மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் ஊராட்சி செயலாளர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது

திருச்சி: மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் ஊராட்சி செயலாளர் வெங்கட்டராமனை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்துள்ளனர். ஒப்பந்ததாரர் இஸ்மாயிலிடம் ரூ.4 லட்சம் காசோலையை விடுவிக்க ரூ.6 லட்சம் பெற்றபோது கைது செய்யப்பட்டார்.

தொழிலதிபரின் காரை சேதப்படுத்தி காங். எம்எல்ஏவின் மகன் போதையில் ரகளை

போபால்: மத்திய பிரதேசத்தில் தொழிலதிபரின் காரை சேதப்படுத்தி போதையில் ரகளையில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்எல்ஏவின் மகன் ரோஹ்தாஷ் சிங் மீது போலீசார் வழக்குபதிந்துள்ளனர். மத்திய பிரதேச மாநில முன்னாள் காங்கிரஸ் அமைச்சரும், எம்எல்ஏவுமான ஹுக்கும் சிங் கரடாவின் மகன் ரோஹ்தாஷ் சிங், போபால் – இந்தூர் நெடுஞ்சாலையில் காரில் சென்று சென்று கொண்டிருந்தார்.  அப்போது இந்தூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் கார் மீது அவரது கார் மோதியது. அதிர்ச்சியடைந்த தொழிலதிபர், காரை சரியாக ஓட்டிச் செல்லும்படி ரோஹ்தாஷ் … Read more

ஐபிஎல் 2022 குவாலிபயர் 1: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சு தேர்வு

கொல்கத்தா: இன்று ஐபிஎல் 2022-க்கான குவாலிபயர் 1 போட்டி தொடங்கியது. இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. இதையடுத்து ராஜஸ்தான் அணி களமிறங்க உள்ளது. இதில் வெற்றி பெறும் அணி குவாலிபயர் 2-க்கு தேர்வாக உள்ளது. இந்த போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.

ஓட்டலில் ரூம் போட்டு சரக்கு அடித்துவிட்டு 40 வயது காதலியுடன் 61 வயது முதியவர் ‘செக்ஸ்’: திடீரென மூச்சு நின்று போனதால் மரணம்

மும்பை: மும்பையில் ஓட்டல் ஒன்றில் தனது 40 வயது காதலியுடன் செக்ஸ் வைத்துக் கொண்ட 61 வயது முதியவருக்கு, திடீரென மூச்சு நின்று போனதால் இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் வொர்லி பகுதியில் வசிக்கும் 61 வயது தனியார்  நிறுவன ஊழியர், தனது காதலியான 40 வயது பெண்ணுடன் புறநகரான குர்லாவில் உள்ள  ஓட்டலுக்கு சென்றார். இவர்கள், அந்த ஓட்டலில் ரூம் எடுத்து  தங்கியிருந்தனர். இந்நிலையில் நேற்று இருவரும் ஓட்டல் ரூமில் உல்லாசமாக … Read more

ஐபிஎல் 2022 குவாலிபயர் 1: குஜராத் அணிக்கு 189 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது ராஜஸ்தான் அணி..!

கொல்கத்தா: இன்று ஐபிஎல் 2022-க்கான குவாலிபயர் 1 போட்டியில் குஜராத் அணிக்கு 189 ரன்களை வெற்றி இலக்காக ராஜஸ்தான் அணி நிர்ணயம் செய்தது.  20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து ரன்களை குவித்தது. இதையடுத்து குஜராத் அணி களமிறங்க உள்ளது.

சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி ரத்து: ஒன்றிய அரசு அறிவிப்பு

டெல்லி: சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி ரத்து செய்யப்படுவதாக ஒன்றிய அரசு  அறிவித்துள்ளது. ஆண்டுக்கு 20 லட்சம் மெட்ரிக் டன் வீதம் கச்சா சோயா எண்ணெய், கச்சா சூரியகாந்தி எண்ணெயை வரியின்றி இறக்குமதி செய்யலாம் என ஒன்றிய அரசு கூறியுள்ளது.

ஆருத்ரா நிறுவனத்துக்கு சொந்தமான 26 இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.3.41 கோடி பறிமுதல்

திருவண்ணாமலை: ஆருத்ரா நிறுவனத்துக்கு சொந்தமான 26 இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.3.41 கோடி பறிமுதல்  செய்யப்பட்டுள்ளது. 60 சவரன் தங்க நகைகள், 44 செல்போன்கள், 6 லேப்டாப்கள், 48 கணினி ஹார்டு டிஸ்க்குகளை பறிமுதல் செய்துள்ளனர். முதலீட்டாளர்களின் பணம் டெப்பாசிட் செய்யப்பட்டுள்ள 11 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. ஆருத்ரா நிறுவனங்களின் இயக்குனர்களான பாஸ்கர், மோகன்பாபு, உஷா, ஹரிஷ் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நீட் தேர்வுக்கான விண்ணப்பங்களில் திருத்தம் இருப்பின் மே 27-க்குள் மேற்கொள்ளலாம்: தேசிய தேர்வு முகாமை அறிவிப்பு

டெல்லி: நீட் தேர்வுக்கான  விண்ணப்பங்களில் திருத்தம் இருப்பின் மே 27-க்குள் மேற்கொள்ளலாம் என தேசிய தேர்வு முகாமை அறிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் www.neet.nic.in என்ற இணையதளத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் ஹால் டிக்கெட் வெளியீடு, தேர்வு மைய விபரங்கள் போன்றவை பின்னர் வெளியிடப்படும் என தேர்வு முகாமை கூறியுள்ளது.

ரூ.750 செலுத்தினால், நாடெங்கும் பேருந்து மற்றும் ரயில்களில் இலவசமாக பயணிக்கலாம்: ஜெர்மனி அரசு அசத்தல்

பெர்லின்: ஒரு மாதத்திற்கு கட்டணமாக ரூ.750 செலுத்தினால், நாடெங்கும் பேருந்து மற்றும் ரயில்களில் இலவசமாக பயணித்துக்கொள்ளும் வகையிலான புதிய திட்டத்தை ஜெர்மனி அரசு அறிமுகம் செய்துள்ளது. மேலும் ஆகஸ்ட் இருந்து வரை இத்திட்டம் அமலில் இருக்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலை கடுமையாக அதிகரித்துள்ளதால் பொது போக்குவரத்தை அதிக மக்கள் பயன்படுத்துவதற்கு ஏதுவாக இவ்வாறு செய்யப்பட்டுள்ளதாக அரசு சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது

கொரோனா இறப்புகள் தொடர்காக உலக சுகாதார அமைப்பின் புள்ளி விபரங்கள் குழப்புகிறது!: ஒன்றிய அமைச்சர் அதிருப்தி

புதுடெல்லி: கொரோனா இறப்புகள் தொடர்பாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட புள்ளி விபரங்கள் குழப்பத்தை ஏற்படுத்துகிறது என்று ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா அதிருப்தி தெரிவித்தார். உலக சுகாதார அமைப்பின் 75வது ஆலோசனை கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. அப்போது ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேசுகையில், ‘இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா இறப்புகள் தொடர்பாக சமீபத்தில் உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட புள்ளி விபரங்கள் குழப்பம் அளிப்பதாக உள்ளன. இந்தியாவின் … Read more