இந்தியாவில் ஒரே நாளில் 2,124 பேருக்கு கொரோனா.. 17 பேர் உயிரிழப்பு.. 1,977 பேர் குணமடைந்தனர்!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 2,124 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,31,42,192 ஆக உயர்ந்தது.* புதிதாக 17 பேர் இறந்துள்ளனர்.* இதனால், … Read more

தனியார் மெட்ரிக் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை இன்றுடன் நிறைவு!!

சென்னை : RTE கீழ் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.  விண்ணப்பிக்க தவறியவர்கள் http://rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவை பேச அனுமதிக்கும் அமைப்புகள் தாக்கப்படுகின்றன: இங்கிலாந்தில் ராகுல் பேச்சு

புதுடெல்லி: கேம்பிரிட்ஜ் பல்கலை.யில் இந்திய மாணவர்கள் மத்தியில் பேசிய ராகுல் காந்தி, ‘இந்திய மக்களை பேச அனுமதிக்கும் ஜனநாயக அமைப்புகள் மீது திட்டமிட்ட தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன’ என குற்றம்சாட்டினார்.இங்கிலாந்து சென்றுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கடந்த வெள்ளிக்கிழமை லண்டனில் தனியார் தொண்டு நிறுவன நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். இதைத் தொடர்ந்து, கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் கார்பஸ் கிரிஸ்டி கல்லூரி ஏற்பாடு செய்த ‘75வது வயதில் இந்தியா’ என்ற நிகழ்ச்சியில் ராகுல் நேற்று முன்தினம் இரவு … Read more

சிந்தாதிரிப்பேட்டையில் பாஜக நிர்வாகி பாலச்சந்தர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 ரவுடிகள் மீது வழக்குப்பதிவு

சென்னை : சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் பாஜக நிர்வாகி பாலச்சந்தர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 ரவுடிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாலச்சந்தரின் சகோதரி ஷர்மிளா அளித்த புகாரின் பேரில் ரவுடிகளான பிரதீப், சகோதரர் சஞ்சய், கலைவாணன் ஆகியோர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிந்தாதிரிப்பேட்டை தனிப்படை போலீசார் தலைமறைவாக உள்ள 3 ரவுடிகளையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சீனா விசா முறைகேடு விவகாரம் சிபிஐ.யின் குற்றச்சாட்டு நகைச்சுவையாக உள்ளது: கார்த்தி சிதம்பரம் அறிக்கை

புதுடெல்லி: ‘சீனர்களுக்கு முறைகேடாக விசா வாங்கி கொடுத்ததாக சிபிஐ என் மீது வழக்கு பதிவு செய்திருப்பது, நகைச்சுவையாக இருக்கிறது,’ என கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். கடந்த 2010- 2014ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது ப.சிதம்பரம் ஒன்றிய அமைச்சராக இருந்தார். அப்போது, அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம், பஞ்சாப் மாநிலம், மான்ஸா பகுதியில் மின் திட்ட பணிகளுக்காக 263 சீனர்களுக்கு சட்ட விரோதமாக விசா வாங்கி தருவதாக கூறி ரூ.50 லட்சம் தொகையை முறைகேடாக … Read more

6 நாட்களுக்கு பிறகு 2 ஆயிரத்துக்கு கீழ் பாதிப்பு குறைந்தது: குஜராத்தில் பிஏ.5 வைரஸ் தொற்று

புதுடெல்லி: நாட்டில் கடந்த 6 நாட்களுக்கு பிறகு கொரோனா தொற்று குறைந்து, நேற்று ஒரே நாளில் 1,675 பேருக்கு பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், வட கொரியாவில் மட்டும் கடந்த சில நாட்களில் லட்சக்கணக்கானோர் தொற்றினால் பாதித்துள்ளனர். தொற்று குறைந்தாலும், உருமாறிய பிஏ.4, பிஏ.5 வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இது தவிர, குரங்கு அம்மை என்ற மத்திய ஆப்ரிக்க நாடுகளில் காணப்படும் நோய் 12 நாடுகளை சேர்ந்த … Read more

மே-25: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24-க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

காஷ்மீரில் தொடரும் வெறி தீவிரவாதிகள் சுட்டு போலீஸ்காரர் பலி: 7 வயது மகளும் படுகாயம்

ஸ்ரீநகர்: காஷ்மீரில் தனது 7 வயது மகளை டியூசனுக்கு விட சென்ற போலீஸ்காரரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இதில், மகளும் படுகாயமடைந்தார். காஷ்மீரில் கடந்த சில நாட்களாக அரசு ஊழியர்கள், போலீஸ்காரர்கள், பொதுமக்களை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்கி வருகின்றனர். சில நாட்களுக்கு முன் தாசில்தார் அலுவலகத்தில் பணியாற்றி வந்த பண்டிட் பிரிவை சேர்ந்த ராகுல் பட் என்பவரை, தீவிரவாதிகள் அலுவலகத்தில் நுழைந்து சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவத்தை கண்டித்து பண்டிட் பிரிவை சேர்ந்த அரசு ஊழியர்கள் நேற்றும் … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,303,371 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63. 03 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,303,371 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 528,771,675 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 499,159,974 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 37,962 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அம்பேத்கர் மாவட்ட பெயரை நீக்கக் கோரி போராட்டம் ஆந்திரா அமைச்சர் அலுவலகத்துக்கு தீ: வாகனங்கள் மீது கல்வீச்சு, போலீஸ் தடியடி; கைது செய்து அழைத்து சென்ற பஸ் எரிப்பு

திருமலை: ஆந்திராவில் அம்பேத்கர் மாவட்ட பெயரை நீக்கக் கோரி நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது. நீர்பாசனத் துறை அமைச்சர் விஷ்வரூப் முகாம் அலுவலகம் சூறையாடி தீ வைத்து எரிக்கப்பட்டது. அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் இருந்த 13 மாவட்டங்களை பிரித்து கூடுதலாக 13 புதிய மாவட்டங்கள் ஏற்படுத்தப்பட்டது. அதில், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் இருந்த அமலாபுரத்தை மாவட்ட தலைநகராக வைத்து கோணசீமா மாவட்டம் உருவாக்கப்பட்டது. இந்த மாவட்டத்தின் பெயரை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் கோணசீமா மாவட்டம் … Read more