியின்போது கவனக்குறைவாக இருந்த காரணத்தால் பாதுகாவலர் பாலமுருகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 

ஒடிசாவில் பேருந்து கவிழ்ந்து விபத்து!: சுற்றுலா பயணிகள் 6 பேர் உயிரிழப்பு..40 பேர் படுகாயம்..!!

கஞ்சம்: ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர்; 40 பேர் படுகாயமடைந்தனர். மேற்கு வங்கத்தில் இருந்து சுற்றுலாவுக்காக வந்தவர்களின் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

புலியூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கு நடக்கவிருந்த தேர்தல் 3வது முறையாக ஒத்திவைப்பு..!!

கரூர்: கரூர் மாவட்டம் புலியூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கு நடக்கவிருந்த தேர்தல் 3வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கலாராணியை தலைவர் பதவிக்கு திமுக முன்மொழியாததால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. மொத்தம் உள்ள 15 வார்டு உறுப்பினர்களில் திமுக, பாஜக, சிபிஐ தரப்பில் தலா ஒரு கவுன்சிலர்கள் மட்டுமே வந்தனர்.

ஞானவாபி மசூதி சர்ச்சை இஸ்லாமிய அமைப்பின் மனு முதலில் விசாரணை: வாரணாசி நீதிமன்றம் முடிவு

வாரணாசி: உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டி அமைந்துள்ள ஞானவாபி மசூதி வளாக சுவரில் இருக்கும் சிங்கார கவுரி அம்மன் உள்ளிட்ட இந்து தெய்வங்களை ஆண்டு முழுவதும் வழிபட அனுமதி கோரி, 5 பெண்கள் தொடர்ந்த வழக்கை வாரணாசி நீதிமன்றம் விசாரித்தது. மசூதிக்குள் வீடியோ பதிவுடன் ஆய்வு நடத்தும்படி இதன் நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி நடந்த ஆய்வின்போது, மசூதிக்குள் சிவலிங்கம் இருப்பதாக கூறப்பட்டது. இந்த ஆய்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மசூதி நிர்வாகம் … Read more

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் குறியீட்டு எண் 201 புள்ளிகள் அதிகரித்து 54,254-ஆக வர்த்தகம்..!!

மும்பை: மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் குறியீட்டு எண் 201 புள்ளிகள் அதிகரித்து 54,254 ஆக வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 71 புள்ளிகள் அதிகரித்து 16,196 ஆக  வர்த்தகமாகிறது.