தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சிறப்பாக உள்ளதாக எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு டிஜிபி பதில்

சென்னை: தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சிறப்பாக உள்ளதாக எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு டிஜிபி பதில் அளித்துள்ளார். கஞ்சா வேட்டையில் கைதான 20,000 பேர் மீண்டும் குற்றம் செய்தால் குண்டாஸ் பாயும் எனவும் டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

தேசிய பங்குச்சந்தை தொடர்பாக சித்ரா ராமகிருஷ்ணாவிடம் அமலாக்கத்துறை விசாரணை

டெல்லி: தேசிய பங்குச்சந்தை தொடர்பாக முன்னாள் தலைமை செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணாவிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துகிறது. திகார் சிறையில் இருக்கும் சித்ரா ராமகிருஷ்ணாவிடம் 2ம் நாளாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தினர்.

மும்பை தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக தேடப்பட்டு வரும் தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் உள்ளதாக தகவல்

இஸ்லாமாபாத்: மும்பை தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக தேடப்பட்டு வரும் தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் உள்ளதாக உறவினர் தகவல் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் கராச்சி நகரில் தாவூத் பதுங்கி உள்ளதாக அவரது சகோதரி ஹசீனா மகன் அலிஷா பார்க்கர் தகவல் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் தனியார் பேருந்து மற்றும் லாரி நேருக்கு நேர் மோதிக் கொண்ட சாலை விபத்தில் 9 பேர் பலி…26 பேர் படுகாயம்!!

பெங்களூரு : கர்நாடகாவில் தனியார் பேருந்து மற்றும் லாரி நேருக்கு நேர் மோதிக் கொண்ட சாலை விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் 26 பேர் படுகாயம் அடைந்தனர். ஹுப்பிளி மாவட்டத்தின் வெளியே அமைந்துள்ள பெங்களூர் புனே தேசிய நெடுஞ்சாலையில் தானேபுரம் என்ற பகுதியில் விபத்து நடந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் இருந்து தனியார் சொகுசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றுக் கொண்டு பெங்களூரு நகரை நோக்கி சென்று கொண்டு இருந்த போது, தானேபுரம் … Read more

காட்பாடி அருகே அடகுக் கடையின் சுவற்றில் துளையிட்டு ரூ.75 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை

வேலூர்: காட்பாடி அருகே அடகுக் கடையின் சுவற்றில் துளையிட்டு ரூ.75 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. சேர்காடு கூட்டு சாலையில் இந்துமதி என்பவரின் அடகு கடையின் சுவற்றில் துளையிட்டு கைவரிசையில் ஈடுபட்டுள்ளனர். அடகு கடையில் 30 கிலோ வெள்ளி, 93 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றது யார் என போலீஸ் விசாரித்து வருகிறார்கள் .

தமிழகத்தில் இருந்து ஆந்திரா வழியாக கர்நாடகாவுக்கு ரேஷன் அரிசி கடத்துவதை தடுக்கவேண்டும்: சந்திரபாபு நாயுடு

ஆந்திரா: தமிழகத்தில் இருந்து ஆந்திரா வழியாக கர்நாடகாவுக்கு ரேஷன் அரிசி கடத்துவதை தடுக்கவேண்டும் என்று சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தி உள்ளார். வாணியம்பாடி, தும்பேரி பேர்ணாம்பட்டு வழியாக அதிக அளவில் ரேஷன் அரிசி கடத்தப்படுகிறது என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். 16 மாதத்தில் 13 வழக்குகள் தனது குப்பம் தொகுதியில் பதிவாகி உள்ளதாகவும் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இருந்து ரேஷன் அரிசி கடத்துவதை தடுக்க வேண்டும் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு!!

சென்னை : தமிழகத்தில் இருந்து ஆந்திரா வழியாக கர்நாடகாவிற்கு ரேஷன் அரிசி கடத்துவதை தடுக்க வேண்டும் என்று ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் இதனை வலியுறுத்தி உள்ளார்.வாணியம்பாடி தும்பேரி, பேர்ணாம்பட்டு வழியாக அதிக அளவில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

இந்தியாவில் ஒரே நாளில் 1,675 பேருக்கு கொரோனா… 31 பேர் பலி…1.635 பேர் குணமடைந்தனர்!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 1,675 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,31,40,068 ஆக உயர்ந்தது.* புதிதாக 31 பேர் இறந்துள்ளனர்.* இதனால், … Read more

மேட்டூர் அணையை இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார்!!

சேலம் : குறுவை சாகுபடிக்காக சேலம் மாவட்டம் மேட்டூர் அணையை  இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார். வழக்கமாக ஜூன் மாதத்தில் திறக்கப்படும் நிலையில் முதல் முறையாக மே மாதத்திலேயே அணை திறக்கப்படுகிறது. நமது நாடு சுதந்திரம் அடைந்தது முதல், குறுவை சாகுபடிக்காக நீர் திறந்து விடப்படும் நாளாகிய ஜூன் 12ஆம் நாள் அல்லது அதற்கு முன்பாக, தொடர்ந்து மூன்று ஆண்டுகள் நீர் திறந்து விடப்படுவது இது இரண்டாவது முறையாகும். இதனால், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், … Read more

கியூட் தேர்வுக்கு மொத்தமாக 11.51 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் : தேசிய தேர்வு முகமை

டெல்லி : கியூட் (CUET) தேர்வுக்கு மொத்தமாக 11.51 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. நாடு முழுவதிலும் உள்ள 42 மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளுக்கு கியூட் ( எனப்படும் தேசிய பொது நுழைவுத் தேர்வு ஜூலை முதல் வாரத்தில் நடைபெறுகிறது.