தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 105 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவு

சென்னை: தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 105 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. கரூர் பரமத்தி. மதுரை விமான நிலையம், கடலூரில் தலா 104 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது. திருத்தணி, வேலூரில் தலா 103, நுங்கம்பாக்கம், தஞ்சை, திருச்சியில் 102 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டத்தில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தை: அறுவை சிகிச்சையில் ஆச்சரியம்

கர்நாடக: கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டத்தில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்துள்ளது. சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுகா தடசா கிராமத்தில் ஆரிஸ், அல்மாஜ் பானு தம்பதி வசித்து வருகின்றனர் . அல்மாஜ் பானுக்கு நேற்று அதிகாலை திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அல்மாஜ் பானுவை அவரது குடும்பத்தினர் திலக் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவருக்கு திடீரென்று ரத்தபோக்கு ஏற்பட்டது. இதனால் அறுவை சிகிச்சை … Read more

சீனர்களுக்கு விசா பெற்றுத் தந்த விவகாரத்தில் எனக்கு தொடர்பு இல்லை: கார்த்தி சிதம்பரம்

சென்னை: சீனர்களுக்கு விசா பெற்றுத்தந்த விவகாரத்தில் நான் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஈடுபடவில்லை என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துளளார். என்தந்தையை குறிவைத்து என் மீது குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது என அவர் கூறியுள்ளார்.

இடுப்புவலியால் தவித்த மனைவிக்காக ஸ்கூட்டார் வாங்கிய பிச்சைக்கார முதியவர்: தள்ளாத வயதிலும் மாறாதா காதல் என நெட்டிசன்கள் நெகிழ்ச்சி

போபால் : இந்த உலகில் அழகான மொழி என்றால் அது அன்பு என்ற மொழி மட்டும் தான் அன்பு யாரை வேண்டுமானாலும் அடைத்து வைக்கும் அதன் சிறைக்குள் அத்தகைய மாசற்ற அன்புக்கும், காதலுக்கும் இலக்கணமாக திகழ்கிறார் மத்திய பிரதேசத்தை ஒரு பிச்சைக்கார முதியவர். மத்திய பிரதேசம் சிந்த்வாராவில் தெருக்கள் தோறும் நடந்து சென்று யாசகம் எடுத்து பிளைத்து வருகிறார் சந்தோஷ் குமார். இந்த மாற்று திறனாளி முதியவர் தன்னுடன் வீதிவீதியாக நடந்து வரும் மனைவி முன்னிக்கு கடும் … Read more

சிகிச்சைக்காக தந்தை டி.ராஜேந்திரரை வெளிநாடு அழைத்து செல்ல உள்ளதாக அவரது மகன் சிம்பு அறிக்கை

சென்னை: சிகிச்சைக்காக தந்தை டி.ராஜேந்திரரை வெளிநாடு அழைத்து செல்ல உள்ளதாக அவரது மகன் சிம்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். வயிற்றில் சிறிய ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதால் உயர் சிகிச்சை தரவேண்டும் என மருத்துவர்கள் அறிவுரை கூறினார்கள் என்றும் டி,ராஜேந்தர் முழு சுய நினைவுடன் நலமாக உள்ளார் என்றும் சிம்பு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நடக்கும் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற முடியும் என அஸ்வின் நிரூபித்துள்ளார்: முன்னாள் கேப்டன் புகழாரம்

மும்பை: நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அதிரடி ஆல்ரவுண்டராக தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாடி வருகிறார். இந்தியாவின் சுழற்பந்துவீச்சு நாயகனாக மிளிரும் அஸ்வின் இந்த ஐபிஎல் தொடரில் 3, 4-வது விக்கெட்டுக்கு களமிறங்கி பேட்டிங்கிலும் சிறப்பாக விளையாடியுள்ளார். குறிப்பாக சென்னை அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் 23 பந்தில் 43 ரன்கள் எடுத்து ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் சாதித்து வரும் அஸ்வின் குறித்து … Read more

இந்தியாவில் சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை ஆக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சேலம்:  இந்தியாவில் சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை ஆக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நிதி நெருக்கடியில் இருந்த தமிழ்நாடு இப்போது மீண்டும் வந்து கொண்டிருக்கிறது என்றும் தமிழ்நாட்டை தலைசிறந்த மாநிலமாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். 

அரசு ஒப்பந்தங்களுக்கு 1% கமிஷன் கேட்ட புகாரில் பதவி நீக்கம் செய்யப்பட்ட பஞ்சாப் சுகாதார அமைச்சர் விஜய் சிங்கலா கைது

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் சிங்கலா ஊழல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். அரசு ஒப்பந்தங்களுக்கு 1 சதவிகிதம் கமிஷன் கேட்டதாக புகார் எழுந்த நிலையில் ஆதாரங்கள் கிடைத்ததால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் பெருபான்மை பலத்துடன் ஆம் ஆம்தி கட்சி வெற்றி பெற்றது.இதனையடுத்து, முதல்வராக பகவந்த் மான் தேர்வு செய்யப்பட்டார். முதலமைச்சராக பதவி ஏற்றதுமே, அமைச்சர்கள் பற்றி ஊழல் புகார் தெரிவிக்கலாம். ஊழல் புகார் … Read more

சாதி மறுப்பு திருமணம் செய்த ஜோடிகளை வீடு புகுந்து தாக்கிய வழக்கில் பெண்ணின் பெற்றோருக்கு ஜாமீன்: ஐகோர்ட் கிளை

கரூர்: சாதி மறுப்பு திருமணம் செய்த ஜோடிகளை வீடு புகுந்து தாக்கிய வழக்கில் பெண்ணின் பெற்றோருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. சாதி மறுப்பு திருமணம் செய்த ஜோடிகளை எந்த தொந்தரவும் செய்யப்பட்டோம் என உறுதி அளித்ததால் நிபந்தனை ஜாமின் ஐகோர்ட் கிளை வழங்கியது. கரூரை சேர்ந்த கார்த்திக், கோமதி தம்பதியை தாக்கிய பெற்றோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். பெண்ணின் பெற்றோர் திங்கள், சனிக்கிழமைகளில் காவல் நிலையத்தில் கையெழுத்திட ஐகோர்ட் கிளை உத்தரவிடப்பட்டுள்ளது.

அடுத்த 20,30 ஆண்டுகளுக்கு பாஜகவைமையப்படுத்தி இந்திய அரசியல் இருக்கும்: பிரஷாந்த் கிஷோர்

டெல்லி: பாரதிய ஜனதா கட்சியை யார் ஆதரித்தாலும், எதிர்த்தாலும் அடுத்த 20 முதல் 30 ஆண்டுகளுக்கு அக்கட்சியை மையப்படுத்தியே இந்தியாவின் அரசியல் இருக்கும் என்று தேர்தல் வியூக நிபுணர் பிரஷாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். பிரஷாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணைவார் என தகவல் வெளியான நிலையில் 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலில் அக்கட்சிக்கான வெற்றி வியூகத்தையும் அவர் வகுத்து அளித்தார். ஆனால் காங்கிரசில் இணையும் திட்டத்தை பிரஷாந்த் கிஷோர் கைவிட்டார். பின்னர் தனி இயக்கம் தொடங்குவதாக தெரிவித்த … Read more