பெண் டாக்டர் தற்கொலை வழக்கு கணவருக்கு 10 ஆண்டு சிறை: கேரள நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் பரபரப்பு ஏற்படுத்திய ஆயுர்வேத மருத்துவ மாணவி விஸ்மயா தற்கொலை வழக்கில் கணவர் கிரண்குமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கேரள மாநிலம், கொல்லம் அருகே  உள்ள நிலமேல் பகுதியை சேர்ந்தவர் திரிவிக்ரமன் நாயர். இவரது மகள் விஸ்மயா (24). ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார். கடந்த 2020, மே 30ம் தேதி இவருக்கும் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த உதவி மோட்டார் வாகன ஆய்வாளர் கிரண் குமாருக்கும் (31) திருமணம் நடந்தது. … Read more

சொத்துகளை முடக்க போலீஸ் நடவடிக்கை நடிகர் விஜய் பாபு போலீசில் சரணடைய முடிவு

திருவனந்தபுரம்: மலையாள புதுமுக நடிகையை பலாத்காரம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில்  நடிகரும், தயாரிப்பாளருமான விஜய் பாபு போலீசின் பிடியில் சிக்காமல் துபாய்க்கு தப்பி  ஓடினார். விஜய் பாபுவை கைது செய்ய  கொச்சி போலீசார் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டனர். இதற்கிடையே அவர் துபாயில்இருந்து ஜார்ஜியா நாட்டுக்கு தப்பிச் சென்றார். இந்நிலையில் அடுத்தகட் டமாக விஜய் பாபுவின் சொத்துகளை முடக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து விஜய் பாபு போலீசில் சரணடைய தீர்மானித்துள்ளார். நேற்று கேரள உயர் நீதிமன்றத்தில் விஜய் … Read more

தமிழகத்தில் 59 பேருக்கு கொரோனா

சென்னை: தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில்  நேற்று 12,612 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 59 பேருக்கு  தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வீட்டுத் தனிமை மற்றும்  மருத்துவமனையில் 354 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று  சிகிச்சை பெற்று வந்த 36 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தமிழகத்தில்  கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 34,16,605 ஆக  உயர்ந்துள்ளது. மேலும், நேற்று சிகிச்சை பலனின்றி ஒருவர் … Read more

யானை தந்தங்கள் கைப்பற்றிய விவகாரம் நடிகர் மோகன்லால் வழக்கில் உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு

திருவனந்தபுரம்: நடிகர் மோகன்லாலின் வீட்டில் யானை தந்தங்கள் கைப்பற்றப்பட்டது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் பெரும்பாவூர் நீதிமன்றத்தின் உத்தரவை கேரள உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன் பிரபல மலையாள நடிகர் மோகன்லாலின் கொச்சி, சென்னை, திருவனந்தபுரம் உள்பட பல்வேறு இடங்களில் உள்ள வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். இதில் கொச்சியிலுள்ள வீட்டிலிருந்து 2 யானை தந்தங்கள் கைப்பற்றப்பட்டன. அவற்றை வருமானவரித் துறையினர் பெரும்பாவூர் வனத்துறையிடம் ஒப்படைத்தனர். … Read more

பினராயி விஜயன் பிறந்தநாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு டிவிட்டரில் நேற்று பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளதாவது:கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். பிளவுபடுத்தும் சக்திகளுக்கு எதிராக போராடவும், நாட்டின் ஒற்றுமைக்காக கேரளா தனது வலிமையைக் காட்டவும் வாழ்த்துகள். இவ்வாறு கூறியுள்ளார்.

ஜார்க்கண்ட் முதல்வருக்கு எதிரான சுரங்க முறைகேடு வழக்கு விசாரணைக்கு உகந்ததா? உயர் நீதிமன்றம் முடிவு எடுக்க உத்தரவு

புதுடெல்லி: ஜார்கண்ட் மாநிலத்தில் சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததிலும், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் அதற்கு உண்டான நிதியை போலி நிறுவனங்களுக்கு சட்ட விரோதமாக பரிமாற்றம் செய்ததிலும் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கிடையே, உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகளை தள்ளுபடி செய்யக்கோரி ஹேமந்த் சோரன் மற்றும் ஜார்க்கண்ட் மாநில அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு … Read more

3 மணி நேரம் ஓடும் விக்ரம்

சென்னை: கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ள படம், விக்ரம். மாஸ்டர் படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் ஜூன் 3ம் தேதி திரைக்கு வருகிறது. இது  2 மணி மற்றும் 53 நிமிடங்கள் ஓடும் படமாக உருவாக்கப்பட்டுள்ளது. ஜூன் 2ம் தேதி மாலை 6.30 மணிக்கு அமெரிக்காவில் முதல் காட்சி திரையிடப்படுகிறது.

மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியீடு: திருப்பதி தேவஸ்தானம் தகவல்

திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மூத்தகுடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தீராத நோய்வாய்ப்பட்டவர்கள் கோயிலில் அருகே உள்ள சிறப்பு வாயில் வழியாக உள்ள வரிசையில் அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்காக, ஜூன் மாதத்திற்கான இலவச டிக்கெட்டுகள் ஆன்லைனில் நாளை(இன்று) பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. இந்த டிக்கெட் பெற்றவர்கள் தினமும் காலை 10 மணிக்கு தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில், வருகிற 1ம் தேதி முதல் காலை 10 மணிக்கு … Read more

மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்கிறார் டி.ஆர்.: சிம்பு அறிக்கை

சென்னை:நடிகரும் இயக்குனருமான டி.ராஜேந்தருக்கு சில நாட்களுக்கு முன் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் போரூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், இதயத்துக்கு செல்லக் கூடிய ரத்த குழாய், வால்வுகளில் அடைப்பு இருப்பதாக கண்டறிந்தனர். அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டும் வருகிறது. இதுகுறித்து நடிகர் சிம்பு வெளியிட்ட அறிக்கையில், ‘அப்பா இப்போது நலமாக உள்ளார்.  வயிற்று பகுதியில் லேசான ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் டாக்டர்கள் அறிவுரைப்படி அவரை சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்து செல்கிறோம்’ என்றார். மேல் சிகிச்சைக்காக … Read more

டெண்டர்களுக்கு ஒப்புதல் அளிக்க ஒரு சதவீதம் கமிஷன் கேட்ட பஞ்சாப் அமைச்சர் டிஸ்மிஸ்: முதல்வர் பகவந்த் அதிரடி நடவடிக்கை கைது செய்து சிறையிலும் அடைத்தார்

புதுடெல்லி: பஞ்சாப்பில் டெண்டர்களுக்கு ஒப்புதல் அளிக்க ஒரு சதவீதம் கமிஷன் கேட்ட சுகாதாரத் துறை அமைச்சரை அதிரடியாக டிஸ்மிஸ் செய்த முதல்வர் பகவந்த் மான், அவரை கைது செய்து சிறையிலும் அடைத்தார். பஞ்சாப்பில் சில மாதங்களுக்கு முன் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இக்கட்சியின் எம்பி.யாக இருந்த பகவந்த் மான், முதல்வராக பதவியேற்றார். ஊழலுக்கு எதிராக இவர் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இவருடைய அமைச்சரவையில் சுகாதாரத் … Read more