கரூர் மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

ரூர்: கரூர் மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. கரூர் மாரியம்மன் கோயில் கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் விழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அபிஷேக டிக்கெட் பெற்றுத்தருவதாக கூறி ‘கூகுள் பே’ மூலம் ரூ.4.5 லட்சம் மோசடி: புரோக்கருக்கு வலை

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அபிஷேக டிக்கெட் பெற்றுத்தருவதாக கூறி பக்தர்களிடம் ‘கூகுள் பே’ மூலம் ₹4.5 லட்சம் மோசடி செய்த புரோக்கரை போலீசார் தேடி வருகின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வாரம்தோறும் வெள்ளிக்கிழமையன்று அபிஷேக சேவை நடைபெறுகிறது. இந்த சேவையின்போது சுமார் 40 நிமிடம் மூலவர் சன்னதி அருகே அமர்ந்து தரிசனம் செய்யலாம். இந்த சேவையில் பங்கேற்க பக்தர்கள் அதிகளவில் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் இந்த டிக்கெட்கள் தற்போது குலுக்கல் முறையில் ஒருவருக்கு ஒன்று என்ற … Read more

பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புத்தகம் அனுப்பி வைப்பு

சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புத்தகம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அம்பேதகர் எழுதிய riddles in hinduism என்ற புத்தகம் அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாணவர் அமைப்பான முற்போக்கு மாணவர் கழகம்  அனுப்பியுள்ளது. புத்தகம் குறித்து அண்ணாமலையுடன் விவாதிக்க தயாராக உள்ளோம் என்று விசிகவின் மாணவர் அமைப்பு தெரிவித்துள்ளது.   

ம.பி.யில் மோசமான வானிலையால் மின் விநியோகம் துண்டிப்பு!: ரோப் காரில் அந்தரத்தில் தொங்கிய பக்தர்கள்.. திக் திக் காட்சி வெளியீடு..!!

போபால்: மத்தியப்பிரதேசத்தில் மோசமான வானிலையில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டதால் ரோப் காரில் சென்ற பக்தர்கள் அந்தரத்தில் தொங்கிய காட்சி வெளியிடப்பட்டுள்ளது. வட மாநிலங்களில் தற்போது பனிப்பொழிவு நிலவி வருகிறது. இமாச்சலப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடும் பனிபொழிவால் சாலைகள், வீடுகள், பனிப்போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கிறது. பரலாட்சா கடவாய் மற்றும் அதன் அருகில் உள்ள இடங்களில் ஏற்பட்டுள்ள கடும் பனி பொழிவு காரணமாக லாஹூல் மற்றும் ஸ்பீதியில் நெடுஞ்சாலைகள் மூடப்பட்டு உள்ளன. இதேபோல் பிரபல சுற்றுலாத் … Read more

இந்தியாவின் தூய்மையான விமான நிலையங்களில் மதுரை விமான நிலையத்துக்கு முதலிடம்

மதுரை: நாட்டின் தூய்மையான விமான நிலையங்களில் மதுரை விமான நிலையத்துக்கு முதலிடம் கிடைத்துள்ளது. பயணிகளின் சேவைத்தர மதிப்பீட்டில் மதுரைக்கு 4வது இடம் கிடைத்துள்ளது.

கேரளாவில் வரதட்சணை கொடுமையால் பெண் டாக்டர் விஸ்மயா தற்கொலை வழக்கில் குற்றவாளியான கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை!!

திருவனந்தபுரம் : கேரளாவில் வரதட்சணை கொடுமை வழக்கில் விஸ்மயா கணவர் கிரண்குமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் கொல்லம் அருகே நிலமேல் பகுதியை சேர்ந்தவர் திரிவிக்ரமன் நாயர். அவரது மகள் விஸ்மயா (24). அந்த பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் ஆயுர்வேத மருத்துவம் இறுதியாண்டு படித்தார். இந்த நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இவருக்கும், கொல்லம் அருகே போருவழி பகுதியை சேர்ந்த ஆர்டிஓ இன்ஸ்பெக்டரான கிரண்குமாருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்தின்போது 100 … Read more

கேரளா வரதட்சணை கொடுமை வழக்கில் விஸ்மயா கணவர் கிரண்குமாருக்கு 10 ஆண்டு சிறை

கேரளா : கேரளா வரதட்சணை கொடுமை வழக்கில் விஸ்மயா கணவர்  கிரண்குமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை கொல்லம் நீதிமன்றம் விதித்தது. கிரண்குமாருக்கு கொல்லம் கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி கே.என்.சுஜித் தண்டனையை அறிவித்தார். ரூ.12.50 லட்சம் அபராதம் விதித்ததுடன் அதில் ரூ.2 லட்சத்தை பெண்ணின் பெற்றோருக்கு  தரவும் ஆணை பிறப்பித்துள்ளது.

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!!

திருவனந்தபுரம் : கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாள் வாழ்த்தினை தெரிவித்துள்ளார். கேரளாவின் முதல்வர் பினராயி  விஜயன் இன்று தனது 77 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கேரளாவில் இரண்டாவது முறையாக ஆட்சியை தக்க வைத்து இந்தியாவில் இடதுசாரிகள் ஆளும் ஒரே மாநிலம் என்ற பெருமையை தன் வசப்படுத்தியவர் பினராயி  விஜயன். இவர் இன்று பிறந்த நாள் கொண்டாடும் நிலையில் அவருக்கு அரசியல் தலைவர்கள் பலர் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தமிழக முதல்வர் … Read more

2 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை ரயில் நிலையத்தின் 6-வது நடைமேடை புதுப்பொலிவு பெற்றுள்ளது

மதுரை: 12 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை ரயில் நிலையத்தின் 6-வது நடைமேடை மீண்டும் செயல்பாட்டுக்கு வருகிறது. மதுரை – தேனி பயணிகள் ரயில் சேவை மீண்டும் தொடங்கவுள்ள நிலையில் நடைமேடை புதுப்பொலிவு பெற்றுள்ளது என்று தெரிவித்துள்ளனர். 

ஹேமந்த் சோரனுக்கு எதிரான பொதுநல மனுக்கள் விசாரணைக்கு உகந்ததா என முடிவு செய்ய உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

டெல்லி: ஹேமந்த் சோரனுக்கு எதிரான பொதுநல மனுக்கள் விசாரணைக்கு உகந்ததா என முடிவு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. சுரங்க ஒப்பந்த புகார்கள் பற்றி முதலில் முடிவு செய்ய ஜார்கண்ட் ஐகோர்ட்க்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.